Select Page

7ஆம் அறிவு முத்ரா நியூரோ மந்த்ரா

7ஆம் அறிவு  மன முத்திரை மொழி

முத்திரை இந்தியாவில் உருவானது. தியானம் செய்யும் பொழுது நாம் விரல்களை வெவ்வேறு நிலையில் வைத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முத்திரைக்கும் ஒரு பலன் உண்டு. அதே போன்று பரதநாட்டியம் ஆடும் பொழுதும் இந்த முத்திரைகள் உண்டு. ஒவ்வொரு விரல் நுனியும் ஒரு உடல் உறுப்புடன் தொடர்புடையது. அதே நேரத்தில் மனமுத்திரை மொழி என்றால் நீங்கள் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு குணாதிசயம் என்று வரையறுத்து உங்களை நீங்களே புரோகிராம் செய்துக் கொள்ளலாம்.

ஆள்காட்டி விரல் – தன்னம்பிக்கை

நடுவிரல் – சக்தி

மோதிர விரல் – சாதனை

சுண்டுவிரல் – அன்பு

கட்டைவிரல் – எல்லாவற்றுக்கும் பொதுவான விரல்

கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை அழுத்தமாகப் பற்றி “நான் தன்னம்பிக்கையானவள்” என்று ஐந்து முறை உரக்கக் கூறவும். கட்டை விரலால் நடுவிரலை அழுத்தமாகப் பிடித்து “நான் சக்தி உடையவள்” என்று ஐந்து முறை உரக்கக் கூறுங்கள். கட்டைவிரலால் மோதிர விரலைப் பற்றி, “நான் சாதனை புரிபவள்” என்று ஐந்து முறை உரக்கக் கூறக்க கூறுங்கள். கட்டை விரலால் சுண்டு விரலை அழுத்தி “நான் அன்பானவள்” என்று ஐந்து முறை உரக்கக் அன்பாக கூறுங்கள். இதுபோன்று இடைவிடாது ஒருநாளைக்கு ஐந்து நிமிடம் உங்கள் விரல்களுக்கு பயிற்சி அளியுங்கள். சில மாதங்கள் கழித்து ஒருநாள் எப்பொழுதாவது களைப்பாக இருந்து அதே நேரத்தில் நீங்கள் பணிகள் செய்ய வேண்டியிருந்தால் கண்களை மூடிக்கொண்டு கட்டை விரலால் நடுவிரலை அழுத்திப் பிடித்தால் ஆழ்மனது இதை புரிந்துக் கொண்டு உடல் முழுவதும் உங்களுக்கு சக்தியை அனுப்பும். அதே போன்று கை விரல்களை அழுத்தமாக மூடிக்கொண்டு “என்னால் முடியும்” என்று ஐந்து முறை உரக்கக் கூறுங்கள். கடைசியாக கட்டை விரலை மட்டும் வானத்தை பார்த்தது போல் (Thumbs Up) “வெற்றி நிச்சயம்” என்று ஐந்து முறை கூறிக்கொள்ளுங்கள். இப்படி உடலை அசைத்து வேகமாக கூறும்பொழுது இந்த ஆக்கப்பூர்வமான கட்டளைகள் உங்கள் ஆழ்மனதை மட்டுமின்றி உங்கள் உடலில் உள்ள பல்லாயிரக்கோடி செல்களிலும் சென்று அமர்ந்துவிடும். பிறகென்ன வாழ்க்கையில் வெற்றியைதான் நீங்கள் காண்பீர்கள். (காண்க நிர்மல் 7-வது அறிவு பயிற்சி வீடியோ)

7-ஆம் அறிவு முத்ரா நியூரோ மந்த்ரா

முத்திரை இந்தியாவில் உருவானது. தியானம் செய்யும் பொழுது நாம் விரல்களை வெவ்வேறு நிலையில் வைத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முத்திரைக்கும் ஒரு பலன் உண்டு.

உங்கள் கவனம் முத்திரை மீதே இருக்க வேண்டும். காட்டில் தியானம் செய்பவர்கள் மாத கணக்கில் உண்ணாமல் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். உணவின்றி நீர் அருந்தாமல் தியானம் செய்வார்கள். ஆழ் மனதின் அற்புதமே அது அவர்கள் பிரீத்தெரியன் நிலையை அடைந்தவர்கள். (Breatharian ; a person who believes that it is possible, through meditation, to reach a level of consciousness where one can obtain all the nutrients one needs from the air or sunlight..) முத்திரையுடன் கூடிய தியானம் செய்து அதன் பலனாக சுவாசிக்கும் காற்றிலிருந்தும், சூரிய ஒளியிலிருந்தும், குடிநீரிலிருந்தும் உணவு சத்துக்களைப் பெற முடியும் என்பதே இவர்கள் கூற்று. பிரீத்தெரியன் உண்மை நம்புகிறவர்களும் உண்டு. அதை ஏற்றுக் கொள்ளாதவர்களும் உண்டு. ஆனால் இவர்கள் சாதனைகளைப் பார்க்கும் போது வியப்பே மேலிடுகிறது.

