Select Page

முழங்கு பெண்ணே முழங்கு

பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல் “பெண்ணே முழங்கு”

“அணங்கே முழங்கு”: 

கூட்டாக கோஷம் எழுப்புங்கள்

கூட்டமாக கோஷம் எழுப்புங்கள்

முழங்கு பெண்ணே முழங்கு முழங்கு பெண்ணே முழங்கு

முழங்கு பெண்ணே முழங்கு

ஓற்றுமையே எங்கள் பலம். பிளவே எங்கள் பலவீனம்.

  • இந்தத் திறமை உங்களுக்குள் இருக்கிறது .
  • பயன் படுத்தி கொள்ளுங்கள் .
  • வளர்த்து கொள்ளுங்கள்.
  • அக்னி ஸ்திரீ பெண்கள் நன்கு முழங்கும் போது , அது சமுதாய நன்மைகளைப் பயக்கும்  
  • ஒற்றுமை ஓங்கும் 
  • மன இறுக்கம் நீங்கும் . 
  • விவரிக்க முடியாத உத்வேகம் உண்டாகும் . 
  • தலைமை பண்புகள் வளரும் . 
  • கூட்டாக முழங்குங்கள்  (சேர்ந்து முழங்குங்கள் , கோஷம் எழுப்புங்கள் ) 
  • கூட்டமாக முழங்குங்கள் 
  • ஒவ்வொரு வரியாக முன்னணி வகிக்கும் பெண் முழங்குவார்   . மற்ற  பெண்கள் எதிரொலியாக முழங்கவேண்டும்   . 
  • இதோ பாவேந்தர் பாரதிதாசன் பாடல் வரிகள் சில 

    சங்கே முழங்கு சங்கே முழங்கு 
    சங்கே முழங்கு சங்கே முழங்கு 

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

    இந்த பாடல் வரிகள் உண்டாக்கிய தாக்கத்தை அறிவீர்கள் 

    எல்லா இடங்களிலும் இந்த முழக்கங்களை முழங்க வேண்டும் (raising slogans – sloganeering). போராட்டங்கள் போது கோஷம் (Slogans) எழுப்புவார்களே. அதே போன்றுதான் கோஷ வார்த்தைகள் சுருக்கமாக இருக்க வேண்டும். குட்டி கவிதை வடிவிலும் இருக்கலாம். இதைச் செய்யும் போது பிரச்சனைகள் பற்றித்தான் எழுப்ப வேண்டும். தனிப்பட்ட மனிதர்களைப் பற்றி இருக்கக்கூடாது. உதாரணம் “பெண்களே நாட்டின் கண்களே ஒன்று சேருங்கள்”. நீங்களே பிரச்சனைக்கேற்றவாறு உருவாக்கிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். இதோ ஒரு சாம்பிள் பட்டியல். கிளிக் லிங்க் . “பெண்ணே முழங்கு” “அணங்கே முழங்கு”

    உணர்வுமிகு உரை வாசகங்களை பயன்படுத்தி

    கூட்டாக கோஷம் எழுப்புங்கள் வானளவு  முழங்குங்கள் (Cell Rejuvenation)

    முழக்கங்களை எழுப்புவதால் பல பயன்கள்.

    • உங்கள் மனதில் அது விதை போன்று விழுந்து எண்ணங்களாக மாறி பசுமரத்தில் அடித்த ஆணி போன்று பதிவாகிறது.
    • உங்கள் ஆழ்மனதில் அடித்தளத்தில் சென்று அமர்ந்து அதிசயங்களை உருவாக்குகிறது.
    • உங்கள் உடலிலுள்ள பல்லாயிரக்கோடி உயிரணுக்களிலும் உட்கார்ந்து எண்ணற்ற அற்புதங்களை நிகழ்விக்கின்றது.
    • உங்கள் நடை, உடை, பாவனையில் நம்ப முடியாத மாற்றங்களை உறுதியாக உருவாக்கும்.
    • இது ஏதோ பள்ளி பாடம் படித்து ஒப்பிப்பது போல் அல்ல. மனதில் உள்வாங்கி அனுபவித்து முழங்க வேண்டிய ஒன்று.
    • கோஷம் வாரம் ஒருமுறை அல்லது கூட்டம் தொடங்கியவுடன் ஒரு பயிற்சிக்காக செய்ய வேண்டும்.
    • இதைப் பார்த்தும் படிக்கலாம். ஆனால் மனதில் நிறுத்தி பார்க்காமலேயே அடைமழை போன்ற பொழிய வேண்டும். அப்போதுதான் அதிக பயன்கிட்டும்.

    இந்த பயிற்சியை அக்னி ஸ்திரீ பெண்கள் செய்யும் பொழுது இதைத் தங்கள் கண்ணால் காணும் கொடியவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் திகழும்.

