Select Page

உணர்ச்சி உரை வரிகள்

அக்னி ஸ்திரீ(தீ)

உணர்ச்சி உரைகள்

பெண்களுக்காகப் பெண்களே நடத்தும் பெண்கள் இயக்கம்

உரை “உணர்ச்சியோடு உரை” 

எழுதியவர்

ஏழாம் அறிவு வித்தகர்

எக்ஸ்னோரா M B நிர்மல்

உரை நிகழ்த்துங்கள்

  • கூட்டாக உணர்ச்சி உரை நிகழ்த்துங்கள் (சேர்ந்து பாடுவது போல்) 
  • கூட்டமாக இணைந்து இழைந்து உணர்ச்சி உரை நிகழ்த்துங்கள்
  • ஒவ்வொரு வரியாக முன்னணி வகிக்கும் பெண் உரைப்பார் .  மற்ற பெண்கள்  எதிரொலியாக  உரைக்க வேண்டும் .  இந்தத் திறமை உங்களுக்குள் இருக்கிறது . பயன்படுத்தி கொள்ளுங்கள் . வளர்த்து கொள்ளுங்கள்.

ஒரு மது அடிமையினுடைய மனைவியின் கண்ணீர் கோரிக்கை

“இரண்டு கரங்கள், இரண்டு”

கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை

உணர்வுப் பூர்வமாக நிகழ்த்துங்கள்

இணைந்து இழைந்து உரை நிகழ்த்துங்கள்

என் குடும்பத்திற்கு ஐக்கிய நாட்டு நிதி வேண்டாம்

அயல்நாட்டு அன்பளிப்பு வேண்டாம்

மத்திய அரசு மானியம் வேண்டாம்

மாநில அரசுச் சலுகைகள் வேண்டாம்

உறவினர்கள் உபகாரம் வேண்டாம்

நண்பர்கள் நன்கொடை வேண்டாம்

என் கணவர் மது அருந்தாமல் இருந்தால் அதுவே போதும்.

எனக்கு இரண்டு கைகள் இருக்கின்றன.

என் கணவருக்கு இரண்டு கைகள் இருக்கின்றன.

உழைத்தே உயர்வோம்.

ஆனால் இன்றோ

என் கணவரின் கைகள் இரண்டும்

என்னைத் தாக்கவும்

என் கைகள் இரண்டும்

அதைத் தடுக்கவுமே பயன்பட்டு வருகின்றன.

இங்கே தரப்பட்டுள்ள ஒவ்வொரு உணர்ச்சி உரையையும் சுவற்றில் “அக்னி ஸ்திரீ” என்ற பெயரின் கீழ் எழுதி வைப்பது அவசியம். விழிப்புணர்வு உருவாக்க இது மிகவும் அவசியம்.

ஓ பெண்ணே! ஓ பெண்களே !!

ஓ பெண்ணே!

ஒரு கல் தடுக்கி நீ விழுந்துவிடலாம்.

ஓ பெண்களே !!

உங்களால் ஒரு மலையையே தகர்க்க முடியும்.

ஓ பெண்ணே!

ஆற்று வெள்ளம் உன்னை அடித்துச் செல்லலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் ஒரு ஆற்றின் திசையையே திருப்ப முடியும்.

ஓ பெண்ணே!

ஒரு காமூகனால் உனக்கு இன்னல் வரலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் தகுந்த தண்டனை வாங்கித் தர முடியும்.

ஓ பெண்ணே!

ஒரு கொடியவனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் அனைத்து கொடியவர்களிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

ஓ பெண்ணே!

நீ தனியாக பாடினால் மற்றவர்கள் அதை ரசிக்காமல் போலாம்.

ஓ பெண்களே!!

நீங்கள் சேர்ந்து இசைத்தால் அனைவரும் கரவொலி எழுப்புவார்கள்.

  • சுவரில் எழுதி வைக்கவும்.
  • அச்சடித்து வழங்கவும்.
  • கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை உணர்வுப் பூர்வமாக முழங்கவும்.
  • படித்த பெண்களே! படிக்காத பெண்களுக்கு இந்நூலைப் படித்துக் காட்டி பயன்பெற உதவவும்.
  • இன்றே அக்னி ஸ்திரீஅமைப்பைத் தொடங்கவும்.
  • மதியைப் பயன்படுத்தி மதுவை மனிதர்கள் மறந்திடச் செய்வோம்.

