சொற்களும் அதன் விளைவுகளும்
தளராத மனம்
அயராத உழைப்பு
தணியாத ஆர்வம்
வற்றாத சிந்தனை
“Setback is a setup for a comeback”
நாம் சிந்திக்கும் போது மற்றும் பேசும் பொது நம் ஆழ் மனதும் நம் உடல் செல்ஸ் அனைத்தும் பப்ரோக்ராம் ஆகின்றன . ஆகவே இவற்றில் கவனம் தேவை
இந்த தகவல் எவரையும் நூற்றுக்கு நூறு மாற்றிவிடும். மது அடிமைகளை மீட்க இது ஒரு அற்புத மந்திரக்கோல்.
எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது நம் சிந்தனைகள். நம் சிந்தனை என்பது நமக்குள்ளேயே நல் மாற்றங்களையோ அல்லது பாதிப்புகளையோ உருவாக்குகின்றன. சிந்திப்பது என்பது ஒரு பேச்சாளரின் உத்வேகப்படுத்தும் சொற்பொழிவைக் கேட்பதற்கு சமம். சிந்தனையின் சொற்பொழிவு ஒவ்வொரு மனதிற்குள்ளேயேயும் எப்போதும் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பேச்சாளரின் உரை ஒரு மனிதனை நல்ல காரியமோ அல்லது தீய காரியமோ செய்ய தூண்டுதலாக இருப்பது போன்றுதான் நமது சிந்தனையின் சொற்பொழிவும்கூட. சிந்தனை எப்படி சொற்பொழிவு என்று கேட்கலாம். சிந்திக்கும் பொழுது அந்த ஒலியற்ற சொற்பொழிவினை கேட்பது நமது மூளை குறிப்பாக ஆழ்மனது மற்றும் பல்லாயிரக் கோடிக்கணக்கான உயிரணுக்கள் (Cells). நம் சிந்தனைகள் அனைத்தும் ஆழ்மனதில் பதிவாகி கொண்டே இருக்கின்றன.
ஆழ்மனதின் கொள்ளளவு (Capacity) எவ்வளவு என்றால், அது பிரபஞ்சத்தின் அளவு. பிரபஞ்சத்திற்கு அளவே கிடையாது. ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அதேபோன்றுதான் ஆழ்மனதின் கொள்ளளவு.
மறதியால் அவதிக்குள்ளாகுபவர்கள் ஏராளமானோர். ஒரு விஷயத்தை மறந்து விட்டதாக மூளையை கசக்கி பிழிவார். சற்று நேரம் அமைதியாக இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது விஷயங்களில் கவனம் செலுத்தும் போதோ அந்த மறந்த விஷயம் தானாகவே நினைவுக்கு வரும். இது ஆழ்மனதின் அற்புதம்.
அனைத்து ஆழ்மனது பதிவுகளுமே விதைகள் போன்றவை. சக்தி வாய்ந்த விதைகளும் உண்டு. சக்தியற்ற விதைகளும் உண்டு. சக்தி உடைய விதைகள் மனிதனை ஒரு நல்ல நடவடிக்கையோ அல்லது கெட்ட நடவடிக்கையோ எடுக்க தூண்டும். அப்படி சக்தி உடைய விதைகள் அவன் ஆழ்மனதில் விழும் போது, அவன் தூங்கும் போதும், அந்த விதைகள் தூங்குவது இல்லை. வேலை செய்துக் கொண்டே இருக்கும். அவை வளர்ந்துக் கொண்டே இருக்கும். ஒரு ஆலமரம் போன்று வளரும்.
நல்ல சிந்தனைகள் மட்டுமே உருவாவது எப்படி? என்பதற்கும், விடைகள் ஒன்றினை உருவாக்கி உள்ளோம். அதன் பெயர் “மனித ஜன்னல்கள்” (Human Windows). ஒரு குழந்தையை நன்றாக, ஒழுக்கமான, அறிவான மனிதனாக வளர அந்த குழந்தையின் பெற்றோர்கள் இந்த மனித ஜன்னல்கள் மீது கவனத்தை செலுத்த வேண்டும். அது தனியாக விளக்கப்பட்டுள்ளது.
