Select Page

Children being stolen now integrate

Top of Form

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/l/t1.0-1/p50x50/14333843_1100328483337150_1644887555750672479_n.jpg?oh=518ec7eac9e4d1f7ae36e4ce41ee7324&oe=588642D7

Gnani was live.

4 hrs ·

https://www.facebook.com/rsrc.php/v3/yB/r/-pz5JhcNQ9P.png

 

எச்சரிக்கை!

சென்னையில் வலம் வரும் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்!

உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

——-திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,

(முன்னாள் காவல்துறை அதிகாரி)

தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)

சில நாட்களுக்கு முன்பு எட்டு மாதமே ஆன ஒரு குழந்தை சென்னை திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே பிளாட்பார்மில் பெற்றோர்களுடன் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திருடப்பட்டுள்ளது. இதே போன்று சென்ற மாதம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு பெண் குழந்தை திருடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இவ்வாறு தினமும் இரண்டு குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் காணாமல் போய் விடுகிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சி செய்தி.

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் முடிய இந்த மூன்று மாதத்தில் மட்டுமே 271 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அவற்றில் சென்னையில் மட்டுமே காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை 58.

இந்த குழந்தைகள் எப்படி தொலைந்து போகிறார்கள்?

தொலைந்து போகும் குழந்தைகள் எங்கே போகிறார்கள்?

இதற்கு பின்னணியில் இருப்பது யார்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் விடை தெரிந்தே ஆக வேண்டும்.

கடத்தப்படும் குழந்தைகளை ஊனப்படுத்தி அவர்களை பிச்சை எடுக்க வைத்து சம்பாதிக்கும் கூட்டம் இந்தியா முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் காணாமல் போன தனது குழந்தை பஞ்சாபில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார்

அந்தக் குழந்தையின் கைகள் சமூக விரோதிகளால் வெட்டப்பட்டிருந்தது. பொது மக்கள் இரக்கப்பட்டு அதிகப் பணத்தை பிச்சையாக போட வேண்டும் என்பதற்காக இந்த கொடிய செயலை சமூக விரோதிகள் செய்திருந்தார்கள்.


இந்தியாவில் மும்பை, டெல்லி, கல்கத்தா முதலிய நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கடத்தப்படும் பெண் குழந்தைகளில் பலர் இந்த விடுதிகளில் விற்கப்பட்டு விபச்சாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். 2014 ம் வருடம் இந்தியாவில் 67,000 குழந்தைகள் காணாமல் போனார்கள் அதில் 30,000 பெண் குழந்தைகள் விபச்சார தொழிலுக்கு தள்ளப்பட்டது தெரிய வந்தது.

உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்காகவும் குழந்தைகள் கடத்தப்படுவதுண்டு. குழந்தைகளின் கண்கள் மற்றும் கிட்னிகள் 10,000 முதல் 50,000 டாலர் வரை விற்கமுடியும். அதனால் சில கடத்தப்படும் குழந்தைகளின் உறுப்புக்கள் எடுக்கப்பட்டு அது வியாபார பொருளாகவும் ஆக்கப்படுகின்றன.

கடத்தப்படும் சில குழந்தைகளை நரபலி கொடுக்கப்படுவதும் உண்டு. உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு தம்பதியினர் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 6 வயது பெண் குழந்தையை கடத்தி நரபலி கொடுத்த சம்பவமும் நம் நாட்டில் நடந்துள்ளது.

கடத்தப்படும் சில குழந்தைகளை நம் நாட்டிலுள்ள சில அனாதை இல்லங்கள் பணம் கொடுத்து வாங்கி வெளிநாட்டிலிருந்து பெரும் தொகையை பெற்றுக் கொண்டு தத்துக் கொடுத்த சம்பவமும் நம் நாட்டில் நடந்துள்ளது.

