Select Page

7ஆம் அறிவு பிரார்த்தனை

7-ஆம் அறிவு வழிபாடு (7th Sense Prayer)

7ஆம் அறிவு பிரார்த்தனை

“More things are wrought by prayer than this world dreams of.”

என்றார் லார்ட் டென்னிசன் . அதாவது எதிர்பார்ப்பதற்கு மேலே பிரார்த்தனையால் பலன் கிட்டும் என்றார் அவர் . 7ஆம் அறிவு பிரார்த்தனை உங்கள் உடல் செல்ஸ் , ஆழ்மனது ஆகிய பகுதிகளுக்குள் சென்று அற்புத மன மாறுதலையும் உடல் ,மாறுதல்களையும் கொண்டு வந்து சேர்க்கும் . அது மட்டுமல்ல , காஸ்மிக் உலகத்தின் (அண்டம்) சக்திகளைத் திரட்டி வந்து சேர்க்கும் 

ஏழாவது அறிவு பிரார்த்தனை

7-ஆம் அறிவு பிரார்த்தனை – எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. ஆனால் உங்கள் மதச் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டிருக்கிறதா? மற்றும் மீறாமல் இருக்கின்றதா? என்பதைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. உங்கள் பொறுப்பு மட்டுமே. இந்த தகவல் எவரையும் நூற்றுக்கு நூறு மாற்றிவிடும். மது அடிமைகளை மீட்க இது ஒரு அற்புத மந்திரக்கோல்.

எப்பொழுதும் வஜ்ராசனை நிலையில் அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். கற்பூரம் ஏற்றுங்கள். (கிருஸ்துவர்கள் மெழுகுவர்த்தி). அந்த வெளிச்சத்தையே உற்றுப் பாருங்கள். பிறகு “நாளுக்கு நாள் என் கண்பார்வை சிறப்படைகிறது. கண்களே நன்றி, கடவுளே நன்றி” என்று கூறிக் கொள்ளுங்கள். பிறகு பூஜை மணியை எடுத்து ஓசை உண்டாக்குங்கள். (கிருஸ்துவர்கள் சர்ச் மணியோசை) அந்த மணியோசை காதில் விழும் பொழுது “நாளுக்கு நாள் என் காது கேட்கும் திறன் சிறப்படைகிறது. என் காது கேட்கும் திறனே நன்றி, கடவுளே நன்றி” என்று கூறுங்கள். ஊதுபத்தியின் நறுமணத்தை அனுபவியுங்கள். “நாளுக்கு நாள் என் நுகரும் சக்தி சிறப்படைகிறது. நுகரும் சக்தியே நன்றி, கடவுளே நன்றி” என்று கூறிக் கொள்ளுங்கள். பிறகு கற்பூரத்தை கையில் தொட்டு கண்ணில் ஒத்தடம் கொடுத்து, ““நாளுக்கு நாள் என் தொடும் உணர்வு சிறப்படைகிறது. என் தொடும் உணர்வே நன்றி, கடவுளே நன்றி” என்று கூறிக் கொள்ளுங்கள். அடுத்ததாக பிரசாதத்தை எடுத்து (கிருஸ்துவர்களுக்கு அப்பம்) வாயில் போட்டு, சற்றே சுவைத்து, “நாளுக்கு நாள் என் சுவைக்கும் அறிவு சிறப்படைகிறது. சுவைக்கும் அறிவே நன்றி, கடவுளே நன்றி” என்று கூறிக் கொள்ளுங்கள்.

பிறகு வஜ்ராசனாவில் நிமிர்ந்து உட்கார்ந்து “இதையெல்லாம் தெரிய வைத்த ஆறாவது அறிவே நன்றி, கடவுளே நன்றி” என்று கூறிக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு கைகளையும் தரையில் வைத்து குனிந்து தரையை நெற்றியால் தொடுங்கள். இஸ்லாமியர்கள் இப்படித்தான் தொழுகை செய்கிறார்கள். “பூமி அன்னை எனக்கு நன்மைகளையும், என் நெற்றி வழியாக எனக்குத் தருகிறாள்” என்று கூறிக் கொள்ளுங்கள். பிறகு நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை வானத்தை பார்த்தவாறு தொடையில் வைத்துக் கொண்டு, “ஆகாயம் எனக்கு அனைத்து நன்மைகளையும் என் உடலில் பாய்ச்சுகிறது” என்று கூறிக்கொள்ளுங்கள். பிறகு கடைசியாக உங்கள் பிரார்த்தனை. கண்கள் மூடிய நிலையில் உங்கள் பிரார்த்தனையை கூறுங்கள். உங்களுக்கு வீடு வேண்டுமென்றால் அதை பிரார்த்தனையாக கூறுங்கள். ஒரே ஒரு எச்சரிக்கை. உங்களுக்கு வீடு வேண்டுமென்று பிரார்த்தனை செய்யாதீர்கள். “எனக்கு வீடு கொடுத்தமைக்கு நன்றி” என்று கூறுங்கள்.

ஒரு சூட்சமத்தை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உரையாடுவது கட்டளையிடுவது உங்கள் ஆழ்மனதிற்கு. ஆழ்மனதிற்கு நிகழ்காலம் மட்டுமே தெரியும். எதிர்காலம் தெரியாது. உங்களிடம் அடிமைப்பட்டிருக்கும் பூதம் இது. இருவர் குத்துசண்டை போட்டார்கள். ஒருவன் சொன்னான், “நான் ஜெயிப்பேன்” என்றான். இன்னொருவன், “நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். முடிவில் வெற்றி பெற்றது யார் என்றால், ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் என்று நிகழ்காலத்தில் கூறியவர்தான். (காண்க நிர்மல் 7-வது அறிவு பயிற்சி வீடியோ).

7ஆம் அறிவு பிரார்த்தனை