Select Page

விழிப்பூட்டல் அறிமுகம்

பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல் அறிமுகம்

இன்று மக்களிடையே பல முக்கிய விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு சுத்தமாக கிடையாது. விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டாலே போதும். பல பிரச்சனைகள் உருவாகாது. இதன் பின்னணியில் முக்கியத் தகவல்கள் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளப்படுகின்றன. நிஜ சம்பவங்களும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இன்று பெரிய நோய் அறியாமை. 

இன்று  பெண்களுக்கு  ஏற்படும்  பிரச்னைகள்  பலவற்றிற்குக்   காரணம்  இந்த  நோயே .

விழித்தெழல் விழிப்பூட்டல் காலத்தின் கட்டாயம். எந்த விஷயங்களில் விழித்தெழல் விழிப்பூட்டல் தேவை என்பதைப்  பாவையர்களுக்குப் பாதகங்கள் என்ற தலைப்பில் அக்னி ஸ்திரீ அறிமுகம் என்ற பிரிவில் உள்ளன. அவசியம் பார்க்கவும். அந்த பாதகங்களே  இல்லாமல் இருக்க, அப்படிப்  பாதகங்கள் ஏற்படும்   போது  அவற்றைத்   தவிர்க்க  குறிப்பாக ஒரு பெண் தன்னை உடனடியாக காப்பாற்றி கொள்ள அற்புத வழிகள் விளக்கப்பட்டுள்ளன.

  1. கூக்குரல் இடுதல் (Shouting & raising voice )
  2. சாதாரண தட்டு கரண்டி
  3. அலார்ம் மணி (alarm bell)
  4. விசில் (whistle)    
  5. பெப்பர் ஸ்பிரே (pepper spray)
  6. மொபைல் குரூப்  (Mobile Group)
  7. அரவணைக்கும் அன்பு சகோதிரிகள்
  8. சிவப்பு புத்தகம் (Red Book)
  9. எலக்ட்ரானிக் ஆப்ஸ் (APPS)
  10. மிக எளிய தற்காப்பு கலைகள் 
  11. சமயோசிதம் (presence of mind)
  12. புலனாய்வு இன்டெலிஜென்ஸ்  (Women Intelligence)

எலக்ட்ரானிக் ஆப்ஸ்

இது எலக்ட்ரானிக் யுகம். விஞ்ஞான வளர்ச்சியை முழு பாதுகாப்பிற்குப் பெண்கள் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

இதோ இங்கே இரண்டு சிறந்த ஆப்ஸ்

  1. Save My Soul அதாவது SMS
  2. ஆபத்தில் இருக்கும் போது மிசிணி ICE (ICE , In the Case of Emergency). 

Save My Soul அதாவது SMS &

ஆபத்தில் இருக்கும் போது ICE (ICE , In the Case of Emergency)

ICE (ICE , In the Case of Emergency)

இந்த விடீயோக்களைப் பாருங்கள் . புரிந்து கொள்வீர்கள் 

போலீஸ் வரும் வரை தட்டு கரண்டி, அலார்ம் மணி, விசில் ஆகியவற்றைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கூட்டலாம்  

2. அடுத்ததாக மது அடிமைகள்  மதுவை விட செய்ய மற்றும் பெண்கள் அவர்கள்  குடும்பம்  முன்னேற 7ஆம் அறிவைப் பயன்படுத்துதல். இதற்கு என்று 10 அற்புத மனப்ரோகம் நுணுக்கங்களைக் கற்று கொடுத்துள்ளோம் . 

எல்லாம் சரி இந்த அற்புத விஷயங்களை எப்படி பெண்களிடம் குறிப்பாக எழுத்து அறிவே இல்லாத ஏழை பெண்களிடம் கொண்டு போய் சேர்ப்பது. அதற்கு ஒரே வழி : பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்

3. விழித்தெழல் விழிப்பூட்டல்

இதில் பல விஷயங்கள் படித்த மற்றும் மேல் தட்டு பெண்களுக்கே தெரியாது.  ஆகவேதான் விழித்தெழில் விழிப்பூட்டல் என்ற இந்த பிரிவு.  விழித்தெழில் விழிப்பூட்டல் உண்டாக்க 25 முறைகள் தரப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் பயன்படுத்தலாம். சிலவற்றையாவது எடுத்துக் கொள்ளலாம் . 

பிறகு என்ன?  பெண்கள் இந்த உலகத்திலேயே சொர்க்கத்தைச் சந்திப்பார்கள், சொர்க்கத்தில்  வாழ்வார்கள் . ஓயாதீர்கள், உங்கள் வாழ்வில் வசந்தம் வீசம் வேண்டும் என்றால் இணைந்து செயல்படுங்கள். ஏற்றம் பெறுங்கள்.

எல்லாம் சரி, விழித்தெழில் விழிப்பூட்டல்  பெண்களுக்கு ஏற்படும் பாதகங்களைப் பற்றி மட்டுந்தானா? அது ஒன்று மிக முக்கியமானது. ஆனால் மேலும்  இன்னும் மூன்று  விஷயங்களில் முழு கவனம் தேவை, முக்கியமாக விழிப்புணர்வு தேவை . அவை யாவை  ?

இவற்றை நான்கு வகையாக பிரிக்கலாம்.

பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் ஆண்கள்: மிக அதிகமாக நடைப் பெறுவது பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் கொடுமைகளே.

பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் பெண்கள்:

வீட்டிலேயே சுமூக உறவு இல்லாமல் கொடுமை செய்யும் பெண்கள் கணக்கிலடங்கா (உதாரணம் மாமியார் மருமகள் சண்டைகள்)

ஆண்களுக்குக் கொடுமை இழைக்கும் பெண்கள்:

இது குறைவு. ஆனால் நாளுக்கு நாள் இந்த வகை அநீதிகள் அதிகரித்து வருவது கவலையைத் தருகிறது

குற்றங்கள் புரியும் பெண்கள்:  குற்றங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். சிறிய குற்றங்களிலிருந்து மிக பெரிய குற்றம் புரியும் பெண்கள் வரை ஏராளனமானோர் இருக்கின்றார்கள். பெண்களையே ஏமாற்றும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். அக்னி ஸ்திரீ இயக்கத்தின் இலட்சியம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே. “கொற்றவன் செய்தாலும் குற்றம் குற்றமே” என்று கூறிய நக்கீரன் பிறந்த நாடு இது. பெண்கள் இயக்கம் என்பதால் பெண்கள் குற்றம் புரியலாம் என்று பொருள் அல்ல. இந்த நான்கு வகை அநீதிகள் பற்றி பெண்களிடையே விழிப்புணர்வு உண்டாக்குவது எப்படி?