அக்னி ஸ்திரீ

பெண்களுக்காகப் பெண்களே நடத்தும் பெண்கள் இயக்கம்

“இந்திரா – இரத்னா எழுச்சி அலை”

கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை உணர்வுப்பூர்வமாக முழங்கவும்

மதியைப் பயன்படுத்தி

மதுவை மனிதர்கள்

மறந்திடச் செய்வோம்

பெண்களே!

இவ்வுலகின் கண்களே!!

ஒன்று சேருங்கள்!

இன்றே சேருங்கள்!!

பெண்கள் பாதுகாப்புத்

தொண்டு நிறுவனம்

மது அடிமைகளைத் திருத்தும்

அமைப்பு

அக்னி ஸ்திரீ, எக்ஸ்னோரா என்ற மாபெரும் தொண்டு

இயக்கத்தின் சகோதரி அமைப்பு

மரண தண்டனை வழங்கும் மது

விபத்துக்களை விட

வியாதிகளை விட

சுற்றுச்சூழல் மாசுகளை விட

போர்களை விட

அதிகமான மனிதர்கள்

அகால மரணமடைவது

மதுவால்தான்

இதுவரை…

பெண்ணாகப் பிறந்தாலே

எந்நாளும் துயர்தானே

இனி…

பெண்கள் ஒன்று சேர்ந்தாலே

எந்நாளும் மகிழ்ச்சிதானே

அழிக்கும் மது

கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை உணர்வுப் பூர்வமாக முழங்கவும் இணைந்து இழைந்து முழங்கவும்

மூளையை முடக்குகிறதுபார்வையைப் பழுதாக்குகிறது

சிந்தனையைச் சிதைக்கிறதுதொண்டையைத் துளைக்கிறது

வயிற்றை வதைக்கிறதுநரம்புகளை நசுக்கிறது

குடலைக் குலைக்கிறதுமனதை மழுங்க வைக்கிறது

இதயத்தை இடிக்கிறதுகல்லீரலைக் காயப்படுத்துகிறது

நுரையீரலை நொறுக்குகிறதுகணையத்தைக் கசக்குகிறது

நாக்கை நசுக்குகிறதுகண்களைக் குருடாக்கிறது

சுவாசத்தைச் சுருக்குகிறதுபற்களைப் பதம் பார்க்கிறது தசைகளைத் தாக்குகிறதுசிறுநீரகத்தைச் செயலற்றதாக்குகிறது அறிவை அரிக்கிறது. நெஞ்சை நஞ்சாக்குகிறது

குடித்துக் குடித்துக் குடிமகனாகிக் குடியைக்

கெடுத்துக் கொடியவனாகிவிடுகிறான்.

“மது அனைத்தையும் மறக்க உதவுகிறது, மதுவைத் தவிர”

அறிவுரை பனி போன்றது, எவ்வளவு மென்மையாகப் பெய்கிறதோ, அந்த அளவுக்கு நீண்டு படியும். மனதில் ஆழமாய்ப் பதியும்.

– ஸேம்யல் காலெரிட்ஜ்

கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை உணர்வுப் பூர்வமாக முழங்கவும் இணைந்து இழைந்து முழங்கவும்

முதலில் மனிதன் மதுவை ஆட்கொள்கிறான்.

முடிவில் மது அவனை ஆட்கொள்கிறது.

தலை இல்லாத தலைவன் மது அடிமை

வழி தெரியாத குடும்பம்

ஒரு வேலி இல்லாத தோட்டம்.

தந்தை குடும்பத் தலைவன் கதவு இல்லாத ஜன்னல்,

அவன் மது அருந்தி பயிர் இல்லாத நிலம்.

தன்னை மறக்கிறான்,

தலைமை தாங்கி வழி நடத்த மது

மறக்கிறான். தலைவன் இல்லாத

குடும்பம், ஒரு மாலுமி இல்லாத போதையூட்டும் பேய்,

கப்பல், அது தத்தளிக்கிறது, நாக்குக்கினிய நஞ்சு,

தடுமாறுகிறது, திசை மாறுகிறது. இதமளிக்கும் எமன்,

முடிவில் கவிழ்ந்து மூழ்கி, அழிந்து சொக்க வைக்கும் சாத்தான்.