ஆழ்மனது மட்டும் இன்றி, நமது உடலில் உள்ள பல்லாயிரக் கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் மனிதன் சிந்திக்கும் பொழுது அந்த சிந்தனை என்ற சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
இந்த உயிரணுக்கள் உருவாவதும், மறைவதும் ஒவ்வொரு நொடியும் நடந்துக் கொண்டு இருக்கின்றது. அதனால் இதை நாம் அற்பமாக கருதலாம். ஆனால் இந்த உயிரணுக்கள் இயற்கையின் படைப்பிலேயே மிக, மிக அதிசயமான ஒன்று. குளோனிங் மூலம் கண்ணுக்குத் தெரியாத ஒரே ஒரு ஸ்டெம் செல் உயிரணுவை (Stem Cell) கொண்டு இன்னொரு முழுமையான உயிரை உருவாக்க முடியும். இதை விஞ்ஞானத்தின் மூலம் அதாவது குளோனிங் மூலம் விலங்குகளின் உயிரணுக்களைக் கொண்டு முழுமையான விலங்குகளையே விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள்.
உதாரணத்திற்கு ஒரு மரக்கிளையை எடுத்துக் கொள்ளுங்கள். அது உடையலாம். அதன் இலைகள் உதிரலாம். ஆனால் அவை மீண்டும் துளிர்த்து வளருகின்றன. அதற்கு காரணம் என்னவென்றால் செடிகளில் இருக்கும் செல்கள் அந்த ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகின்றன.
A Stem Cell is Like The Stem Of A Plant:
Here’s an easy way to understand stem cells. Imagine the stem of a plant that grows, branching out into leaves, flowers and fruits. On windy days, the branches can break. In some seasons the leaves dry up and fall. Despite this wear and tear, the stem finds a way to grow back to its original Self.
அதே போன்றுதான் மனித உடலில் உள்ள அஸ்திவாரமே ஸ்டெம் உயிரணுக்கள். நம் உடலின் ஒவ்வொரு பிரிவிலும் அதாவது இரத்தம், எலும்புகள், தோல், தசைகள் அவை அனைத்துமே “ஸ்டெம் செல்” என்று அழைக்கப்படும் மாஸ்டர் செல்கள் மூலம் உருவாகின்றன. (Similarly, stem cells are the very foundation of the human body. Every part of our body including blood, bones, skin and muscles are formed from master cells known as stem cells).
இரத்த செல் வேறு, எலும்பு செல் வேறு, தசை செல் வேறு, மூளை செல் வேறு. ஆனால் இவை பழுதடைந்தால் அங்கு ஸ்டெம் செல்களை மருத்துவ ரீதியாக செலுத்தி அதை புதுப்பிக்கலாம். நோய்க்கு உள்ளாக்கப்பட்டவரின் எலும்பு மஜ்ஜையிலிருந்து (Bone Marrow) ஒரு உயிரணுவை எடுத்து அவர் உடலிலே மருத்துவ ரீதியாக செலுத்திவிடலாம். அதன் பிறகு நடப்பவை அனைத்துமே அற்புதங்கள்தான்.
இந்த ஸ்டெம் செல்களுடைய அற்புத குணாதிசயங்கள். (These stem cells have three important qualities)
- அவை மேலே குறிப்பிட்டுள்ள வெவ்வேறு பிரிவுகளில் அந்த பிரிவுகளுக்கு ஏற்ற செல்களாக தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்கின்றன. (Have the capacity to turn into any type of cell in the body such as muscle cell, bone cell, blood cell, tissues and brain cell).
- இன்னொரு அதிசயம் என்னவென்றால், இந்த செல்கள் தங்களுக்குத் தாங்களே விருத்தி செய்துக் கொள்ளுகின்றன. (Can replicate or copy themselves limitlessly).
- மற்றொரு அதிசயம் விரைவாக உடலில் பழுதடைந்த பகுதியை இந்த செல்கள்தான் பழுது பார்க்கின்றன. (Are responsible for repair and regeneration functions in the body).
உதாரணமாக ஒரு மனிதனுக்கு குணப்படுத்த முடியாத அளவிற்கு நோய் உண்டாகும் பொழுது ஸ்டெம் செல்களை மருத்துவ ரீதியாக உள்ளே செலுத்தி குணப்படுத்தலாம். எலும்பு மஜ்ஜை (Bone Marrow), பற்கள், புற இரத்தம், தொப்புள் கொடி ஆகியவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து பயன்படுத்தி குணப்படுத்தலாம். (Owing to these qualities, stem cells are taking center stage in medicine today. Research has proven that stem cells can be used in the treatment of many medical conditions. In the past 50 years, over a million people world over have benefitted from the power of stem cells and are now living a renewed life. The human body has different sources of stem cells such as the bone marrow, tooth, peripheral blood and the umbilical cord).
