பெண்கள் பாதுகாப்பு
- தட்டு…….”தட்டு” (பாதுகாப்பு நிவாரணி)
அனைத்து பெண்களும் குறிப்பாக குடிசைவாழ் பெண்கள் வீட்டில் உள்ள ஒரு தட்டு மற்றும் கரண்டியைப் பயன்படுத்தினால் போதும். ஆபத்தில் இருக்கும் ஒரு பெண் தட்டை கரண்டியால் தட்டுவார். அந்த சத்தத்தைக் கேட்டவுடன் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் தத்தம் தட்டினை எடுத்து கரண்டியால் தட்டுவார்கள். இது கிட்டத்தட்ட எதிரொலி போல் கேட்கும். இதன் பொருள் என்னவென்றால் “இதோ நாங்கள் வருகின்றோம், கவலைப்படாதே” என்பதாகும். இதற்காக “தட்டு-கரண்டி மொழி” ஒன்றினை உருவாக்கி உள்ளோம். ஆபத்தின் போது அழைப்பதற்கு ஒரு ஒலி, பாதுகாக்க வருகின்றோம் என்பதற்கு வேறு ஒரு ஒலி.
காட்டில் உள்ள எருமைகள் கூட ஒன்று சேர்ந்து சிங்கத்தை விரட்டி அடிக்கும். எறும்புகள்கூட தங்கள் கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு காட்டாற்றைக் கடக்கின்றன. இதுபோன்ற வீடியோக்கள் பெண்களிடையே பகிர்ந்துக் கொள்ளப்படும். ஒற்றுமை உண்டாக்கப்படும்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு வீட்டில் ஒரு பெண் தாக்கப்படுகிறாள். அவள் அலறலைக் கேட்டு மற்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் வேதனைக்குள்ளாகிறார்கள். வேறு எதுவும் அவர்கள் செய்வதில்லை. இந்த கொடுமை நிகழ்ச்சிகள் அவர்கள் வீட்டிலேயும் நடைபெறுகின்றது.
துன்புறுத்தப்படும் பெண்களின் அலறலைக் கேட்டு செய்வதறியாது பெண்கள் திகைக்கின்றனர். தட்டு ஒலி கேட்ட உடன் அந்த ஒலி வரும் வீட்டிற்கு மற்ற பெண்கள் அணி திரட்ட வேண்டும். கையில் தட்டு-கரண்டி வைத்திருக்க வேண்டும். அதை தட்டிக் கொண்டே வர வேண்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டில் இருக்கும் தட்டையும், கரண்டியையும் பயன்படுத்தலாம். வெளியே போகும் பெண்கள் ஆபத்து வரும் போது எப்படி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, அவர்கள் தங்கள் கைப்பையில் ஒரு மிகச்சிறிய தட்டு மற்றும்
ஒரு சிறிய கரண்டி அல்லது ஸ்பூன் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். சிறிய தட்டையும், கரண்டியையும் பயன்படுத்தி ஆபத்து வரும் போது ஒலி உண்டாக்கலாம். அந்தப் பெண் ஆபத்தில் இருக்கிறாள் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அமையும்.
அந்த கைப்பைக்குள்ளேயே பெப்பர்ஸ் ஸ்பிரே வைத்துக் கொள்ள வேண்டும். இது லிப்ஸ்டிக்கைவிட சற்றே பெரியதாக இருக்கும். அவ்வளவுதான்.
அரவணைக்கும் அன்பு சகோதரிகள் பெண்கள் பாதுகாப்பு அரண்
எந்தப் பெண்ணுக்குத் துன்பம் நேர்ந்தாலும், இவர்கள் தீ அணைக்கும் துறை போன்று விரைந்து செல்வார்கள். தட்டு ஒலி கேட்ட உடன் அந்த ஒலி வரும் வீட்டிற்கு மற்ற பெண்கள் அரவணைக்கும் அன்பு சகோதரிகள் அணி திரட்ட வேண்டும். கையில் தட்டு-கரண்டி வைத்திருக்க வேண்டும். அதை தட்டிக் கொண்டே வர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனைத்து உதவிகளும் பரிவுடன் செய்வார்கள். இதற்கு ஒரு படி மேலாக யாருக்கும் துன்பம் நிகழாதவாறு பாதுகாப்பு அரணாக இருந்து பார்த்துக் கொள்வார்கள்.
