4. வார்த்தைகளுக்கு சக்தி உண்டு
வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. சக்தி தரும் வார்த்தைகள் உண்டு. சக்தியை உறிஞ்சுவிடும் வார்த்தைகளும் உண்டு. யோசிப்பதில் இருந்து பேசுவது வரை வார்த்தைகளில் கவனம் தேவை. எதிர்மறை வார்த்தைகள் அறவே பயன்படுத்தக்கூடாது. நம் சிந்தனையையும், ஆழ்மனது மற்றும் செல்ஸ் ஆகியவற்றை உத்வேகம் படுத்தும் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சக்தி தரும் வார்த்தைகள்
- நான் தன்னம்பிக்கை உடையவள்
- நான் சக்தி உடையவள்
- நான் சாதனை புரிபவள்
- நான் அன்பானவள்
- என்னால் முடியும்
- வெற்றி உறுதி
- நான் எதிலும் முதல் இடம் பிடிப்பேன்
- எல்லா நல்ல காரியங்களும் என்னிடமிருந்து தொடங்கும்.
- நான் தொடுவது துலங்கும்.
- என் அறிவு நாளுக்கு நாள் கூடுகிறது.
- வெற்றி மேல் வெற்றி மேல் வந்து என்னை சேரும்.
- இந்த நாள் இனிய நாள்
சக்தியை உறிந்துவிடும் வார்த்தைகள்
- நான் தண்டம்
- நான் தொடுவது துலங்காது
- எனக்கு பேசத் தெரியாது
- நாக்கிலே எனக்குச் சனி
- என்னை யாரும் விரும்பவில்லை
- தோல்விக்கென்றே பிறந்தவள்
- காசு என்னிடம் தங்காது
- என் தலை எழுத்தை ஆண்டவனாலும் மாற்ற முடியாது.
- எனகு ஸ்திர புத்தி கிடையாது
- எனக்குப் புத்திர பாக்கியம் கிடையாது
- நான் ஏன் பிறந்தேன்
வேண்டாம்….. வேண்டும்
தமிழ்நாட்டில் சினிமா துறை என்றாலே இருவர்தான் இரண்டு தூண்கள் போன்றவர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர், இன்னொருவர் சிவாஜி. இரண்டு பேருமே சரித்திர சாதனையாளர்கள். இருவரும் முதல்வராக வர வேண்டும் என்று கனவு கண்டவர்கள்.
மலையாள மொழியினை தாய்மொழியாக கொண்ட எம்.ஜி.ஆர் அவர்களால் முதல்வராக முடிந்தது. பேச முடியாத நிலையிலும் முதல்வராக பணியாற்றினார். இந்திய சரித்திரத்தில் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு முதல்வராக திகழ்ந்தார்.
“எங்கள் தாய்மொழி தமிழ் அற்புத மொழி” என்ற எண்ணம் அனைத்து தமிழர்களுக்கும் உண்டானது நடிகர் சிவாஜி அவர்கள் தமிழ்மொழியை உச்சரித்த போதுதான், வசனம் பேசிய போதுதான் என்றாலும் அவரால் முதல்வராக முடியவில்லை.
எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வர் ஆனதுக்கும், சிவாஜி அவர்கள் முதல்வர் ஆகாமல் போனதுக்கும் பல காரணங்கள் உண்டு. அடிப்படை காரணமாக இருந்தது அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், அதில் இடம் பெற்ற காட்சிகள், முக்கியமாக படத்தின் பாடல்கள். இந்த பாடல்களை பாடியது திரு.ஜிவிஷி அவர்களாக இருக்கலாம். இந்த பாடலில் மகிழ்ச்சி அல்லது சோக உணர்வோடு ஒன்றிப் போய் நடித்தவர்கள் யார் என்றால் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி அவர்கள்.
இதோ இருவர் நடித்த பாடல்களின் ஒரு சாம்பிள் பட்டியல்.
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பாடி பாத்திரத்தில் ஒன்றிப் போய் நடித்த பாடல்கள் | திரு.சிவாஜி அவர்கள் பாடி பாத்திரத்தில் ஒன்றிப் போய் நடித்த பாடல்கள் |
“உலகம் பிறந்தது எனக்காக” | “யாருக்காக, இது யாருக்காக” |
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” | “ஏன் பிறந்தாய் மகனே” |
“புதிய வானம், புதிய பூமி” | “எங்கே நிம்மதி” |
“அச்சம் என்பது மடைமையடா” | “சட்டி சுட்டதடா, கை விட்டதடா” |
“நான் ஆணையிட்டால்” | “வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்” |
“நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு” | “வீடு வரை உறவு” |
இதுபோன்று பல உள்ளன. எம்.ஜி.ஆர் அவர்களின் “நான் ஆணையிட்டால்” என்ற பாடல்களின் வரிக்கு சக்தி (Energy) அதிகமாக இருக்கும். அந்த பாடலை கேட்டாலோ, பாட்டுக் காட்சியை பார்த்தாலோ எவருக்கும் தன்னம்பிக்கை தலைதூக்கும். அதுவே எம்.ஜி.ஆர் அவர்களை முதல்வராக்கி ஆட்சி பிடிக்க வைத்தது. அனைவருக்கும் ஆணையிடும் முதல்வர் பதவியில் கொண்டு சேர்த்தது. “உலகம் பிறந்தது எனக்காக” என்ற பாடல் அவருக்கு “தமிழகம் பிறந்தது எனக்காக” என்று மாற்றியது.