    • தொழிற் சங்கங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வங்கித் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தின் பொழுது ஸ்லோகன் எழுப்புகிறார்கள். அவர்கள் வெற்றிக்கு இது ஒரு முக்கியக் காரணம். கோஷம் எழுப்பி உத்வேகம் பெறுகிறார்கள். அவர்கள் என்றுமே ஜாதி, மதம், மொழி, இன-பேதக்ளைப் பாராட்டுவதில்லை. பெண்களும் பேதங்கள் அறவே பார்க்கக் கூடாது. அக்னி ஸ்திரீ பெண்கள் கோஷம் எழுப்புவதில் போட்டி நடத்தலாம். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கலாம்.

    அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே உரைநடை முழக்கங்கள் எழுப்பும் திறமை கொண்ட பெண்கள் நிச்சயம் இருப்பார்கள். அதற்குரிய கம்பீர குரல் வளமும் அவர்களிடையே ஏற்கனவே இருக்கும். முதலில் அவர்களின் இந்த திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. இந்த திறமை உள்ளவர்கள் இல்லையென்றால் மிக மிக நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு இத்திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ பெண்களின் திறமை வங்கியாக (Talent Bank) திகழும்

    அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக முழக்கங்களை முழங்க வேண்டும்.

    • பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் பற்றி முழக்கங்களை முழங்க வேண்டும்.
    • மது அடிமைகளை மாற்றும் தங்கள் பணியில் உத்வேகம் பெற முழக்கங்களை முழங்க வேண்டும்.
    • ஒற்றுமை வளர்க்க குழுவாக கூட்டமாக முழக்கங்களை முழங்குதல் அவசியம். முழக்கங்களை முழங்குதல் ஒரு அற்புத “செல்-புரோகிராமிங்” (Cell Programming) என்பதை நினைவில் கொண்டு முழங்க வேண்டும். முன் நின்று முழங்குபவர்களுக்கு அதாவது முழங்கும் நிகழ்சியில் தலைமையாக முழக்கங்களை முழங்குபவர்களுக்கு தலைமை குணாதிசயங்கள் வளரும். முன்னணி பணியை ஒருவர் பின் ஒருவராக (by turns) செய்ய வேண்டும்.
    • இப்போதே காண்க இணைப்பில் (LINK) Model demonstrations .

    http://mainichi.jp/english/articles/20151214/p2a/00m/0na/002000c

    http://www.voanews.com/a/india_youth_keep_spotlight_on_violence_against_women_one-billion-rising-demonstrations-/1603743.html

    பெண்ணே முழங்கு
    அணங்கே முழங்கு முழக்கம் முழங்கு 

    முழங்கு முழங்கு

    பெண்ணே முழங்கு

    அணங்கே முழங்கு

    முழங்கு முழங்கு

    முழக்கம் முழங்கு 

    முழங்கு முழங்கு

    முழக்கம் முழங்கு 

    “ஒவ்வொருவரும் அனைவருக்காக,

    அனைவரும் ஒருவருக்காக”

    உயர்வோம்………………..உயர்த்துவோம்

    ஒற்றுமையே நம் பலம்

    பிளவே நம் பலவீனம்

    பெண்ணுக்கு கருவிலும் ஆபத்து,

    தெருவிலும் ஆபத்து.

    தாமதிக்கப்பட்ட நீதி

    மறுக்கப்பட்ட நீதி

    உன் பெண்ணை வெளியே போகாதே என்று சொல்லாதே.

    கண்ணியமாக நடந்துக் கொள்ள உன் மகனுக்கு அறிவுரை வழங்கு.

    வீட்டை மாற்றுவோம்

    நாட்டை மாற்றுவோம்

    பாடுபடுவோம்……..பாடுபடுவோம்

    உயர்த்தப்பட்ட, மதிக்கப்பட்ட, பாராட்டப்பட்ட, போற்றப்பட்ட, கௌரவிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட பெண்கள் என்ற நிலையை அடைய பாடுபடுவோம்……..பாடுபடுவோம்.

    பெண்களே!

    ஒன்று சேருங்கள்; உங்களை மாற்றுங்கள்;

    வீட்டை மாற்றுங்கள்; ஊரை மாற்றுங்கள்;

    நாட்டை மாற்றுங்கள்; உலகத்தை மாற்றுங்கள்.

    செய்யாதே………செய்யாதே…….

    பெண்களுக்குக் கொடுமைகள் செய்யாதே

    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு பணிதான். உங்கள் வீட்டை மாற்றுங்கள். நாடே மாறும் அதிசயத்தை நீங்கள் காண்பீர்கள்.

    போதையூட்டும் பேய்,

    நாக்குக்கினிய நஞ்சு,

    இதமளிக்கும் எமன்,

    சொக்க வைக்கும் சாத்தான்.