கிளிக்: Ram Bahadur Bomjon

கிளிக்: Prahlad Jani

கிளிக்: Jasmuheen

Practice of Rosicrucianism

கிளிக்: Paracelsus

அதே போன்று பரதநாட்டியம் ஆடும் பொழுதும் இந்த முத்திரைகள் உண்டு. பரத நாட்டியம் ஆடும் சிறுமிகள் களைப்படையாமல் இரண்டு மணி நேரம் ஆடுவார்கள். ஒரே நடனம் 20 நிமிடம் இடைவிடாது ஆடுவார்கள். அதற்கும் காரணங்கள் பல. ஒரு முக்கிய காரணம் நாட்டிய முத்திரை. இந்த அனைத்து அதிசயங்களுக்கும் முத்திரையும் ஒரு காரணம்.

ஒவ்வொரு விரல் நுனியும் ஒரு உடல் உறுப்புடன் தொடர்புடையது. அதே நேரத்தில் மனமுத்திரை மொழி என்றால் நீங்கள் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு குணாதிசயம் என்று வரையறுத்து உங்களை நீங்களே புரோகிராம் செய்துக் கொள்ளலாம்.

ஆள்காட்டி விரல் – தன்னம்பிக்கை

நடுவிரல் – சக்தி

மோதிர விரல் – சாதனை

சுண்டுவிரல் – அன்பு

கட்டைவிரல் – எல்லாவற்றுக்கும் பொதுவான விரல்

  1. கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை அழுத்தமாகப் பற்றி “நான் தன்னம்பிக்கையானவள்” என்று ஐந்து முறை உரக்கக் கூறவும்.
  2. கட்டை விரலால் நடுவிரலை அழுத்தமாகப் பிடித்து “நான் சக்தி உடையவள்” என்று ஐந்து முறை உரக்கக் கூறுங்கள்.
  3. கட்டைவிரலால் மோதிர விரலைப் பற்றி, “நான் சாதனை புரிபவள்” என்று ஐந்து முறை உரக்கக் கூறக்க கூறுங்கள்.
  4. கட்டை விரலால் சுண்டு விரலை அழுத்தி “நான் அன்பானவள்” என்று ஐந்து முறை உரக்கக் அன்பாக கூறுங்கள்.
  5. அதே போன்று கை விரல்களை அழுத்தமாக மூடிக்கொண்டு “என்னால் முடியும்” என்று ஐந்து முறை உரக்கக் கூறுங்கள்.
  6. கடைசியாக கட்டை விரலை மட்டும் வானத்தைப் பார்த்தது போல் (Thumbs Up) “வெற்றி நிச்சயம்” என்று ஐந்து முறை கூறிக்கொள்ளுங்கள்.

இதுபோன்று இடைவிடாது ஒருநாளைக்கு ஐந்து நிமிடம் உங்கள் விரல்களுக்கு பயிற்சி அளியுங்கள்.

உங்களுக்கு தன்னம்பிக்கை, சக்தி, சாதனை, அன்பு இதில் எது தேவையோ அதற்கு சற்று அதிக நேரம் ஒதுக்குங்கள் (5 நிமிடம்). ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு குணாதியம் என்று அடையாளப்படுத்துகின்றோம். இங்கு கொடுத்துள்ள நான்க மன உடல் தேவைகளுக்கு ஏற்றால் போல் விரல்களுக்கு வேலை அல்லது பொறுப்பு தரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மனிதர்களுக்கு அடிப்படை தேவை. உங்களுக்கு இவை அனைத்தும் உள்ளது என்றால் விரல்களுக்கு வேறு பணிகள் தரலாம். உதாரணமாக மோதிர விரலுக்கு “பரந்த உள்ளம்” என்று ஒதுக்கலாம்.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் எப்பொழுதாவது களைப்பாக இருந்து அதே நேரத்தில் நீங்கள் பணிகள் செய்ய வேண்டியிருந்தால் கண்களை மூடிக்கொண்டு கட்டை விரலால் நடுவிரலை அழுத்திப் பிடித்தால் ஆழ்மனது இதை புரிந்துக் கொண்டு உடல் முழுவதும் உங்களுக்கு சக்தியை அனுப்பும்.

இப்படி உடலை அசைத்து வேகமாக கூறும்பொழுது இந்த ஆக்கப்பூர்வமான கட்டளைகள் உங்கள் ஆழ்மனதை மட்டுமின்றி உங்கள் உடலில் உள்ள பல்லாயிரக்கோடி செல்களிலும் சென்று அமர்ந்துவிடும்.

மன முத்திரை மொழி தியானம்

மேலே குறிப்பிட்டதெல்லாம் உரக்க சொல்கிறீர்கள்.

அதையே மனதிற்குள்ளேயே கூறிக்கொள்வதுதான் தியானம்.

இதற்கும் அதே பலன் கிடைக்கும். (காண்க நிர்மல் 7-வது அறிவு பயிற்சி வீடியோ).