இதில் திரு.சிவாஜி அவர்கள் குறை கூறவில்லை. திரு.சிவாஜி அவர்கள் நடிப்பின் பல்கலைக்கழகம், நடிப்புலகத்தின் சக்கரவர்த்தி. உணர்ச்சி ததும்பும் பாத்திரங்களை அவருக்கு கொடுத்தார்கள். அந்த பாத்திரமாகவே அவர் உருமாறினார். உணர்ச்சி பிழம்பாகவே அவர் மாறினார். சிவாஜியும் மகிழ்ச்சியான பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். அந்த பாடல்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் சோகமான காட்சிகளில் நடிக்கும் பொழுது அவர் நடிப்பில் ஒன்றி அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார். இது மூடநம்பிக்கையை சார்ந்தது அல்ல, விஞ்ஞான பூர்வமானது. இதை ஆங்கிலத்தில் செல் ஜுவனேஷன் (Energy) என்போம்.
இது போன்ற உதாரணங்கள் ஏராளம்.
TMS மிக சிறந்த பாடகர். விநிஸி-க்கு விநிஸி குரலிலேயே பாடுவார். சிவாஜிக்கு சிவாஜி குரலிலேயே பாடுவார். கொடி கட்டி பறந்தார். ஒரு பாடல் பாடியவுடன் அவருடைய சாம்ராஜ்யம் சரிந்தது. அந்த பாடலின் பெயர் “நான் ஒரு ராசியில்லா ராஜா”. படம் பெயர் “ஒரு தலை ராகம்”.
சந்திரபாபு காமெடி நடிகர். கதாநாயகர்களுக்கு இணையாக கருதப்பட்டவர், சென்னையில் அமைச்சர்கள் வாழும் கிரீன்வெஸ் சாலையில் நானும் அவர்களுக்கு இணையாக வாழ்வேன் என்று கூறி, அங்கேயே ஒரு நிலத்தை வாங்கி மாடி வீடு கட்டினார். ஆனால் அந்த வீட்டிற்கு அவர் குடிப்போகவே இல்லை. வாங்கிய கடன் காரணமாக அந்த வீடு ஏலத்தில் போனது. நம்முடைய விவாதத்தின்படி அதற்கு காரணம் அப்போது அவர் ஒரு படத்தைத் தயாரித்து நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் பெயர் “மாடி வீட்டு ஏழை”.
CLIFF Richard மிகப்பெரிய பாடகர். இப்போது (2016) அவருக்கு வயது 76. அவர் உலகப் பிரசித்தி பெற்ற பாடல் “Bachelor Boy” be a bachelor boy until your dying day”. பொருள் எப்போதும் பிரம்மச்சாரியாகவே இரு. அவருக்கு இன்று வரை திருமணமே ஆகவில்லை. அவர் பலமுறை முயற்சித்தும் திருமணம் ஆகவில்லை.
வார்த்தைகளுக்கு வலிமை உண்டு. இது மூட நம்பிக்கை அல்ல. விஞ்ஞானம். நீங்கள் கூறும் வார்த்தைகளை உங்கள் ஆழ்மனதும் உடல் செல்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை நீங்கள் தூங்கும் போது வேலை செய்கின்றன. வீட்டில் பெரியவர்கள் கூறுவார்கள், “அவசரப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு என் வீட்டை விற்கப் போறேன்” என்று சொல்லி விடாதீர்கள். “உண்மையிலேயே வீடு உங்கள் கையை விட்டு போய்விடும்” என்பார்கள்.
7-ஆம் அறிவு என்பது நம் நினைப்பது மற்றும் பேசுவது நமக்குப் பாதிப்பை உண்டாக்குகின்றன.
- ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் நம் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எதிர்மறை எண்ணங்கள் நமக்கு எதிராக செயல்படுகின்றன. காரணம் இதை நம் மனம் மூளை உடலில் உள்ள பல்லாயிரக்கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் (Cells) கேட்டுக் கொண்டிருக்கின்றன. பதிவு செய்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே நம் சிந்தனை, சொல் மற்றும் செயல் இது மூன்றிலும் கவனம் தேவை.
- 7-ஆம் அறிவு பெறுங்கள்.
- நீங்கள் வெற்றியைத் துரத்த வேண்டாம்.
- வெற்றி உங்களைத் துரத்தும்.