ஒழிந்துவிடுகிறது.

கடலளவு தண்ணீர் செய்யும் காரியத்தைச் சிறிதளவு மது செய்துவிடுகிறது. ஆம், மது அருந்துபவனை மூழ்கடித்துக் கொன்றுவிடுகிறது.

“மதுவை மனிதன் தன் அடிமையாக்க நினைக்கிறான்.

ஆனால், அதுவோ அவனை அடிமையாக்கிவிடுகிறது.

கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை உணர்வுப் பூர்வமாக முழங்கவும் இணைந்து இழைந்து முழங்கவும்

“மது” உள்ளே போகிறது.

“மதி” வெளியே போகிறது.

அரக்கனாக்கும் மது

தினந்தோறும் சில நூறு பெண்கள்

நம் பாரதத் திருநாட்டிலே

கற்பழிக்கப்படுகிறார்கள்.

இந்த ஈனச் செயலைச் செய்யும்

கயவர்களில் கணிசமானவார்கள்

மது போதையில்

தங்களையே மறந்த மது அடிமைகள்

கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை உணர்வுப் பூர்வமாக இணைந்து இழைந்து முழங்கவும்

எக்ஸ்னோரா வி ஙி நிர்மல்

புட்டியும், புட்டியை வைத்திருப்பவனும் ஒன்றே

மது அடிமை தன் கையில் இருக்கும்

புட்டியைப் போன்றவன், அவனுக்குப்

புட்டியைப் போல் வயிறு இருக்கிறது

புட்டியைப் போல் தோள் இருக்கிறது

புட்டியைப் போல் கழுத்து இருக்கிறது

புட்டியைப் போல் வாய் இருக்கிறது

புட்டியைப் போல் தலையில்லை.

(மதுவால் மதியை மறந்து வாழ்க்கையில் அனைத்தும் இழந்த ஒருவன், மது அருந்தாமல் மதியோடு இருந்த போது எழுதியது)

  • சுவரில் எழுதி வைக்கவும்
  • அச்சடித்து வழங்கவும்
  • கூட்டங்களில் இந்நூலைப் படிக்கவும்.

மது இருந்தால் நல்லது இருக்காது. ஆனால், மது இல்லையென்றால் அனைத்து வளங்களும் இருக்கும்.

எது தேவை!

மதுவா…..? மதியா….?

மதுவை மறந்திடுங்கள், மறுவாழ்வு பெற்றிடுங்கள்!

மதுவை விட்டு மறுவாழ்வு பெற விரும்பும் ஆண்கள் “அக்னி ஸ்திரீ” அமைப்புடன் தொடர்புக் கொள்ளுங்கள்!

நமக்கு நாமே அமைப்பைத் தொடங்குங்கள்

மது அடிமைகளைத் திருத்த நினைக்கும் அவர்களின் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து, “குடும்பத்தின் குடும்பம்” அமைப்பைத் தொடங்கி அனைவரும் இணைந்து மது அடிமைகளை மாற்றுங்கள்.

மது அரக்கனை ஒழிக்க நினைக்கும் பெண்களே,

ஒன்று சேருங்கள்!

அக்னீ ஸ்திரீயில் இன்றே சேருங்கள்!!

மனிதன் மது அருந்தமாட்டான்;

மது அருந்துபவன் மனிதனாக இருக்கமாட்டான்.

கரை தெரியாத கண்ணீர்ப் பயணம்

பிறந்து அறிவு தெரிந்தவுடன்,

தெரிந்தது தந்தை ஒரு குடிகாரர் என்று

தாய்க்குக் கிடைத்த அடி உதையில்

எனக்கும் பங்கு கிடைக்க ஆரம்பித்தது.

அடி வாங்கி அடி வாங்கி

இருபதாம் வயதில்

அடியெடுத்து வைத்தவளுக்கு

இனிய செய்தி:

திருமணமாம் எனக்கு

மூன்று முடிச்சு விழுந்தது.

குடிகாரத் தந்தையிடமிருந்து

விடுதலை கிடைத்தது

கரம் பிடித்தவனின்

அரவணைப்புக் கிடைத்தது.

முதல் இரவு முடிவில்லா இரவு

இரண்டாம் இரவு இனிய இரவு

மூன்றாம் இரவு முத்தான இரவு

நான்காம் இரவு நல்ல இரவு

ஐந்தாம் இரவு……………..