இன்று ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயின் தொப்புள் கொடியை பாதுகாத்து குளிர்சாதனப் பெட்டிகளில் (Bank Safety Locker போன்று) வைக்கின்றார்கள். அந்த தாயுக்கோ அல்லது குழந்தைக்கோ குறிப்பிட்ட நோய்கள் வரும் போது, பாதுகாத்து வைக்கப்பட்ட தொப்புள் கொடியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களில் இருந்து ஒரே ஒரு உயிரணுவை எடுத்து பயன்படுத்தினால் போதும், அந்த நோய் குணமாகிவிடும். (The umbilical cord that forms the bond between the mother and the baby inside the womb is the richest source of lifesaving stem cells. There is every reason to preserve the umbilical cord blood and the tissue at the time of birth).
இந்த ஆராய்ச்சியில் இன்று “LifeCell” என்ற நிறுவனம் முன்னனியில் உள்ளது.
பல பேருக்கு சர்க்கரை வியாதி மற்றும் விபத்துக்களால் கால்கள் பழுது அடைந்துவிடும். கால்கள் செப்டிக் ஆகிவிடும். பிறகு அந்த காலை வெட்டி அகற்றினால்தான் அவர் உயிர் பிழைப்பார் என்ற நிலை வரும் பொழுது அந்த காலை அறுவை சிகிச்சை செய்து வெட்டி எடுத்துவிடுவார்கள். அதனால் அவர் உடல் ஊனமுற்றவராகி விடுவார்.
ஆனால் LifeCell -ல் நடக்கும் அதிசயம் என்னவென்றால், பழுதுபட்ட காலுக்கு சொந்தக்காரருடைய எலும்பு மஜ்ஜை (Bone Marrow) உயிரணுவை எடுத்து, அந்த பழுதுபட்ட காலில் செலுத்துகிறார்கள். உள்ளே செலுத்தப்பட்ட உயிரணு உள்ளே சென்று உடனடியாக வேலையை ஆரம்பிக்கிறது. அந்த உயிரணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகுகிறது. பழுதுபட்ட உயிரணுக்களின் இடத்தை அது எடுத்துக் கொள்கிறது. பழுதுபட்ட உயிரணுக்கள் வேகமாக மறையத் தொடங்குகின்றன. பிறகு என்ன?
இதுவரை LifeCell மருத்துவ சேவையால் இராமசந்திரா மருத்துவமனையின் E1 வார்டில் வெட்டப்பட வேண்டிய நிலையிலிருந்த பழுதுபட்ட காலோடு சேர்க்கப்பட்ட 500-க்கும் (2015) மேற்பட்டவர்கள் பூரணம் குணம் பெற்று மருத்துவமனையிலிருந்து தங்கள் கால்களால் நடந்து சென்றார்கள்.
நம்முடைய ஆறறிவில், தொடு உணர்வு (Touch Sense) மிகவும் முக்கியமானது. பார்வை (Sight) திறன் கொண்ட கண்கள் இரண்டே இரண்டுதான். கேட்கும் சக்தி உடைய காதுகள் (Hearing) இரண்டே இரண்டுதான். ஆனால் தொடு உணர்வு (Touch Sense) உயிரணுக்களோ பல்லாயிரக்கோடி.
நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை நம் உடலில் இருக்கும் உயிரணுக்கள் எப்படி உணருகின்றன என்பதற்கு உதாரணங்கள் “புல்லரிப்பு” என்பது ஒரு ஆக்கப்பூர்வமான உணர்வு. அதே போன்று “புளங்காகிதம்”. எல்லாவற்றுக்கும் மேலாக “மெய்சிலிர்த்தல்” (Goosebumps).