  1. கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை அழுத்தமாகப் பற்றி “நான் தன்னம்பிக்கையானவள்” என்று ஐந்து முறை மனதிற்குள்ளேயே கூறுங்கள்.

    உங்கள் கவனம் முதலில் “தன்னம்பிக்கை-முத்திரை” மீது இருக்க வேண்டும். (அதாவது கட்டை விரல் ஆள்காட்டி விரலுடன் இணைந்தது). தன்னம்பிக்கை என்ற வார்த்தையை மனதிற்குள் கூற வேண்டும். அப்போது உடல் முழுவதும் உடல் செல்கள் முழுவதும் தன்னம்பிக்கையை உணர வேண்டும்.
  2. கட்டை விரலால் நடுவிரலை அழுத்தமாகப் பிடித்து “நான் சக்தி உடையவள்” என்று ஐந்து முறை மனதிற்குள்ளேயே கூறுங்கள். உங்கள் கவனம் முதலில் “ சக்தி-முத்திரை “  மீது  இருக்கவேண்டும். .  (அதாவது கட்டை   விரல் நடு   விரலுடன் இணைந்தது) சக்தி  என்ற வார்த்தையை மனதிற்குள்  கூற வேண்டும் . அப்போது உடல் முழுவதும் உடல் செல்கள் முழுவதும் சக்தி பரவுவதை  உணர வேண்டும் 

 

  1. கட்டைவிரலால் மோதிர விரலைப் பற்றி, “நான் சாதனை புரிபவள்” என்று ஐந்து முறை மனதிற்குள்ளேயே கூறுங்கள்.

உங்கள் கவனம் முதலில் “ சாதனை -முத்திரை “  மீது  இருக்கவேண்டும். .  (அதாவது கட்டை   விரல் மோ  திர    விரலுடன் இணைந்தது) சாதனை   என்ற வார்த்தையை மனதிற்குள்  கூறவேண்டும் . அப்போது உடல் முழுவதும் உடல் செல்கள் முழுவதும் சாதனையால் உண்டாகும் பெருமித உணர்வு  பரவுவதை  உணர வேண்டும்  

  1. கட்டை விரலால் சுண்டு விரலை அழுத்தி “நான் அன்பானவள்” என்று ஐந்து முறை மனதிற்குள்ளேயே அன்பாக கூறுங்கள்.

உங்கள் கவனம் முதலில் “ அன்பு -முத்திரை “  மீது  இருக்கவேண்டும். .  (அதாவது கட்டை   விரல் சுண்டு    விரலுடன் இணைந்தது) அன்பு   என்ற வார்த்தையை மனதிற்குள் அன்புடன்   கூற வேண்டும் . அப்போது உடல் முழுவதும் உடல் செல்கள் முழுவதும் அன்பு  பரவுவதை  உணர வேண்டும்  

  1. அதே போன்று கை விரல்களை அழுத்தமாக மூடிக்கொண்டு (முஷ்டி  -முத்திரை) “என்னால் முடியும்” என்று ஐந்து முறை மனதிற்குள்ளேயே கூறுங்கள்.

உங்கள் கவனம் முதலில் “ முஷ்டி  -முத்திரை “  மீது  இருக்கவேண்டும். .  (அதாவது Holding all fingers together. your  fist ) அன்பு   என்ற வார்த்தையை மனதிற்குள் அன்புடன்   கூற வேண்டும் . அப்போது உடல் முழுவதும் உடல் செல்கள் முழுவதும் “எதையும் சாதிக்க முடியும்”  என்ற உணர்வு பரவுவதை  உணர வேண்டும் 

  1. கடைசியாக கட்டை விரலை மட்டும் வானத்தைப் பார்த்தது போல் (Thumbs Up) “வெற்றி நிச்சயம்” என்று ஐந்து முறை மனதிற்குள்ளேயே கூறிக்கொள்ளுங்கள்.

உங்கள் கவனம் முதலில் “ தம்ப்ஸ் அப் ”  மீது  இருக்கவேண்டும். .   வெற்றி    என்ற வார்த்தையை மனதிற்குள்   கூற வேண்டும் . அப்போது உடல் முழுவதும் உடல் செல்கள் முழுவதும் “வெற்றி ”   உணர்வு பரவுவதை  உணர வேண்டும் 

இதுபோன்று இடைவிடாது ஒருநாளைக்கு ஐந்து நிமிடம் உங்கள் விரல்களுக்குப் பயிற்சி அளியுங்கள்.

வெற்றி உங்களைத் துரத்தும் 

பிறகென்ன வாழ்க்கையில் வெற்றியைதான் நீங்கள் காண்பீர்கள். (காண்க நிர்மல் 7-வது அறிவு பயிற்சி வீடியோ)

மன முத்திரை மொழி தியானம்

மேலே குறிப்பிட்டதெல்லாம் உரக்க சொல்கிறீர்கள். அதையே மனதிற்குள்ளேயே கூறிக்கொள்வதுதான் தியானம். இதற்கும் அதே பலன் கிடைக்கும். (காண்க நிர்மல் 7-வது அறிவு பயிற்சி வீடியோ).