“அய்யோ”…………..”அம்மா”………………

அடி உதை இரவு.

மல்லிகைப் பூ வாங்கி வரும்

கணவன் கையில்

மது பாட்டில்.

அன்று ஆரம்பித்த

அடி உதை

தொய்வில்லாமல் தொடர்ந்தது.

வருடம் ஒன்றானவுடன்

அடி உதை எனக்கு

வலியை உண்டாக்கவில்லை

மரத்துப் போய்விட்டேனா?

அல்ல!

துளிர்விட்டேன்!

மனம் மகிழ்ச்சியில்

நிரம்பியது……………….

நிரம்பிய வயிறே காரணம்.

உடல் வாங்கிய

உதைகளுக்கு ஒத்தடம் கொடுத்தது.

என் வயிற்றுக்குள்ளே

நான் வாங்கிய உதைகள்.

  • உண்மை நிகழ்ச்சி எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
  • அச்சடித்து விநியோகிக்கவும், கூட்டங்களில் இந்நூலைப் படிக்கவும்
  • அக்னி ஸ்திரீஅமைப்பை உங்கள் பகுதியில் இன்றே தொடங்கவும்.

பத்தாவது மாதத்தில்

தப்பாமல் பிறந்தான்

பொன்னான புதல்வன்.

கணவன் கைவரிசை தொடர்ந்தாலும்

வளரும் மகனின்

பல் வரிசை

அருமருந்தாக இருந்தது.

காலச் சக்கரம் சுழன்றது

நாற்பது வயது தாய் நான்

இருபது வயது இளைஞன்

என் மகன், இனிய மகன்

பார்க்கும் போதெல்லாம்

வேதனையை மறந்தேன்.

“அம்மா என் தகுதிக்கேற்ற

வேலை கிடைத்துவிட்டது”

என்று அவன் மகிழ்ச்சியுடன்

வந்து கூறிய போது

என் நெஞ்சம் நெகிழ்ச்சியில் மூழ்கியது.

முதல் மாதச் சம்பளத்துடன்

ஓடி வந்தான்

முதல் மரியாதை எனக்குத்தான்.

காலில் விழுந்தவனைக்

கைப் பிடித்துத் தூக்கிய போது

பெற்ற வயிறு பெருமிதம் அடைந்தது

புதிய பிறவி எடுத்தவளாகப் பூரித்தேன்.

மூன்று மாதங்கள்

மூன்று நிமிடங்களாக ஓடின.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த

என்னை யாரோ

எட்டி உதைக்கிறார்கள்.

விழித்தெழுந்து கொள்வதற்குள்

என்னை மிதிக்கிறார்கள்.

யார் அது, உடல் வலியுடன்

கண் திறந்து பார்க்கிறேன்.

“மீன் குழம்பில் மீன் எங்கே?”

குரல் அல்ல கர்ஜனை கேட்கிறது

குரலுக்குரியவன்

பத்து மாதம் நான் சுமந்து பெற்றெடுத்த

“குடி” மகனாகப் புதிய உருவெடுத்திருந்த

என் அன்பு மகன்

என் கண்ணீர்ப் பயணம் தொடர்கிறது.

அக்னி ஸ்திரீ

பெண்களுக்காகப் பெண்களே நடத்தும் பெண்கள் இயக்கம்

“இந்திரா – இரத்னா எழுச்சி அலை”

கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை உணர்வுப் பூர்வமாக இணைந்து இழைந்து முழங்கவும்

ஏழாம் அறிவு வித்தகர் எக்ஸ்னோரா M B நிர்மல்

மது இருந்தால் இருக்கும்!

மது இருந்தால் இருக்கும்………….!

வயிற்றில் ஈரத் துணியிருக்கும்

குடும்பத்தில் பட்டினியிருக்கும்

வீட்டில் வறுமையிருக்கும்

வெளியே கடனிருக்கும்.

மது இருந்தால் இருக்கும்……..!

சிந்தனையில் குழப்பமிருக்கும்

சொல்லில் தடுமாற்றமிருக்கும்

செயலில் தொய்விருக்கும்

பணியில் தேக்கமிருக்கும்.

மது இருந்தால் இருக்கும்……..!