அதே நேரத்தில் ஒரு விபத்தை பார்க்கும் போது “அதிர்ச்சி” உணர்வு, உயிரணுக்களால் உடனே உணரப்படுகின்றன. உயிருக்கு ஆபத்து வரும் போது “பய உணர்வு” (உடல் நடுங்குவது – Shivers & Gooseflesh- a pimply state of the skin with the hairs erect, produced by cold or fright), எவரையாவது இழக்கும் போது உண்டாகும் “சோக உணர்வு”. மற்றவர்களிடம் பேசுவதை தடுக்கும் “கூச்ச உணர்வு” (உடல் சுருங்கும்), பரபரப்பு (Heebie-jeebies – a state of nervous fear or anxiety) மற்றும் “எரிச்சல்”, “அருவெறுப்பு” இப்படி அனைத்து உணர்வுகளும் உயிரணுக்களால் உணரப்படுகின்றன, பதிவு செய்யப்படுகின்றன. அந்த தாக்கம் மனிதனுக்கு நல்ல அல்லது கெட்ட பாதிப்பினை உண்டாக்குகின்றன.
“நான் அறிவாளி”, “நான் சாதிக்கப் பிறந்தவன்”, “என்னால் முடியும்” இதுபோன்ற சிந்தனைகள் உருவாகும் மனதின் சொந்தக்காரர் நிச்சயம் வெற்றி அடைவார். காரணம் என்னவென்றால் அந்த சிந்தனை என்பது ஒரு சொற்பொழிவு. அந்த சொற்பொழிவை கூர்ந்து கவனித்து கேட்பது ஆழ்மனதும், உயிரணுக்களும் மட்டுமே.
“நான் தண்டம்”. “எனக்கு பேசத் தெரியாது”. “எனக்கு கூச்ச சுபாவம்”. “நான் தொட்டால் எதுவும் துலங்காது” என்று தங்கள் மனதில் தங்களுக்குத் தாங்களே எதிர்மறை சான்றிதழ்களை (Negative Certification) வழங்கிக் கொள்பவர்கள் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் தோல்விக்கு மேல் தோல்வியையே சந்திப்பார்கள். இது ஒரு மாபெரும் ஆராய்ச்சி.
வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. அதிர்வுகளை (Vibes) உண்டாக்கும் சக்தி வாய்ந்த வார்த்தைகள் உயிரணுக்குள் சென்று தன் வேலையை ஆரம்பிக்கும். இதற்காகவே நாங்கள் “முத்திரை, மனம், மந்திரம்” (Mudhra, Mind, Mantras) என்ற ஒரு நுட்பத்தை “7-ம் அறிவு” வகுப்பில் 1999-ஆம் ஆண்டிலிருந்து கற்றுத் தருகின்றோம். இதனால் பங்கேற்றவர்கள் உடைய வாழ்க்கை எப்படி அடியோடு மாறியது என்பதை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 7-ம் அறிவு கையேட்டில் பார்க்கவும். இதனால் பலன் அடைந்தவர்கள் உயர் அரசு அதிகாரிகள், சின்னத்திரை நட்சத்திரங்கள், தனியார் துறை பணியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், முக்கியமாக ரவுடி என்ற பெயரெடுத்தவர்கள்.
“நான் சக்தி உடையவன்”, “தன்னம்பிக்கை உடையவன்”, “நான் சாதனையாளன்”, “என்னால் முடியும்”, “வெற்றி நிச்சயம்” போன்ற சக்தி வாய்ந்த வார்த்தைகளை முத்திரைகளுடன் சேர்த்து பயன்படுத்தி உணர்வுப்பூர்வமாக சொல்லும் பொழுது இந்த வார்த்தைகள் ஆழ்மனதிலும் உயிரணுக்களிலும் பதிவாகின்றன. பதிவாகி முன்னேறுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கின்றன. நினைவூட்டுகின்றன.
நாம் மனவளக்கலை மன்றத்தினர் யாரை சந்தித்தாலும் “வாழ்க வளமுடன்” என்று கூறுவார்கள். சொல்லுபவர் முகத்திலும், கேட்பவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குவதை நாம் பார்க்கலாம். பிரம்மகுமாரி சகோதரிகள் “ௐ சாந்தி” என்று கூறுவார்கள். சாந்தத்தை அவர்கள் முகம் முழுமையாக பிரதிபலிக்கும். சாந்தத்தை ஒரு நொடியில் உணர்ந்து ஒரு நல் பாதிப்பிற்கு நாம் உள்ளாகிறோம்.
