Select Page

மது இல்லா வீடு

மது இல்லாத வீடு, அதன் அவசியம் அறிமுகம் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று மது உள்ள வீடு

Alcoholless House

Alcoholless House

அன்று நாமக்கல் கவிஞர் சொன்னது

நேற்று
தமிழர் என்று ஒரு இனம் உண்டு,
தனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு
இன்று
தமிழர் இனம் ஒன்று உண்டு
அது குடித்து குடித்து அழிந்துக் கொண்டிருக்கிறது.
நாளை
தமிழர் என்று ஒரு இனம் உண்டு,
அது வானளவு உயர்ந்தது
நன்றி அக்னி ஸ்திரீ

======

“தமிழன் என்று சொல்லடா,
தலை நிமிர்ந்து நில்லடா”
பாட்டுக்கு ஒரு கவிஞன் பாரதி
இன்றைய நிலவரம்
“தா…மி..ழ..ன் என்று…. சொல்…ல…டா
ரோட்ல சுருண்டு கிடடா”
மன்னிக்கவும் நாக்கு ஏனோ குழறுது.
மது இல்லா குடும்பம் “மகிழ்ச்சி உள்ள குடும்பம்”

Alcoholless House

Alcoholless House

Alcoholless House

“நாடு என்ன செய்தது உனக்கு என்ற கேள்விகளைக் கேட்பதை விடுத்து, நீ என்ன செய்தாய் அதற்கு, அதனாலே நன்மை பல உனக்கு” என்ற ஜான் கென்னடியின் பொன்மொழிக்கு ஏற்ப இயங்குவதே அக்னி ஸ்திரீ அமைப்பு. இந்த அமைப்பின் அடிப்படையே இதுதான். ஆகவே அக்னி ஸ்திரீ அமைப்பு ஆக்கப்பூர்வமான செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தக்கூடாது.

அப்படி அவர்கள் செய்தால் அவர்களின் செயல்களில் அரசியல் புகுந்துவிடும். அதனால் இந்த இயக்கத்திற்கு களங்கம் உண்டாகும். அக்னி ஸ்திரீ அமைப்பின் இலட்சியமே பெண்கள் எப்படி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, முன்னேறுவது மட்டுமே.

“மது இல்லாத வீடு” என்பது அவர்களுடைய பிறப்புரிமை. அதை அடைய மட்டுமே அவர்கள் பாடுபட வேண்டும். அதையும் காந்திய வழியிலும், அன்னை தெரசா பாதையிலும் பயணித்து பெற வேண்டும்.

மதுக்கடைகள் இல்லாத ஊர் என்ற தங்கள் இலட்சியத்தை மாற்றி அக்னி ஸ்திரீ போராடக்கூடாது.

பெண்கள் ஒன்று சேர்வது அவசியம். பெண்கள் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டாலே, அவர்கள் அனைத்து பிரச்சினைகளும் (அவர்கள் தங்கள் பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற தங்களது குழந்தைகளை இழப்பதைச் சேர்த்து) தீர்ந்துவிடும்.

எல்லோரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை எதுவென்றால் “மது”. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆண்கள் மது அடிமைகளாக மாறுவது.

மது அடிமைகளால் அவர்கள் குடும்பம் மட்டுமின்றி அனைத்து பெண்களுக்குமே தீங்குகள் இழைக்கப்படுகின்றன.

மது அடிமைகளால் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. மது அடிமைகளை மதுவிலிருந்து மீட்பதே அவர்களின் முதல் செயல் நடவடிக்கையாக இருக்கும்.

மது இல்லையென்றால் வீடு உயரும்
வீடு உயர்ந்தால் நாடு உயரும்