பழகுவதில் பாகுபாடிருக்கும்

குடும்பத்தில் விரிசலிருக்கும்

உறவினரிடத்தில் உராய்விருக்கும்

ஊரில் அவப்பெயரிருக்கும்.

மது இருந்தால் இருக்கும்……..!

உள்ளத்தில் களைப்பிருக்கும்

உடலில் நோயிருக்கும்

முகத்தில் சோகமிருக்கும்

இதயத்தில் சாத்தானிருக்கும்.

மது இல்லையென்றால் இருக்கும்

மது இல்லையென்றால் இருக்கும்……!

உலையில் அரிசியிருக்கும்

தட்டில் உணவிருக்கும்

பெட்டியில் பணமிருக்கும்

வாழ்க்கையில் செழிப்பிருக்கும்.

மது இல்லையென்றால் இருக்கும்……!

சிந்தனையில் தெளிவிருக்கும்

சொல்லில் சுத்தமிருக்கும்

செயலில் துடிப்பிருக்கும்

பணியில் ஆற்றலிருக்கும்.

மது இல்லையென்றால் இருக்கும்……!

பழகுவதில் இனிமையிருக்கும்

குடும்பத்தில் பாசமிருக்கும்

உறவினரிடத்தில் பந்தமிருக்கும்

ஊரில் மதிப்பிருக்கும்.

மது இல்லையென்றால் இருக்கும்……!

உள்ளத்தில் உறுதியிருக்கும்

உடலில் ஆரோக்கியமிருக்கும்

முகத்தில் அன்பிருக்கும்

இதயத்தில் தெய்வமிருக்கும்.

  • சுவரில் எழுதி வைக்கவும்
  • அச்சடித்து வினியோகிக்கவும்
  • கூட்டங்களில் படிக்கவும்
  • நல்விளைவுகளைக் கண்டு வியக்கவும்

“நரக நிலையைக் கடுகளவு குறைத்தாலே போதும், மலையளவு சொர்க்க நிலை வந்தது போன்ற உணர்வு வரும்”

“இந்தியர்கள் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள்

பெண்கள் இன்னும் சுதந்திரம் பெறவில்லை”

பெண்களே!

ஒன்று சேருங்கள்; உங்களை மாற்றுங்கள்;

வீட்டை மாற்றுங்கள்; ஊரை மாற்றுங்கள்;

நாட்டை மாற்றுங்கள்; உலகத்தை மாற்றுங்கள்.

இருக்கும் நிலை

கசக்கப்பட்ட

நசுக்கப்பட்ட

பொசுக்கப்பட்ட

பெண்கள்

வதைக்கப்பட்ட

சிதைக்கப்பட்ட

புதைக்கப்பட்ட

நங்கையர்கள்

நொறுக்கப்பட்ட

நெறுக்கப்பட்ட

நெரிக்கப்பட்ட

மங்கையர்கள்

பழிக்கப்பட்ட

இழிக்கப்பட்ட

கழிக்கப்பட்ட

மகளிர்

துரத்தப்பட்ட

துன்புறுத்தப்பட்ட

தூற்றப்பட்ட

மாதர்கள்

வெட்டப்பட்ட

தட்டப்பட்ட

குட்டப்பட்ட

வனிதையர்கள்

மிரட்டப்பட்ட

மிதிக்கப்பட்ட

முடக்கப்பட்ட

மடந்தைகள்

ஒதுக்கப்பட்ட

ஒடுக்கப்பட்ட

ஒழிக்கப்பட்ட

ஏந்தல்கள்

(கூட்டங்களில் உரக்கப் படிக்கவும்)

இருக்கப் போகும் நிலை

ஒன்றுப்பட்ட, உயர்த்தப்பட்ட, மதிக்கப்பட்ட, பாராட்டப்பட்ட, போற்றப்பட்ட, கௌரவிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட பெண்கள்

(கூட்டங்களில் உரக்கப் படிக்கவும்)

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு பணிதான். உங்கள் வீட்டை மாற்றுங்கள். நாடே மாறும் அதிசயத்தை நீங்கள் காண்பீர்கள்.

உணர்ச்சி உரை வரிகள்

மரண தண்டனை வழங்கும் மது


விபத்துக்களை விட, 
வியாதிகளை விட,
சுற்றுச்சூழல் மாசுகளை விட,
போர்களை விட,
அதிகமான மனிதர்கள்
அகால மரணமடைவது மதுவால்தான்.