“வாழ்க வளமுடன்” என்று நீங்கள் ஒருவருடன் கூறும் பொழுது அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றாலும் நீங்கள் கூறும் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்பது உங்கள் ஆழ்மனதும் உங்கள் உடலில் உள்ள பல்லாயிரக்கோடி உயிரணுக்களும்தான். எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் இந்த இரு வார்த்தைகளை பயன்படுத்துகின்றாரோ அந்த அளவிற்கு கூறுபவரின் வாழ்க்கையில் வளம் சேரும். மகிழ்ச்சி பொங்கும்.
அதே போன்று யாரையாவது பார்த்து “நாசமாக போ” என்று சபித்தால், அந்த சாபம் எதிராளிக்கு சேருவதற்கு முன்னால் சொல்பவரின் காதுகளையே சென்று அடைகின்றது. அவர் உடல் செல்கள் உணருகின்றன. நிச்சயமாக இந்த வார்த்தைகள் அவருடைய உடலில் இரசாயண மாற்றங்களை உண்டாக்கும் (Chemical Reaction). அவருடைய உடல் கூறு பாதிக்கப்படும். மனம் வலிமை இழந்துவிடும். அனைத்து மதங்களும் இதைப் பற்றி அழுத்தமாக கூறியுள்ளன. “நம் எண்ணங்கள் போன்றுதான் நம் வாழ்க்கை அமையும்” என்று.
இனி எந்த கூட்டத்திலும் பேசுவதற்கு முன்னால் பேச்சாளர்கள் தங்கள் குரலுக்கு வளம் கூட்டி, சபையோரைப் பார்த்து அழுத்தத்துடன், கனிவுடன் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விட்டு இப்படி கூறிப் பார்க்கலாம். “வாழ்க வளமுடன்”….. “நலமுடன்”….. “மகிழ்ச்சியுடன்”….. “செழிப்புடன்”….. “சிறப்புடன்”….. “வாழிய வாழியவே” என்று கூறுவது நல்லது. அவர் கூறி முடிப்பதற்குள் கைதட்டல் காதை பிளக்கும். கூட்டத்தின் ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட சக்தி வார்த்தைகளை பயன்படுத்தி அனைவரையும் உற்சாகமான மனநிலைக்கு எடுத்து செல்ல முடியும். பேச்சாளரின் உரை வெற்றிப் பெறும்.
மனோதத்துவ நிபுணர்கள் பிரச்சனைகளோடு வருபவர்களுக்கு நிச்சயம் ஒரு ஆலோசனை வழங்குவார்கள். “காலையில் தூக்கம் கலையும் பொழுது கண்களை திறக்காமலேயே நீங்கள் மனதிற்குள்ளேயே சக்தி வாய்ந்த ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை ஐந்து அல்லது பத்து முறை கூறிக் கொள்ள வேண்டும்” (During Alpha State of Mind) என்று கூறுவார்கள். இதை சுய பரிந்துரை (Auto Suggestion) என்பார்கள். இது படுக்கை உறுதிமொழி (Bed Affirmation) என்று வகைப்படுத்தி உள்ளோம்.
சர்க்கரை வியாதி உள்ள ஒருவர் தனக்குத்தானே “எனக்கு சர்க்கரை வியாதி இல்லை” என்று கூற கூடாது. அது ஒரு எதிர்மறைக் கூற்று. ஆழ்மனதும், உயிரணுக்களும் அப்படிப்பட்ட வார்த்தைகளை தவறாக புரிந்துக் கொள்ளும். சர்க்கரை வியாதியை அவர் நாடுகிறார் அல்லது விரும்புகிறார் என்று தவறாக புரிந்துக் கொண்டு சர்க்கரை வியாதியினை அதிகப்படுத்தும். மாறாக “என்னுடைய கணையம் தேவையான அளவு இன்சுலினை தருகின்றது” என்றே கூற வேண்டும். சுய பரிந்துரை செய்ய வேண்டும் (Auto Suggestion).
“நான் கடன் தொல்லையிலிருந்து விடுபடுகிறேன்” என்று சுய பரிந்துரை செய்யக்கூடாது. கடன் தொல்லை மேலும் அதிகமாகும். “நான் செல்வ செழிப்போடு இருக்கிறேன்” என்று சுய பரிந்துரை செய்து கொள்ள வேண்டும்.
