Select Page

விழிப்புணர்வு குழந்தைகளுக்குப் பாதகங்கள்

குழந்தைகளுக்குப் பாதகங்கள்

குழந்தைகள் பாதுகாப்பு & குழந்தைகள் வளர்ப்பு

பெண்கள் பாதுகாப்பு என்பதில் குழந்தைகள் பாதுகாப்பும் அடக்கம். ஒரு தாய் தன் குழந்தையைக் கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்கிறாள். அந்த குழந்தைக்கு ஏதாவது இடறு ஏற்பட்டால் அவள் உடைந்து போய்விடுகிறாள். இன்று துரதிஷ்டவசமாக சேவை மனப்பான்மை குறைந்து வருகின்றது. பதவி ஆசை, பண ஆசை, சுய விளம்பர ஆசை ஆகியவைகள் காரணமாக போட்டிகள், பிளவுகள், சச்சரவுகள் மற்றும் சண்டைகள் உள்ளுரிலிருந்து உலக நாடுகள் வரை நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. பதவி ஆசை, பண ஆசை, சுய விளம்பர ஆசை ஆகியவைகள் காரணமாக இரு பிரிவினர்களிடையே மோதல் உருவாகும் போது முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். கொடுரமாக கொல்லப்படுகிறார்கள். அடுத்ததாக பெண்கள். அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். இந்த பதவி ஆசை, பண ஆசை, விளம்பர ஆசை என்று எந்த ஆசையும் இல்லாத அப்பாவி பெண்கள், குழந்தைகள் கொடுர தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இன்று நாடு முழுவதும் நாள்தோறும் குழந்தைகள் காணாமல் போய்விடுகிறார்கள். கடத்தப்படுகிறார்கள். இதோ ஒரு சின்ன புள்ளி விவரம், கடந்த ஆண்டுகளில்………………………

உலகம் முழுவதும் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு, திருடப்படுவதற்கு என்னக்காரணம்.

பணக்கார குழந்தைகள் என்றால் பிளாக்மெயில் செய்து பணம் பெற கடத்தப்படுகிறார்கள்.

குழந்தைகள் கடத்தப்படுவதற்கு காரணங்கள் இதோ

  • பழி வாங்கும் செயலாக
  • குழந்தைகளைக் குழந்தைகள் தொழில் (CHILD LABOUR) ஈடுபடுத்துவதற்காக
  • குழந்தை இல்லாத பெற்றோர் தங்கள் ஏக்கம் தீருவதற்காக
  • குழந்தைகளை தத்து எடுத்து விற்பனை செய்வதற்காக
  • பிச்சை எடுக்க வைப்பதற்காக (குழந்தைகளை முடமாக்கியோ, குருடாக்கியோ பிச்சை எடுக்க வைக்கும் கொடிய மனிதர்களும் உண்டு)
  • குழந்தைகளின் உடல் உறுப்பைத் திருடி விற்பனை செய்வதற்காக
  • அவர்களைத் திருட்டு தொழிலில் ஈடுபடுத்துவதற்காக
  • குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக
  • குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி செக்ஸ் படங்கள் எடுப்பதற்காக
  • பரிசோதனைக் கூடங்களில் எலிகளுக்குப் பதில் குழந்தைகளை வைத்து பரிசோதனை செய்வதற்காக
  • பெற்றோர்களே குழந்தைகளை விற்கும் கொடுமைகளும் உண்டு.
  • குழந்தைகளை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்த .
  • போதை மருந்துகள் கடத்துவதற்காக .

ஆகவே அக்னி ஸ்திரீ அமைப்பு என்பது பெண்கள் மட்டும் இன்றி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பெண்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் அவர்கள் குழந்தைகள் கடத்தப்படுவது அடியோடு இல்லாமல் போய்விடும்.

சாலையோர குழந்தைகள், குடிசைவாழ் குழந்தைகள் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆகவேதான் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கினைத் தொடர்ந்தது. விவரங்கள் காண்க இணைப்பு.

அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணர்வுள்ள சமுதாயம் உருவாக்கப்படும். இதற்கான திட்டம் (People’s Intelligence) தரப்பட்டுள்ளது. மக்கள் தொகை மிக அதிகம். காவல்துறையினரின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு. அவர்களின் வேலை பளு விவரிக்க முடியாத ஒன்று. அதில் குழந்தைகளை பாதுகாப்பதில் காவல்துறைக்கு அக்னி ஸ்திரீ பெண்கள் தோள் கொடுக்க வேண்டும்.

இன்று உலகம் முழுவதும் நாடு முழுவதும் நாள்தோறும் குழந்தைகள் காணாமல் போய்விடுகிறார்கள். கடத்தப்படுகிறார்கள்.

குழந்தைகள் கடத்தப்படுவதற்கு, திருடப்படுவதற்கு என்னக்காரணம்.

குழந்தைகள் காணாமல் போவதற்கு முக்கிய காரணம் நம் அஜாக்கிரதையே. நாம் காவல் துறையைக் குறைக்கூறி கொண்டு இருக்க முடியாது.

அதே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தருவது என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டும் ஆகாது.

ஒவ்வொரு பெண்ணின், மனிதனின் மற்றும் சமுகத்தின் கடமையாகும். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டாலே போதும். குழந்தைகள் காணாமல் போவது என்பது இல்லாத ஒன்றாகிவிடும். அதற்கான எளிதான செயல்திட்டம் இங்கு தரப்பட்டுள்ளது.