    பெண்களே!

    இவ்வுலகின் கண்களே!!

    ஒன்று சேருங்கள்!

    இன்றே சேருங்கள்!!

    மதியைப் பயன்படுத்தி

    மதுவை மனிதர்கள்

    மறந்திடச் செய்வோம்

    நேற்று

    தமிழர் என்று ஒரு இனம் உண்டு,

    தனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு

    இன்று

    தமிழர் இனம் ஒன்று உண்டு

    அது குடித்து குடித்து அழிந்துக் கொண்டிருக்கிறது.

    நாளை

    தமிழர் என்று ஒரு இனம் உண்டு,

    அது வானளவு உயர்ந்தது

    speeches_page_banner01

    அக்னி ஸ்திரீ பெண்கள்

    தன்னம்பிக்கை உறுதிமொழி

    • நாள்தோறும், நிமிடந்தோறும், நொடிதோறும்,
    • கயவர்களின் கபடச் செயல்களால்,
    • கொடுமைக்குள்ளாகி ,
    • தாங்க முடியாத வேதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு,
    • பிரச்சினைகள் என்ற படுகுழியில் தள்ளப்பட்டு,
    • சுனாமியை ஒத்த நிஜ வாழ்க்கை சோதனைகளால் உருக்குலைக்கப்பட்டு,
    • அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு,
    • வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையிலும்,
    • தொய்வடையாத தன்னம்பிக்கையோடும்,
    • தளராத மனதோடும்,
    • இடைவிடாது முயற்சிகளை மேற்கொண்டு,
    • பிரளயமே வந்தாலும் பின் வாங்கமாட்டேன்,
    • தடைக்கற்களைப் படிக்கற்களாக்குவேன்,
    • பிரச்சினைகளைப் பரிசுகளாக்குவேன்,
    • எனக்கு வரும் சோதனைகளை வாழ்க்கையின் சாதனைகளாக மாற்றுவேன்,
    • தோல்விகளை வெற்றிகளாக்குவேன்,
    • சோகத்தை மகிழ்ச்சியாக்குவேன்,
    • என்று நான் மற்ற அக்னி ஸ்திரீ சகோதரிகளோடு சேர்ந்து சூளுரைக்கிறேன்.

    இருக்கும் நிலை

    கசக்கப்பட்ட

    நசுக்கப்பட்ட

    பொசுக்கப்பட்ட

    பெண்கள்

    வதைக்கப்பட்ட

    சிதைக்கப்பட்ட

    புதைக்கப்பட்ட

    நங்கையர்கள்

    நொறுக்கப்பட்ட

    நெறுக்கப்பட்ட

    நெரிக்கப்பட்ட

    மங்கையர்கள்

    பழிக்கப்பட்ட

    இழிக்கப்பட்ட

    கழிக்கப்பட்ட

    மகளிர்

    துரத்தப்பட்ட

    துன்புறுத்தப்பட்ட

    தூற்றப்பட்ட

    மாதர்கள்

    வெட்டப்பட்ட

    தட்டப்பட்ட

    குட்டப்பட்ட

    வனிதையர்கள்

    மிரட்டப்பட்ட

    மிதிக்கப்பட்ட

    முடக்கப்பட்ட

    மடந்தைகள்

    ஒதுக்கப்பட்ட

    ஒடுக்கப்பட்ட

    ஒழிக்கப்பட்ட

    ஏந்தல்கள்

    (கூட்டங்களில் உரக்கப் படிக்கவும்)

    இருக்கப் போகும் நிலை

    ஒன்றுப்பட்ட, உயர்த்தப்பட்ட, மதிக்கப்பட்ட, பாராட்டப்பட்ட, போற்றப்பட்ட, கௌரவிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட பெண்கள்

    (கூட்டங்களில் உரக்கப் படிக்கவும்)

    பெண்கள் பாதுகாப்புத் தொண்டு நிறுவனம்

    ஓ பெண்ணே! ஓ பெண்களே !!

    ஓ பெண்ணே!

    ஒரு கல் தடுக்கி நீ விழுந்துவிடலாம்.

    ஓ பெண்களே !!

    உங்களால் ஒரு மலையையே தகர்க்க முடியும்.

    ஓ பெண்ணே!

    ஆற்று வெள்ளம் உன்னை அடித்துச் செல்லலாம்.

    ஓ பெண்களே!!

    உங்களால் ஒரு ஆற்றின் திசையையே திருப்ப முடியும்.

    ஓ பெண்ணே!

    ஒரு காமூகனால் உனக்கு இன்னல் வரலாம்.

    ஓ பெண்களே!!

    உங்களால் தகுந்த தண்டனை வாங்கித் தர முடியும்.

    ஓ பெண்ணே!