இதுவரை ஆழ்மனது மற்றும் உடல் உயிரணுக்கள் நாம் சிந்திப்பவை, பார்ப்பவை, கேட்பவை, ருசிப்பவை, தொடுபவை அனைத்தையுமே பதிவு செய்து கொள்கின்றன என்று குறிப்பிட்டிருந்தோம். NLP என்ற நுணுக்கம் 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் எங்கும் NLP பயிற்சி முலம் சொல்லி தரப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் ஒரு மனிதன் தலைமை குணாதிசயங்களைப் பெறலாம். தொடர்ந்து வெற்றி பெறலாம். இந்த நுணுக்கத்தில் அடிப்படையான உண்மையாக கருதப்படுவது எதுவென்றால், ஒரு மனிதனுக்கு தகவல்கள் அவன் கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தோலில் உள்ள உயிரணுக்கள் வழியாக அவன் மூளைக்குச் சென்றடைகின்றன என்பதே.
ஜப்பான் நாட்டைச் சார்ந்த “மசாரோ எமோட்டோ” ஒரு பெரிய ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கீழ்க்கண்ட தன் கண்டுபிடிப்புகளை பதிவு செய்துள்ளார்.
மனிதன் 70% தண்ணீர். அவன் சிந்தனை மற்றும் சொற்களுக்கு ஏற்றால் போல் உடலில் உள்ள நீர், நன்மை அல்லது தீமை பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதே அவர் கண்டுபிடிப்பு.
அருவிக்கு நேராக சென்று நல்ல தண்ணீரை பிடித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உறைய செய்து அந்த துகள்களை கேமிரா பொருத்தப்பட்ட மைக்ரோ ஸ்கோப் மூலம் “மசாரோ எமோட்டோ” படம் எடுத்தார். ஒவ்வொரு நீர் துளியும் அழகான, விதவிதமான மின்னும் கிரிஸ்டல்களாக மாறிய அதிசயத்தைக் கண்டார். அதே போன்று அழுக்குத் தண்ணீரை வைத்து பரிசோதனை செய்த போது அவை கிரிஸ்டல்களாக மாறவில்லை.
தண்ணீரே “நன்றி” என்று கூறி குளிர்சாதனப் பெட்டியில் உறைய வைத்தார். கிரிஸ்டல்கள் உருவாகின. “தண்ணீரே நீ மோசம்” என்று கூறி பரிசோதனை செய்த போது கிரிஸ்டல்கள் உருவாகவில்லை.
இவருடைய கண்டுபிடிப்புக்கு பேராதரவும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. 2014-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். ஆனாலும் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்துக்கள் தண்ணீரை பஞ்பூதங்களில் ஒன்றாக கருதுவதால் இந்த ஆராய்ச்சி இந்துக்களிடையே நல் வரவேற்பினை பெற்றது.
அதனால்தான் நம் மூதாதையர்கள் மழை பெய்து அது நமக்கு இடையூறு விளைவித்தால் “மழையை நிந்திக்கக் கூடாது” என்று அறிவுரை வழங்கினார்கள். அப்படி செய்தால் மழை பெய்வது நின்றுவிடும் அவர்கள் ஐதீகம்.
மசோரா எமோட்டாவின் ஆராய்ச்சியில் உண்மை இருப்பதாக நாம் ஏற்றுக் கொண்டால், நம் சிந்தனையிலும் சொற்களிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பது நம் மூளை, ஆழ்மனது, உடல் உயிரணுக்கள் மட்டும் அல்ல, நம்முடைய உடலில் உள்ள தண்ணீரும்கூடதான் (Humans are made up of 71% of water).
இந்த வார்த்தைகளுக்கு வலிமை இருக்கின்றதா? என்று இன்னமும் சந்தேகப்படுபவர்களுக்கு இதோ சில நிருபிக்கப்பட்ட உதாரணங்கள்.
1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி புரிந்தது. அதற்கு பிறகு இரண்டு கட்சிகளால் மட்டுமே ஆட்சிக்கு வர முடிந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு மனோதத்துவ ரீதியான காரணம் அந்த கட்சிகளின் பெயர்களில் “முன்னேற்றம்” என்ற வார்த்தை இருப்பதே (திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்). மற்ற கட்சிகளால் ஆட்சிக்கு வர முடியவில்லை. “முன்னேற்றம்” என்ற வார்த்தைக்கு அவ்வளவு வலிமை உண்டு. இந்த இரண்டு கட்சிகளுக்கும் நதி மூலம், ரிஷி மூலமாக இருந்தது “திராவிடர் கழகம்”. “முன்னேற்றம்” என்ற வார்த்தை பெயரில் இல்லாத காரணத்தால் என்னவோ திராவிட கட்சிக்கு ஆட்சிக்கு வந்து மாற்றங்கள் உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே ஆரம்பத்திலிருந்து இல்லாமல் போய்விட்டது.
