- அக்னி ஸ்திரீ ஆன்றோர் – சான்றோர் சபை “Agni Stree Scholars Forum”
“அக்னி ஸ்திரீ” அமைப்பு சர்வ வல்லமை படைத்ததாக இருக்கும். பெண்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பு கோட்டையாக திகழும். இந்த புதிய பலத்தை “அக்னி ஸ்திரீ” அமைப்பு பொறுப்பாளர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. உலக நீதி என்னவென்றால், “நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது”. தவறு செய்யும் யார் மீது நடவடிக்கை எடுப்பது என்றாலும் அலசி, ஆராய்ந்து பல்வேறு கோணங்களில் பார்த்து, விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். “அக்னி ஸ்திரீ” அமைப்பினர் அவசியம் ஆன்றோர், சான்றோர் சபை என்ற அமைப்பினை தங்களுடைய ஆலோசனை அமைப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதில் கல்வியாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோர் இடம் பெற வேண்டும். இந்த ஆன்றோர் – சான்றோர் சபையில் ஆண்களும் பெண்களும் என இருசாரரும் இருப்பார்கள். குறைந்தது சரிபாதி ஆண்கள் இருக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை / வகுப்புகளை நடத்தும் சேவை உள்ளம் உடைய வல்லுனர்கள், அறிவுரை வழங்கும் அறிஞர்கள், தொண்டுள்ளம் கொண்ட முதியவர்கள் ஆகியோரைக் கொண்ட “
அக்னி ஸ்திரீ ஆன்றோர் – சான்றோர் சபை என்னும் இணை அமைப்பு உருவாக “தீ” நடவடிக்கை எடுக்கும் ஒரு குழுவாக ஒவ்வொரு ஊரிலும் அவர்கள் இணைந்து செயல்படுவார்கள். இவர்களது சச்சரவுக்குள்ளான குடும்ப உறுப்பினர்களை ஒற்றுமைப்படுத்த மத்தியஸ்தம் (Compromise -Mediation) செய்வார்கள்.