பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்
உடல் மொழி (Body Language)
- உடல் தோரணை (Body Postures)
- முகபாவனை (FACIAL EXPRESSIONS)
- சைகைகள் (GESTURES)
- கை குலுக்குதல் (Handshake )
- கண் தொடர்பு (Eye Contact –OCULESICS)
- தொட்டு பேசுதல் – (HAPTICS தொட்டு பேசுதல் கையைப் பிடித்து பேசுதல் , தோளில் தட்டி கொடுத்தல், ஹை பைவ் தருதல் –High Five)
- இடைவெளி அளவு PROXEMICS-
நெருங்கிய INTIMATE ,
தனிப்பட்ட PERSONAL ,
சமூக SOCIAL ,
பொது PUBLIC
உடல் மொழி உண்மை மொழி
நன்றி : நிரோஷன் தில்லை நாதன்
ஒரு மனிதனின் உடல் மொழி என்றால் என்ன என்று தெரியுமா? அது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் வேறு ஒருவருடன் பேசும் பொழுது, உங்கள் உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் அனைத்தும் உடல் மொழி ஆகும். விஞ்ஞானம் என்ன கூறுகின்றது என்றால், ஒருவரது உடல் மொழி அவர் தன்னைப் பற்றி எப்படி உணர்ந்து வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகின்றது என்பது தான். சக்திவாய்ந்த மனிதர்கள் மிகவும் துணிவுள்ளவர்கள். இவர்களிடம் உயர்வடையும் விருப்பம் அதிகளவில் உள்ளதால், ஆபத்து வாய்ந்த வேலைகளையும் செய்யத் தயங்க மாட்டார்கள். மேலும் இவர்கள், தங்களைச் சக்தியற்றவர்களாகக் கருதும் மனிதர்களை விட, அதிகம் நம்பிக்கை உடையவர்களாய் இருப்பர்.
உண்மை சொல்லப் போனால் இந்தத் தகவல்கள் அனைத்தையும் ஒரு மனிதரின் உடல் மொழியிலிருந்தே அறிந்து விடலாம்! தங்கள் அதிகாரத்தில் நம்பிக்கை உடைய மக்கள் தங்களது உடலை விறைப்பாக வைத்திருப்பர்; மேலும் அவர்கள் பெரிய கையசைவுகளைக் கொண்டே தங்கள் உணர்வை வெளிப்படுத்துவர். இவர்களுக்கு நேர் மாறாக, தன்மேல் நம்பிக்கை இல்லாத மக்கள் உடலைக் குறுக்கி வைத்திருப்பர். சிறு கையசைவுகளையே உபயோகிப்பர்.
வேதியியல் ரீதியாக, உயர் சக்தியுள்ள மக்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவு அதிகமாக இருக்கும்; மேலும் கார்டிசோல் (cortisol) அளவு குறைந்திருக்கும். இதில் வியப்பூட்டும் விடயம் என்னவென்றால், உயர்- அல்லது குறைந்த சக்தி உடையவர் போல நடிப்பதால் கூட நமது உடலில் மாற்றம் ஏற்படுகிறது என்பது தான். நீங்கள் வெறும் இரண்டு நிமிடங்கள் அதிகாரம் உடையவர் போல் நடித்தாலும் கூட, உங்களது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உயரும் என்றும் கார்டிசோல் அளவு குறைகிறது என்றும் கண்டுபிடித்தர். இதுவே, அதிகாரமற்ற மனிதர்களின் உடல் மொழிகளைப் பயன்படுத்தும் பொழுது விளைவு எதிரானதாக இருந்தது.
எனவே, நமது உடல் மொழியின் மாற்றங்கள் நமது சிந்திப்பையும், மனதையும் மாற்றிவிடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது
பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM
ஒருவருடன் பேசும் போது நமது உடல் அசைவு மூலம் நமது எண்ணங்களையும், செயல்களையும் தெரிவிக்க முடியும்.
நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவரது பேச்சு சுவாரஸ்யமாக இருந்தால் தான் அவரது பேச்சை தொடர்ந்து கவனிப்போம். நண்பனின் பேச்சு போரடிக்க ஆரம்பித்தால் நமது கவனம் வேறு பக்கம் திரும்பும். உடலை நெளித்து, கை கால்களை ஆட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விட தொடங்கிவிடுவோம்.
நண்பரின் பேச்சு போரடிக்கிறது என வார்த்தையாக சொல்லாமல் உடல் அசைவு மூலம் சொல்லும் இத்தகைய செயல்திறன், ‘சொல்சார தகவல் பரப்பு’ என்பதாகும். உடல் அசைவு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள் இருப்பதாக கணித்துள்ளனர். உடல் அசைவு மொழிகளின் முக்கியதுவத்தை விளக்கும் ஒரு சீன நாடோடி கதை உண்டு.
பண்டைய சீனவில் நீதிபதி ஒருவர் பணிமாற்றமாகி சீன தலைநகருக்கு வந்தார். அவர் திறன்மிக்க தையல்காரன் ஒருவனை அழைத்து தனக்கு, நீதிபதிகள் அணியும் நீண்ட அங்கி தைக்குமாறு கூறினார்.
அங்கி தைப்பதற்கு ஒப்பு கொண்ட தையல்காரர் நீதிபதியிடம், “ஐயா, நிங்கள் புதிதாக பதவி நியமனம் பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்களா? அல்லது பதவி உயர்வு பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்களா? இல்லை பதவி உயர்வை எதிர்பார்த்து தலை நகருக்கு வந்துள்ளீர்களா? என்று பணிவுடன் கேட்டார். தையல்காரனின் கேள்வி நீதிபதியை வியப்படைய செய்தது. அனைத்து நீதிபதிகளும் ஒரே விதமான அங்கியைதானே அணிவார்கள். நீ எதற்காக தேவையற்ற கேள்விகளை கேட்கிறாய்? என தையல்காரனை கடிந்து கொண்டார்.
“ஐயா எனது கூற்றை தயவு செய்து கோளுங்கள்” என்று பதிலளித்த தையல்காரர், தனது விளக்கத்தை பின்வருமாறு கூறினார். கனம் நீதிபதி அவர்களே! நீங்கள் புதிதாக நியமனம் பெற்றவரெனில் உங்களது உயர் அதிகாரிகளின் முன்பு அடிக்கடி விரைப்புடன் நிற்க வேண்டும். எனவே உங்களது அங்கி முன்பகுதியிலும், பின் பகுதியிலும் சமநீளம் கொண்டதாக அமைதல் வேண்டும்
நீங்கள் பதவி உயர்வு பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்கள் எனில் நெஞ்சை நிமிர்த்தி கர்வமுடன் தேற்றமளிக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் அங்கியின் முன் பகுதி நீளம் மிக்கதாக அமைதல் வேண்டும்.
மாறாக பதவி உயர்வு எதிர்பார்த்து தலைநகருக்கு வந்துள்ளீர்கள் எனில் உங்கள் உயர் அதிகாரிகள் முன்பு தோள்கள் குவிந்த வண்ணம் பணிவுடன் நிற்க வேண்டும். அவ்வகை தருணங்களில் உங்களது அங்கி பின்பகுதியில் நீளம் மிக்கதாக அமைதல் வேண்டும், ஐயா இப்பொழுது கூறுங்கள் உங்கள் அங்கி எப்படி இருக்க வேண்டும்?
தையல்காரனின் விளக்கம் நீதிபதிக்கு பெரும் திருப்தியை அளித்தது. தனது ஆயுட்காலத்தில் பல தருணங்களில் நீதிபதிதையல்காரனின் விளக்கத்தை பற்றி எண்ணி எண்ணி வியந்தார்.
உடல் அசைவு மொழிகள் சமீப காலமாக நிர்வாக கல்வி இயலில் முக்கியதுவம் பெற்றுவருகிறது. இருப்பினும் பண்டைய காலத்திலேயே மக்கள் உடல் அசைவு மொழி பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்பதை இந்த கதை மூலம் அறியலாம்.