தட்டிற்குப் பல பயன்கள் உள்ளன.
- தட்டைத் தட்டி தான் ஆபத்திலிருக்கிறோம் என்பதை ஒலியின் மூலம் எந்த ஒரு பெண்ணும் உணர்த்தலாம்.
- தட்டை ஆபத்திலிருக்கும் பெண்ணுக்குப் பாதுகாப்பு தர தாங்கள் வருகிறோம் என்பதை உணர்த்த மற்ற பெண்கள் தங்கள் தட்டைத் தட்டி உணர்த்தலாம்.
- ஒரு பெண் தாக்கப்படும் போது தற்காப்பிற்குத் தன் தட்டை ஒரு கேடயமாக பயன்படுத்தலாம்.
- காமுகர்கள் தங்கள் பார்வையால் பெண் ஒருத்தியைத் துளைக்கும் போது தன்னை மறைத்துக் கொள்ள ஒரு திரையாக தட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- தட்டை தங்களின் பாதுகாப்பு சின்னமாக பெண்கள் பயன்படுத்தலாம். வீட்டின் முன் தட்டு ஒன்றினைக் கட்டித் தொங்கவிடலாம். அதன் பொருள் “நான் அக்னீ ஸ்தீரி உறுப்பினர், என் பின்னால் பெண்கள் படையே இருக்கிறார்கள்” என்பதாகும். அதை ஒரு பேட்ஜ் (Badge) ஆக குத்திக் கொள்ளலாம்.
- மழை பெய்யும் போது தன் தலை நனையாமல் பாதுகாக்க ஒரு மூடியாக பயன்படுத்தலாம்.
தட்டு எளிதானது. யார் வேண்டுமானாலும் கை பையில் (Hand-bag) எடுத்து செல்லாம். வீட்டில் இருந்து அபாய ஒலி எழுப்ப தட்டே சிறந்தது. இதையே ஒரு அபாய அறிவிப்பு சாதனமாக அக்னி ஸ்திரீ இயக்கத்தின் தலைமை அலுவலகம் தேர்ந்தெடுத்துள்ளது. இதை யாரும் மாற்ற வேண்டாம். ஒலி எப்படி எழுப்ப வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்ள வீடியோவைப் பார்க்கவும்.
- வெளியே செல்லும் பெண்கள் ஒரு சிறு தட்டு (Small plate) மற்றும் டேபிள் ஸ்பூன் தங்கள் கைப்பையில் (Hand-bag) எடுத்து செல்லாம். வெளியே செல்லும் பெண்களுக்கு வேறு வகையான எண்ணற்ற ALERT செய்ய வழிகள் உள்ளன.
- சின்ன டேபிள் காலிங் பெல் (table calling bell). நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் இதைத் தங்கள் கைப்பையில் (Hand-bag) எப்பொழுதும் வைத்திருப்பது நல்லது.
- இதிலேயே வையிண்டிங் (winding type) உள்ளது. இதை எப்போதும் கையால் வைண்ட் (wind) செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் அனுகூலம் என்னவென்றால் இதிலிருந்து வரும் சத்தம் எவர் கவனத்தையும் உடனடியாக கவரும்.
- வெளியே பணிக்குச் செல்லும் அனைவருக்கும் மிகவும் சிறந்தது எதுவென்றால் பேட்டரியால் இயங்கும் (battery operated) குட்டி பெல் (bell). இது எழுப்பும்ட சத்தம் ஊரையே கூட்டிவிடும். இதன் விலையும் மிகவும் அதிகமல்ல. உயிர், கற்பு ஆகிய இரண்டும் மிக முக்கியம்.
- அபாய எச்சரிக்கை எழுப்பும் சாவி செயின் டார்ச் அலறும் அலாரம் (Key chain alarm cum light) உள்ளது. அதையும் எப்போதும் கையில் எடுத்துச் செல்லலாம்.