டோலே என்ற நம் நாட்டிலிருந்த சிறுவன் வெளிநாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்டு, அவன் வளர்ந்து பெரியவனானதும் இந்தியாவிலிருந்த தன் பெற்றோர்களை கண்டுபிடித்தான், அவனை மீட்க அவனது பெற்றோர்கள் இன்று வரை வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தை கடத்தலைத் தடுக்க அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

  1. அமெரிக்காவில் குழந்தை பிறந்தவுடன் ஒவ்வொரு மருத்துமனையிலும் அந்தக் குழந்தைகளின் கைரேகையை பதிவு செய்கிறார்கள். ஒரு வேளை வருங்காலத்தில் அந்தக் குழந்தைகள் தொலைந்து விடும் பட்சத்தில் கைரேகையை வைத்து அந்தக் குழந்தைகளை எளிதில் மீட்டு விடுகிறார்கள்.
  2. இந்தியா முழுவதும் பிச்சை எடுப்பதை அரசாங்கம் உடனே தடை செய்ய வேண்டும். இதனால் பிச்சை எடுப்பதற்காக குழந்தைகள் கடத்தப்படுவது பெருமளவில் குறையும்.
  3. இந்தியா முழுவதும் விபச்சார தொழில் உடனே தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் விபச்சாரத்திற்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதும் பெருமளவில் குறையும்.
  4. இந்தியாவிலுள்ள அனாதை இல்லங்கள் பெரிய அளவில் பணம் வாங்கி கொண்டு குழந்தைகளை வெளிநாட்டினருக்கு தத்து கொடுப்பதை தடை செய்யும் சட்டத்தை அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் . இந்த சட்டத்தை மீறும் அனாதை இல்லங்களின் உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.
  5. குழந்தைகளை வைத்து யாராவது பிச்சையெடுத்தால் உடனே போலீசார் அந்தக் குழந்தை எங்கிருந்து கடத்தப்பட்டது என்பதை கண்டு பிடித்து உரிய பெற்றோரிடம் அந்தக் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். எத்தனையோ பெண்கள் சென்னையின் சிக்கனலில் சிறு குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெரும்பாலோர் கடத்தப்பட்ட குழந்தைகளே! இதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெற்றோர்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:

  6. எப்போதும் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் மீது உங்கள் கவனம் இருக்க வேண்டும்.
  7. அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சொல்லித் தர வேண்டும்.
  8. யார் கேட்டாலும் தங்கள் பெயர் முகவரி கைபேசி எண்ணை சொல்லுமளவிற்கு உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பயிற்சியளிக்க வேண்டும்.
  9. உங்கள் குழந்தையின் கைரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் குழந்தை தொலைந்து விடும் பட்சத்தில் பல ஆண்டுகள் கழித்து கூட உங்கள் குழந்தையை உங்களால் கண்டு பிடிக்க முடியும்.
  10. உங்கள் குழந்தையின் தலை முடியை தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை தொலைந்து விடும் பட்சத்தில் டி.என்.ஏ டெஸ்ட் மூலம் உங்கள் குழந்தையை கண்டு பிடிக்க இது உதவும்.

    6.நீங்கள் ரயில் மற்றும் பஸ்ஸில் பயணிக்கும் போதும் மற்றும் கோவில்களுக்கு குழந்தைகளுடன் செல்லும் போதும் பெற்றோர்களில் ஒருவர் எப்போதும் விழித்திருப்பது அவசியம் காரணம் பெரும்பாலான குழந்தைகள் இது போன்ற தருணங்களில் தான் கடத்தப்பட்டிருக்கின்றனர்.

உங்களை பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. இரண்டு மாதங்களாக குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் சென்னையில் தொடர்ந்து நடந்து வருவதால் உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும்,உங்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவும் மட்டுமே இந்த கட்டுரை எழுதப்படுகிறது. எனவே எச்சரிக்கையாக இருந்து உங்கள் குழந்தைகளை கண்காணியுங்கள் என்பதே இந்தக் கட்டுரை மூலம் நாங்கள் உங்களுக்கு விடுக்கும் செய்தி.


இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

இது போன்ற சமுதாய சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட link ஐ Click செய்து

https://www.facebook.com/varadarajpublicfigure/?fref=ts

எனது பக்கத்திலுள்ள Like பட்டனை அழுத்துங்கள்.

இப்படிக்கு


– திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,

(முன்னாள் காவல்துறை அதிகாரி)

தலைவர்

நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)


தமிழ்நாட்டு ஊழல் அரசியலுக்கு எதிரான இயக்கம்

நன்றி அண்ணா Waheed Ur Rahman

Bottom of Form