தமிழ்நாட்டில் சினிமா துறை என்றாலே இருவர்தான் இரண்டு தூண்கள் போன்றவர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர், இன்னொருவர் சிவாஜி. இரண்டு பேருமே சரித்திர சாதனையாளர்கள். இருவரும் முதல்வராக வர வேண்டும் என்று கனவு கண்டவர்கள்.
மலையாள மொழியினை தாய்மொழியாக கொண்ட எம்.ஜி.ஆர் அவர்களால் முதல்வராக முடிந்தது. பேச முடியாத நிலையிலும் முதல்வராக பணியாற்றினார். இந்திய சரித்திரத்தில் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு முதல்வராக திகழ்ந்தார்.
“எங்கள் தாய்மொழி தமிழ் அற்புத மொழி” என்ற எண்ணம் அனைத்து தமிழர்களுக்கும் உண்டானது நடிகர் சிவாஜி அவர்கள் தமிழ்மொழியை உச்சரித்த போதுதான், வசனம் பேசிய போதுதான் என்றாலும் அவரால் முதல்வராக முடியவில்லை.
எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வர் ஆனதுக்கும், சிவாஜி அவர்கள் முதல்வர் ஆகாமல் போனதுக்கும் பல காரணங்கள் உண்டு. அடிப்படை காரணமாக இருந்தது அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், அதில் இடம் பெற்ற காட்சிகள், முக்கியமாக படத்தின் பாடல்கள். இந்த பாடல்களை பாடியது திரு.ஜிவிஷி அவர்களாக இருக்கலாம். இந்த பாடலில் மகிழ்ச்சி அல்லது சோக உணர்வோடு ஒன்றிப் போய் நடித்தவர்கள் யார் என்றால் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி அவர்கள்.
இதோ இருவர் நடித்த பாடல்களின் ஒரு சாம்பிள் பட்டியல்.
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பாடி பாத்திரத்தில் ஒன்றிப் போய் நடித்த பாடல்கள் | திரு.சிவாஜி அவர்கள் பாடி பாத்திரத்தில் ஒன்றிப் போய் நடித்த பாடல்கள் |
“உலகம் பிறந்தது எனக்காக” | “யாருக்காக, இது யாருக்காக” |
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” | “ஏன் பிறந்தாய் மகனே” |
“புதிய வானம், புதிய பூமி” | “எங்கே நிம்மதி” |
“அச்சம் என்பது மடைமையடா” | “சட்டி சுட்டதடா, கை விட்டதடா” |
“நான் ஆணையிட்டால்” | “வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்” |
“நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு” | “வீடு வரை உறவு” |
இதுபோன்று பல உள்ளன. எம்.ஜி.ஆர் அவர்களின் “நான் ஆணையிட்டால்” என்ற பாடல்களின் வரிக்கு சக்தி (Energy) அதிகமாக இருக்கும். அந்த பாடலை கேட்டாலோ, பாட்டுக் காட்சியை பார்த்தாலோ எவருக்கும் தன்னம்பிக்கை தலைதூக்கும். அதுவே எம்.ஜி.ஆர் அவர்களை முதல்வராக்கி ஆட்சி பிடிக்க வைத்தது. அனைவருக்கும் ஆணையிடும் முதல்வர் பதவியில் கொண்டு சேர்த்தது. “உலகம் பிறந்தது எனக்காக” என்ற பாடல் அவருக்கு “தமிழகம் பிறந்தது எனக்காக” என்று மாற்றியது.
திரு.சிவாஜி அவர்கள் நடிப்பின் பல்கலைக்கழகம், நடிப்புலகத்தின் சக்கரவர்த்தி. உணர்ச்சி ததும்பும் பாத்திரங்களை அவருக்கு கொடுத்தார்கள். அந்த பாத்திரமாகவே அவர் உருமாறினார். உணர்ச்சி பிழம்பாகவே அவர் மாறினார். சிவாஜியும் மகிழ்ச்சியான பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். அந்த பாடல்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் சோகமான காட்சிகளில் நடிக்கும் பொழுது அவர் நடிப்பில் ஒன்றி அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார்.
