7ஆம் அறிவு காமெடி ரெமடி
Comedy Remedy
“வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் “ என்று பெரியோர்கள் சொன்னார்கள் . அது உண்மை என்று விஞ்ஞானம் நிரூபித்துள்ளது . சிரித்து கொண்டே இருப்பவர்கள் இரத்தத்தில் நச்சு பொருட்கள் தங்காது . சிரித்து கொண்டே இருந்தால் எண்டார்பின் நம் உடலில் சுரக்கிறது அது அது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மை உள்ள கழிவுகளை அகற்றிவிடுகிறது என்பதே விஞ்ஞான கண்டுபிடிப்பு. சிரிப்பு வரவழைப்பது நகைச்சுவையே , அதுவும் இயற்கையான நகைச்சுவையே . ஆகவே அனைவர்க்கும் நல்ல உடல் நலத்துடன் வாழ தேவை நகைச்சுவையே .
நகைச்சுவை உணர்வு COMEDY REMEDY
இந்த தகவல் எவரையும் நூற்றுக்கு நூறு மாற்றிவிடும். மது அடிமைகளை மீட்க இது ஒரு அற்புத மந்திரக்கோல்.
நகைச்சுவை உணர்வோடு எப்போதும் இருங்கள். தமிழ்நாட்டு பழமொழி “வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்”. இதோ இந்த பழமொழிக்கு விஞ்ஞான விளக்கம்.
HORMONE HARMONY
நம் உடலில் பலவிதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. நன்மை செய்பவையும் உண்டு. தீமை செய்யும் ஹார்மோன்களும் உண்டு. ஹார்மோன்கள் எண்ணற்றவை. அதன் மூலத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நல்ல / கெட்ட பாதிப்புகளை உண்டாக்கும் அந்த மூன்று வகைகள்.
- Thyroid hormone
- Sex hormones
- Stress hormones
சிலர் உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்றுவார்கள். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் எடை கூடிக்கொண்டே போகும். அதற்கு முக்கியக் காரணம் உடலில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன்கள். ஆனால் வாய் விட்டு சிரிக்கும் போத ஒரு எண்டார்பின் சுரக்கிறது. அது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மை உள்ள கழிவுகளை அகற்றிவிடும்.
ஆகவேதான் நாம் அனைவரும் நகைச்சுவை உணர்வோடு எப்போதும் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். அதே போன்று வயிற்று எரிச்சல் தீங்கு விளைவிக்கும் ஹார்மோன்கள் நம் உடலில் சுரந்து நமக்கு உடல் பாதிப்பை உண்டாக்கும். ஆனால் நாம் யாரைப் பார்த்து வயிற்று எரிச்சல் படுகின்றோமோ அவர் மகிழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருப்பார்.
வேண்டாம் வயிற்று எரிச்சல்
வேண்டும் நகைச்சுவை