Select Page

7ஆம் அறிவு அறிமுகம்

நிர்மல் ஏழாவது அறிவு © அறிமுகம்

7-ஆம் அறிவு அற்புத நுணுக்கங்கள்

நுணுக்கங்கள்:

………………………………………………..? உடன் எவ்வளவு நேரம் நீங்கள் செலவிடுகிறீர்கள்? ஏழாவது அறிவு என்றால் என்ன?

6-ஆம் அறிவு

இயல்பாக மற்றும் தானாக இயங்கும் வலது மற்றும் இடது மூளை& புறமனம் மற்றும் ஆழ்மனம்.

7-ஆம் அறிவு

ஒருவருடைய வலது / இடது மூளைகள், புறமனம் மற்றும் ஆழ்மனம் ஆகியவற்றை தானாகவே இயக்குவது. ஆறு அறிவுகளை மாற்றி, மாற்றி இயக்குவது மற்றும் இசைப்பது, 7-ஆம் அறிவு

ஆறு அறிவு

  • பார்க்கும் திறன் (VISUAL)
  • கேட்கும் திறன் (AUDITORY)
  • உணரும் திறன் (KINESTHETIC)
  • நுகரும் திறன் (OLFACTORY)
  • சுவைக்கும் திறன் (GUSTATORY)
  • சிந்திக்கும் திறன் (ANALYTICIL & CREATIVE)

மாறாகவும், கோர்வையாகவும் சிந்திக்கும் திறன் கொண்ட

மனிதனின் “இரண்டு மூளைகள்” மற்றும் “இரண்டு மனதுகள்” இறைவனது படைப்பில் சிறப்பானவையாகும்.

வேண்டுமென்றே “மாறாகவும், கோர்வையாகவும்” இடது, வலது மூளைகளை புறமனம் மற்றும் ஆழ்மனம் உபயோகித்து சிந்திக்கும் திறனே “ஏழாவது அறிவு” எனப்படும்.

ஆறாவது அறிவு

மனித மூளை கடவுளால் உருவாக்கப்பட்ட கணினி. நம்மை விட நம்மை சார்ந்தவர்கள் சொல்வதையே அதிகமாக கேட்டு செயல்படுகிறது.

ஏழாவது அறிவு

மூளை என்ற கணினியை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே தன்னிச்சையாக செயல்படுவது

ஏழாவது அறிவு எப்படி?

ஏழாவது அறிவின் உச்சகட்டம் மனித உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களை புதுப்பித்து அவற்றை நமது ஆரோக்கியான, வளமான மற்றும் செழித்தோங்க “ஏழாவது அறிவு” உதவுகிறது.

மனிதன்,

  • பறவையைக் கண்டான். விமானம் படைத்தான்.
  • பாயும் மீனைக் கண்டான். படகினை செய்தான்.
  • எதிரொலி கேட்டான். வானொலி படைத்தான்.
  • கண்ணைக் கண்டான். கேமராவை உருவாக்கினான்.
  • காதைப் பார்த்தான். தொலைபேசி செய்தான்.

கிட்டத்தட்ட மனிதன் கண்டுபிடிப்புகளில் பல இயற்கை தந்த உதாரணத்தைப் பார்த்து அவன் காப்பி அடித்ததே. எதனைக் கண்டு கம்ப்யூட்டர் செய்தான். சந்தேகம் இல்லாமல் மனித மூளையைப் பார்த்துதான். இதில் சிறந்தது எது மனித மூளையா? அல்லது கணிணி என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டரா? என்று விவாதம் செய்வது முட்டாள்தனம். ஏனென்றால் சர்வ வல்லமை படைத்த அந்த கம்ப்யூட்டரை உருவாக்கியதே ஒரு மனித மூளைத்தானே. மனித மூளையைப் பார்த்து கணிணி உருவாக்கியது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் கணிணியில் இருந்து நாம் மூளையை ஒப்பிடுவோம். அதனால் பல வியத்தகு உண்மைகள் உங்களுக்கு புலப்படும்.

