குறும் படம் எடு, கருத்துப் படம் கொடு
அறிஞர் அண்ணா சொன்னார் “சென்சார் இல்லாமல் படம் எடுத்து வெளியிட அனுமதி தாருங்கள் . நான் தமிழகத்தின் தலைவீதியை ஒரே படத்தின் மூலம் மாற்றி காட்டுகிறேன்” என்று . படங்களுக்கு அவ்வளவு வலிமை .
அவர் சொன்ன அந்த காலத்தில் திரை படம் மட்டுமே பிரதமானமாக இருந்தது . இது கணினி யுகம் . ஒரு மொபைல் போன் மூலம் ஒரு படம் எடுத்து யூ டுயூபில் (You tube) சேர்த்து முக நூல் (Face Book ) மற்றும் வாட்ஸாப்ப் மூலம் எட்டு திக்கிலும் அனுப்பலாம் . உலகத்தையே உங்கள் திரை அரங்கமாக மாற்றலாம் . உங்கள் யூ டுயூப்
லிங்கை மின்னஞ்சல் (E Mail ) மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு அனுப்பலாம்
படம் எடுக்கும் கலையை எவரும் கற்கலாம் . தேவை ஆர்வம் மட்டுமே .
நல்ல கருத்து , அதன் அடிப்படையில் ஒரு குட்டி கதை , வசனம் , நடிப்பு , ஒளிப் பதிவு , ஒலிப் பதிவு , இயக்கம் , இவ்வளவே . இந்த திறமைகளை எளிதில் பெறலாம் . வளர்த்து கொள்ளலாம் . நீங்களாகவே கற்று கொள்ளலாம் . இணையதளத்தில் சென்று கற்று கொள்ளலாம். .
அக்னி ஸ்திரீ தலைமை இயக்கமே உங்களுக்குக் கற்று தரும்.
முதலில் குறுப்படங்கள் பலவற்றைப் பார்க்கவேண்டும்.
தமிழ் மொழிக்கு எதிர்காலம் இருக்கிறதா ?
இந்த படத்தைப் பாருங்கள். அந்த கவலை உங்களுக்கும் வரும்
அற்புத குறும் படம்
தமிழ் இனி மெல்ல வாழும்
அற்புத குறும் படம்
இந்த இணைப்பு உங்களைக் குறும்படம் உலகத்திற்கு அழைத்து கொண்டு செல்லும் .
இதனால் மூன்று பயன்கள் .
1. உங்களுடைய சமூக விழிப்புணர்வு பன் மடங்கு அதிகரிக்கும். அதனால் உத்வேகம் வரும்
2. நீங்களே படம் எடுக்க ஊக்கம் கிடைக்கும். எப்படி எடுப்பது என்பது. அத்துப்படியாகும்
3. எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களிடையே அக்னி ஸ்திரீ 7ஆம் அறிவு , பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி படங்கள் எடுக்கலாம். பெண்கள் விடுதலைப் பெறலாம்
படக் கருத்துக்கள்: பெண்களுக்குப் பாதகங்கள் தலைப்பில் சென்று பார்க்கவும்
மேலும்
- மது ,
- போதை மருந்து ,
- புகை .
- புகையிலை மற்றும்
- சூதாட்டம்
ஆகியவைகளுக்கு எதிராக படங்கள் எடுக்கலாம்
இதோ சில முன் மாதிரி படங்கள்
மது “உள்ளத்தைத் தொடும் ஈழ குறும்படம் விட்டில்பூச்சி
Note: Video not available
நல்லதோர் வீணை
மண் குறும்படம்
நினைவுகள்