    ஒரு கொடியவனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

    ஓ பெண்களே!!

    உங்களால் அனைத்து கொடியவர்களிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

    ஓ பெண்ணே!

    நீ தனியாக பாடினால் மற்றவர்கள் அதை ரசிக்காமல் போலாம்.

    ஓ பெண்களே!!

    நீங்கள் சேர்ந்து இசைத்தால் அனைவரும் கரவொலி எழுப்புவார்கள்.

    அழிக்கும் மது

    குடலைக் குலைக்கிறதுமனதை மழுங்க வைக்கிறது

    இதயத்தை இடிக்கிறதுகல்லீரலைக் காயப்படுத்துகிறது

    நுரையீரலை நொறுக்குகிறதுகணையத்தைக் கசக்குகிறது

    நாக்கை நசுக்குகிறதுகண்களைக் குருடாக்கிறது

    சுவாசத்தைச் சுருக்குகிறதுபற்களைப் பதம் பார்க்கிறது தசைகளைத் தாக்குகிறதுசிறுநீரகத்தைச் செயலற்றதாக்குகிறது அறிவை அரிக்கிறது. நெஞ்சை நஞ்சாக்குகிறது

    கூட்டங்களில் உணர்ச்சி உரைகளை உணர்வுப் பூர்வமாக முழங்கவும் இணைந்து இழைந்து முழங்கவும்

    நரக நிலையைக் கடுகளவு குறைத்தாலே போதும், மலையளவு சொர்க்க நிலை வந்தது போன்ற உணர்வு வரும்”

    “இந்தியர்கள் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள்

    பெண்கள் இன்னும் சுதந்திரம் பெறவில்லை”

    பெண்களே!

    ஒன்று சேருங்கள்; உங்களை மாற்றுங்கள்;

    வீட்டை மாற்றுங்கள்; ஊரை மாற்றுங்கள்;

    நாட்டை மாற்றுங்கள்; உலகத்தை மாற்றுங்கள்.


    கேளுங்கள் முழக்கங்கள்  ஒலி லிங்க்

    கிளிக் லிங்க்

    கிளிக் லிங்க்

    இந்த முழக்கங்களின் உண்மை ஒலி

    அது போன்றே முழங்குங்கள்

    மது இருந்தால் இருக்கும்!

    மது இருந்தால் இருக்கும்………….!

    வயிற்றில் ஈரத் துணியிருக்கும்

    குடும்பத்தில் பட்டினியிருக்கும்

    வீட்டில் வறுமையிருக்கும்

    வெளியே கடனிருக்கும்.

    மது இருந்தால் இருக்கும்……..!

    சிந்தனையில் குழப்பமிருக்கும்

    சொல்லில் தடுமாற்றமிருக்கும்

    செயலில் தொய்விருக்கும்

    பணியில் தேக்கமிருக்கும்.

    மது இருந்தால் இருக்கும்……..!

    பழகுவதில் பாகுபாடிருக்கும்

    குடும்பத்தில் விரிசலிருக்கும்

    உறவினரிடத்தில் உராய்விருக்கும்

    ஊரில் அவப்பெயரிருக்கும்.

    மது இருந்தால் இருக்கும்……..!

    உள்ளத்தில் களைப்பிருக்கும்

    உடலில் நோயிருக்கும்

    முகத்தில் சோகமிருக்கும்

    இதயத்தில் சாத்தானிருக்கும்

    மது இல்லையென்றால் இருக்கும்

    மது இல்லையென்றால் இருக்கும்……!

    உலையில் அரிசியிருக்கும்

    தட்டில் உணவிருக்கும்

    பெட்டியில் பணமிருக்கும்

    வாழ்க்கையில் செழிப்பிருக்கும்.

    மது இல்லையென்றால் இருக்கும்……!

    சிந்தனையில் தெளிவிருக்கும்

    சொல்லில் சுத்தமிருக்கும்

    செயலில் துடிப்பிருக்கும்

    பணியில் ஆற்றலிருக்கும்.

    மது இல்லையென்றால் இருக்கும்……!

    பழகுவதில் இனிமையிருக்கும்

    குடும்பத்தில் பாசமிருக்கும்

    உறவினரிடத்தில் பந்தமிருக்கும்

    ஊரில் மதிப்பிருக்கும்.

    மது இல்லையென்றால் இருக்கும்……!

    உள்ளத்தில் உறுதியிருக்கும்

    உடலில் ஆரோக்கியமிருக்கும்

    முகத்தில் அன்பிருக்கும்

    இதயத்தில் தெய்வமிருக்கும்.

    • சுவரில் எழுதி வைக்கவும்
    • அச்சடித்து வினியோகிக்கவும்
    • கூட்டங்களில் படிக்கவும்
    • நல்விளைவுகளைக் கண்டு வியக்கவும்