COMPUTER HUMAN BEING

Hard ware (வன்பொருள்) Brain

Soft ware (மென்பொருள்) Mind

Language (மொழி) Language

Programmes (நிகழ்ச்சி)Education, Training Programmes

Applications (விண்ணப்பம்)Applications

Output (பலன்) Output

Key Board (கணிணி தட்டச்சுப் பலகை) Five senses

PRAYER

Opens your Right brain & Sub-conscious Mind

பிரார்த்தனை உங்கள் வலது மூளையையும் & உள் மனத்தையும் திறக்கின்றன.

நொடிக்கு மன அலைகள் (Brain Frequency Wave / Cycles Per Second)

1 to 4 = DELTA (Sleep)) (டெல்டா – தூங்கும் பொழுது)

4 to 7 = THETA (Edge of Sleep) (தீட்டா – தூக்கத்திலிருந்து மெல்ல விழித்துக் கொள்ளும் பொழுது)

7 to 14 = ALPHA (ஆல்பா – அரைத்தூக்கம்)

14 to 21 = BETA (முழுமையாக விழித்துக் கொள்ளும் பொழுது)

You cannot sail when the sea is rough

கடலில் அலைகள் அதிகமாக இருந்தால் படகு விட முடியாது. அதுபோல் மனதில் (புறமனதில்) எண்ண அலைகள் அதிகமாக இருந்தால், எண்ண விதைகளை விதைக்க முடியாது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை சாதிக்க வேண்டுமென்றாலும் அதற்கு உகந்த நேரம் காலையில் நீங்கள் மெல்ல தூக்கத்திலிருந்து விடுபடும் “ஆல்பா” மனநிலையே. படுக்கையைவிட்டு கண்களைத் திறக்காமல், ஆக்கப்பூர்வமான எதாவது ஒன்றை நாள்தோறும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் சொல்லிக் கொண்டே வந்தால் போதும். நீங்கள் தேடும் வெற்றி உங்கள் கதவோரம் வந்து காத்துக் கொண்டிருக்கும்.

Nirmal’s Art of Sleeping – the 9.00 clock club

எப்படி வாழும் கலை நமக்கு அவசியமோ அதே போன்று தூங்கும் கலையும் அவசியம். எது எப்படியோ நீங்கள் இரவு 9.00 மணிக்கு தூங்கப் போய்விட வேண்டும். அப்பொழுதுதான் காலை 5.00 மணிக்கு எழுந்துக் கொள்ள முடியும். இரவு 9.00 மணிக்கு உறங்கச் சென்று காலை 4.00 மணிக்கு எழுந்துக் கொள்வது இன்னும் ஊசிதம். ஏழு மணி நேரம் ஆழ்ந்து உறங்கினால் போதும்.

அதிகாலை அதிசயம்

இரவு 9.00 மணிக்கு படுக்கப் போங்கள். 4.00 மணிக்குள் எழுந்துக் கொள்ளுங்கள். அலராம் வைத்து எழுந்துக் கொள்ளாதீர்கள். அதிகாலை சிறப்பு என்ன?

அதிகாலை சிறப்பு என்ன?

காலையில் மனம் இயற்கை ஆல்பா நிலையில் உள்ளது. காலை மனம் காலி கோப்பையைப் போன்றது. அதில் கோப்பை நிரம்பும் வரை ஊற்றலாம். மாலையில் அந்த மனக்கோப்பை நிரம்பி இருக்கிறது. அப்பொழுது கொஞ்சம் ஊற்றினாலும் அது வழிந்துவிடும். மனம் ஸ்பான்ச், உறிஞ்சுத்தாள் மற்றும் ஈர சிமெண்ட் தரையைப் போன்றது.

