Select Page

விதை விதை

விதை………”விதை” (Seed…..“Seed”)

“விதை விதை” ஒன்று:

முதல் விதை ஒரு பெயர்ச்சொல். மனதில் விதைக்கப்படப் போகும் முன்னேற்றம் என்ற மன விதையை குறிப்பிடுகிறது. இரண்டாவது வார்த்தை விதை ஒரு வினைச்சொல். அந்த முன்னேற்றம் என்ற மன விதையை மனதில் விதைப்பதை குறிப்பிடுகிறது.

காலையில் நல்ல பொன்மொழிகள் என்ற விதைகளை மனதில் விதைப்பது. மறந்துவிடாதீர்கள், “ஒரு விதையை விதைத்து விட்டு நீங்கள் தூங்கப் போகலாம், ஆனால் விதை தூங்காது”.

“விதை விதை” இரண்டு:

“விதை விதை” (Seed…..Seed) (பெண் விவசாயிகள்)

முதல் விதை ஒரு பெயர்ச்சொல். அது தானியங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் விதைகளை குறிப்பிடுகிறது. இரண்டாவது விதை என்ற வார்த்தை ஒரு வினைச்சொல். அதை தோட்டத்திலோ, விவசாய நிலத்திலோ விதைப்பதை குறிப்பிடுகிறது.

கிராமங்களில் உள்ள பெண் விவசாயிகள் கூட்டு விவசாயம் (Collective Farming) செய்ய பயிற்சி தரப்படும். நகரத்தில் வாழும் பெண்கள் கூட விவசாயிகளாக மாறலாம். மொட்டை மாடி உட்பட வீட்டைச் சுற்றி காய்கறி தோட்டம் அமைத்து காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

விதை………”விதை” (Seed…..“Seed”)-2