இது மூடநம்பிக்கையை சார்ந்தது அல்ல, விஞ்ஞான பூர்வமானது. இதை ஆங்கிலத்தில் செல் ஜுவனேஷன் (Cell-Juvenation) என்போம்.
இது போன்ற உதாரணங்கள் ஏராளம்.
TMS மிக சிறந்த பாடகர். MGR-க்கு MGR குரலிலேயே பாடுவார். சிவாஜிக்கு சிவாஜி குரலிலேயே பாடுவார். கொடி கட்டி பறந்தார். ஒரு பாடல் பாடியவுடன் அவருடைய சாம்ராஜ்யம் சரிந்தது. அந்த பாடலின் பெயர் “நான் ஒரு ராசியில்லா ராஜா”. படம் பெயர் “ஒரு தலை ராகம்”.
சந்திரபாபு காமெடி நடிகர். கதாநாயகர்களுக்கு இணையாக கருதப்பட்டவர், சென்னையில் அமைச்சர்கள் வாழும் கிரீன்வெஸ் சாலையில் “நானும் அவர்களுக்கு இணையாக வாழ்வேன்” என்று கூறி, அங்கேயே ஒரு நிலத்தை வாங்கி மாடி வீடு கட்டினார். ஆனால் அந்த வீட்டிற்கு அவர் குடிப்போகவே இல்லை. வாங்கிய கடன் காரணமாக அந்த வீடு ஏலத்தில் போனது. நம்முடைய விவாதத்தின்படி அதற்கு காரணம் அப்போது அவர் ஒரு படத்தைத் தயாரித்து நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் பெயர் “மாடி வீட்டு ஏழை”.
CLIFF Richard மிகப்பெரிய பாடகர். இப்போது (2016) அவருக்கு வயது 76. அவர் உலகப் பிரசித்தி பெற்ற பாடல் “Bachelor Boy” be a bachelor boy until your dying day”. பொருள் “எப்போதும் பிரம்மச்சாரியாகவே இரு”. அவருக்கு இன்று வரை திருமணமே ஆகவில்லை. அவர் பலமுறை முயற்சித்தும் திருமணம் ஆகவில்லை.
வார்த்தைகளுக்கு வலிமை உண்டு. இது மூட நம்பிக்கை அல்ல. விஞ்ஞானம். நீங்கள் கூறும் வார்த்தைகளை உங்கள் ஆழ்மனதும் உடல் செல்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை நீங்கள் தூங்கும் போது வேலை செய்கின்றன. வீட்டில் பெரியவர்கள் கூறுவார்கள், “அவசரப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு என் வீட்டை விற்கப் போறேன்” என்று சொல்லி விடாதீர்கள். “உண்மையிலேயே வீடு உங்கள் கையை விட்டு போய்விடும்” என்பார்கள்.
இதோ செடிகளின் செல்கள் மற்றும் மனிதனின் செல்கள் ஆகியவற்றின் படங்கள்
செடிகளுடைய உயிரணுக்களை புரோகிராம் செய்ய முடியுமா?
காலையில் கண் திறப்பதற்கு முன்னால் “ஒவ்வொரு நாளும் நான் முன்னேற்றம் அடைந்து வருகின்றேன்” என்று படுக்கை உறுதிமொழியை மனதிற்குள்ளேயே ஐந்து முறையாவது கூறிக் கொள்ள வேண்டும். இதன் விளைவுகள் அற்புதமாக இருக்கும்.
பொறுத்தது போதும், பொங்கியெழு
பெண்கள் தரையில் அமர்ந்திருக்க வேண்டும். கைகளை உயர்த்தி வேகமாக எழுந்திருக்க வேண்டும். தங்களுக்குத் தாங்களே “பொறுத்தது போதும், பொங்கியெழு என்று கூற வேண்டும்” இது போன்று கூட்டாக பெண்கள் ஐந்துமுறை செய்தால் உடலில் இருக்கும் அனைத்து செல்களுக்கும் உத்வேகம் பிறக்கும். மின்சார அதிர்வுகள் உண்டாகும். (காண்க நிர்மல் 7-வது அறிவு பயிற்சி வீடியோ).
கிளிக் லிங்க்
“தாழ்த்தப்பட்டவர்கள்” முன்னேற
கிளிக் லிங்க்
EXPERIMENTS OF NIRMAL
Note:Document not found