- மொபைல் அலாரம் (Mobile alarm) பயன்படுத்தலாம். இதில் பிரச்சனை என்னவென்றால், ஒரு பெண் தனக்கு ஆபத்து வரும் போது மொபைல் அலாரம் எழுப்பினால் பலர் அந்தப் பெண்ணுக்கு மொபைல் அழைப்புதான் வந்திருக்கிறது என்று அவள் உதவிக்கு வராமல் போகக்கூடும்.
- ஒவ்வொவரும் விதவிதமான கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஒரே மாதிரி கருவிகளையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் மொழி குறிப்பாக அக்னி ஸ்திரீ பெண்களுக்குத் தெரிய வரும்.
- அனைத்து ஊர்களிலும் அக்னி ஸ்திரீ கிளைகள் (chapters) இருக்கும். இல்லையென்றால் அக்னி ஸ்திரீ கிளை ஒன்றை உருவாக்கிக் கொள்வது பெண்களின் முதல் வேலையாக இருக்க வேண்டும். உருவாக்கியவுடன் பாதுகாப்பு ஒலி கருவி ஒன்றை தேர்ந்தெடுத்து பெண்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரே மாதிரி இருத்தல் அவசியம் (for standardization).
தட்டும் கரண்டியுமே பெண்களின் பாதுகாப்பு சின்னம்.
எல்லா அபாய எச்சரிக்கை உபகரணங்களைவிட அக்னி ஸ்திரீ தலைமை தொண்டு அலுவலகம் “தட்டு” ஒன்றையே தேர்ந்தெடுத்துள்ளது. காரணம் தட்டும், கரண்டியும் எல்லோர் இல்லங்களிலும் இருக்கின்றன. மேலும் பெண்கள் காஷ்மீரிலிருந்தது கன்னியகுமரி வரை பாதுகாப்பு கருதி எதை செய்தாலும் அவை ஒரே மாதிரி இருத்தல் அவசியம். அப்போதுதான் மற்றவர்கள் புரிந்துக் கொண்டு செயல்படுவார்கள். உதவிக்கு ஓடோடி வருவார்கள்.
மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை அறிவிக்க ஒரு பெண் தன் கைபேசி மூலம் ஒலி எழுப்பினால் அதை மற்றவர்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிடக்கூடும்.
இப்படி ஒரு கற்பனை செய்து பாருங்களேன். ஒரு நாகரீக ஐ.டி-யில் (IT Industry) பணிபுரியும் நங்கை ரெயில் நிலையத்தில் தான் செல்லும் ரெயில் வண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு கொடியவன் அவளைத் தாக்க நெருங்குகிறான். அவள் தன் கைப்பையிலிருந்து (HAND BAG) தட்டையும், கரண்டியும் எடுத்து தட்டினால் என்னவாகும்? அவர் செயல் அனைவரின் கவனத்தைக் கவரும். மக்கள் உதவக்கூட வேண்டாம். ஓடோடி வந்தாலே போதும்.
ஆகவே தட்டு மற்றும் கரண்டியையே அக்னி ஸ்திரீ இயக்கம் பாதுகாப்பு அலறல் கருவியாக தேர்ந்தெடுத்துள்ளது. எதுவுமே வேண்டாம் அந்த யுவதி தன் கை பையிலிருந்து தட்டை கையில் எடுத்தாலே போதும். கொடியவன் பிடிப்பான் ஓட்டம். தட்டு ஒன்று கையில் இருந்து அதை தன் கைப்பையிலிருந்து கையில் எடுத்தாலே போதும், ஸ்வாதி பிழைத்திருப்பார். தட்டை ஒரு கேடயமாக பயன்படுத்தி தன் மீது விழுந்த கத்தி குத்துக்களைத் தடுத்திருக்கலாம்.
மறந்துவிடாதீர்கள். அனைத்துப் பெண்களும் தங்கள் கைப்பையில் இவை இரண்டையும் வைத்திருக்க வேண்டும். தட்டும் கரண்டியும் பெண்களின் பாதுகாப்பு சின்னம். “ஒழுங்கா ஓடிப்போய் விடுகிறாயா, அல்லது தட்டை கையில் எடுக்கட்டுமா?” என்று கேட்டாலே போதும், “மலைப்போல் வரும் சோதனை யாவும் பனிப்போல் நீங்கிவிடும்”.