காலையில் மன அலைகள் குறைவு. புத்துணர்வோடு இருப்பதால் மனதிற்குள்ளேயே ஒரு விசயத்தை இன்னொரு விசயத்தோடு இணைக்கிறது. மனம் இறுக்கம் அற்று இருக்கும். உடல் சக்தி அதிகமாக இருக்கும்.

அதிகாலையில் காற்றில் பிராணவாயு அதிகமாக இருக்கும். ஓசோனின் நல்ல பாதிப்பு இருக்கும். ஒலியால், வெளிச்சத்தால் கவனச் சிதறல் கிடையாது. உலகமே அமைதியில் ஆழ்ந்துள்ளது.

உங்களுக்கு முக்கிய நேரம் (Prime Time) காலையில் 4.00 மணியிலிருந்து 6.00 மணி வரை. இரவு 9.00 மணிக்கு படுக்கப் போகும் போது, நீங்கள் தீர்வு காண வேண்டிய பிரச்சினைகள் பற்றி சிந்தித்து பிறகு உறங்குங்கள். அதற்கான விடைகள் அனைத்தும் காலை நீங்கள் தூக்கத்தில் இருந்து விழித்தவுடன் உங்களைத் தேடி வரும் அதிசயத்தைக் காண்பீர்கள்.

கண் அயர்வதற்கு முன்னால் அதிகாலை 4.00 மணிக்கு “நான் தானாகவே விழித்துக் கொள்வேன்” என்று ஐந்து முறைக் கூறிக் கொள்ள வேண்டும். காலை கண்விழித்து கடிகாரத்தைப் பார்த்தால் அது 4.00 மணி காட்டும் அதிசயத்தை காண்பீர்கள்.

நான் கோயம்பேட்டில் உள்ள என்னுடைய வீட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு போவேன். மாலை வேளையில் விமான நிலையத்திற்கு செல்லும் பொழுது குறைந்தது இரண்டு மணி நேரம் கூட பிடிக்கும். ஆனால் இதே விமான நிலையத்திற்கு காலையில் செல்வதற்கு இருபது நிமிடம்தான் ஆகும். இதற்கு காரணம் என்னவென்றால், காலையில் போக்குவரத்து கிடையாது. இந்த உதாரணம் நம் மனதிற்கும் பொருந்தும். காலை மனம் காலை நேர சாலையைப் போன்றது. இரைச்சல் கிடையாது. போக்குவரத்து கிடையாது. நிசப்தம். மாலையில் அப்படி அல்ல. நம்முடைய தலையில் வலது மூளை, இடது மூளை, புறமனம், ஆழ்மனம் போன்றவைகள் இருக்கின்றன. காலையில் மனதில் உள்ள இந்த உபகரணங்கள் ஒன்றோடொன்று தங்கு தடையின்றி தொடர்பு கொள்கின்றன. விசயங்களை பரிமாறிக் கொள்கின்றன. அதிகாலையில் நாம் எழுந்தால் ஒருமணி நேரமாவது அதை நாம் சிந்திக்க பயன்படுத்தலாம். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விடைகளை காணலாம்.

இதோ ஒரு சோதனை. உங்களுக்கு நீங்களே செய்து பாருங்கள். காலையிலும், மாலையிலும் வேலை செய்யும் போது கடிகாரத்தைப் பாருங்கள். ஒரு பெரிய அதிசயம் புலப்படும். மாலையில் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும் வேலைகளுக்கு காலையில் தேவைப்படுவது ஒருமணி நேரமே. காலையில் ஆற்றோட்டத்துடன் செயல்படுகின்றீர்கள். மாலையில் ஆற்றோட்டத்துடன் எதிர்த்து செயல்படுகின்றீர்கள்.

மன முத்திரை மொழி

இது முத்திரை நரம்பியல் என்ற செயல்முறையையே குறிப்பிடுகிறது. இது மந்திரமோ, மாயமோ அல்ல. இது ஒரு மன விஞ்ஞானம் (Mind Science). ஒரு மன புரோகிராம்.