Select Page

முக்கியம் பாட்டு பாடு

பாட்டு.. பாடு அக்னி ஸ்திரீ பரிந்துரைத்துள்ள 15 பாடல்கள் நாட்டுப்பண் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து ஆகிய பாடல்கள் போன்று பாடப்பட வேண்டிய பாடல்கள். பரிந்துரைத்துள்ள பாடல்களையும் அடிக்கடி சேர்ந்து பாடுவது ஊக்கத்தையும், ஆக்கத்தையும், உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தரும். பெண்கள் கூடும் போதெல்லாம் பரிந்துரைத்துள்ள பட்டியலில் தரப்பட்ட பாடல்களைப் பாடுங்கள். ஒரு பாடலையாவது அவசியம் பாடுங்கள். சேர்ந்து பாடலாம். சேர்ந்து பாடுவது அவசியம். அவசியம் அடிக்கடி சேர்ந்து பாடவும். இப்பாடல்கள் ஆழ்மனதில் பதிந்து நல்மாற்றத்தை விளைவிக்கும்.பாடினால் பாடும் திறமை கூடும். சேர்ந்து இசைக்கும் போது அது அவர்களின் நற்பண்புகளை வளர்க்கும். குழுவாக செயல்படும் போது அது அவர்கள் ஆற்றலை அதிகரிக்கும், பன்மடங்காக்கும் (TEAM SPIRIT). வார்த்தை வளம் வளரும். தன்னம்பிக்கைத் தலைத்தூக்கும். ஒற்றுமை ஓங்கும். மகிழ்ச்சி மலரும். மனோதத்துவ ரீதியாக இது மிக அவசியம். அந்த பாடல்கள் அற்புத பாடல்கள்.

இந்த பட்டியலில் தரப்பட்ட பாடல்கள் மட்டுமின்றி பெண்களே பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பாடலாம். நீங்கள் விரும்பிய நல்ல கருத்து ஆழமுள்ள பாடல்களையும் இந்த பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். உற்சாகம் தரும் எந்த பாடலையும் பாடலாம். நடனமும் ஆடலாம். இன்னலுக்குள்ளாகும் பெண்களுக்கு தேவை மகிழ்ச்சி. ஆகவே அனைவரும் பாடி மகிழ்ச்சியுடன் நடனம் ஆடலாம். எப்படியாவது அனைத்து பெண்களையும் பாட வைக்க வேண்டும். நடனம் ஆட வைக்க வேண்டும், பாட்டியும் சேர்த்து. அவள் பொக்கை வாய் சிரிப்பு அனைவருக்கும் சிரிப்பை உண்டாக்கும். அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

நிபந்தனைகள்

ஆனால் இந்த பாடல்கள் பாடுவதற்கு முன்னால் அங்கு அக்னி ஸ்திரீ இயக்கம் பரிந்துரைத்துள்ள பாடல்களில் ஒரு சிலவற்றையாவது அவசியம் பாட வேண்டும்.

  • பெண்களே தேர்ந்தெடுத்து பாடும் பாடல்களில் பெண்களை இழிவுப்படுத்தும் சொற்கள் அறவே இருக்கக்கூடாது.
  • ஜாதி, மத, மொழி ஆகியற்றை இழிவுப்படுத்தும் சொற்கள் அறவே கூடாது.
  • தாய்நாட்டை இழிவுப்படுத்தும் பாடல்கள் அறவே கூடாது.
  • ஒரு சில நாட்களில் பெண்கள் அக்னி ஸ்திரீ குழு ஒன்றை உருவாக்கி ஊரையே கலக்குவார்கள்.
  • அவர்கள் வீட்டை விட்டு மது புறமுதுகிட்டு ஓடிவிடும்.
  • இந்த மேடை மெல்லிசை குழுவில் நூற்றுக்கு நூறு பெண்களே இடம் பெறுவார்கள். அவர்களே பாடுவார்கள். கீ போர்டு (Key Board) கூட அவர்களே வாசிப்பார்கள். (ஆண் குரலுக்கு ஆண்களை சேர்த்துக் கொள்வது)

சேர்ந்திசைத்தல்

மிகச்சிறந்த பாடலாசிரியர்கள், நம் தமிழ்மொழியை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் எழுதிய அற்புத பாடல்கள் இவை. இது பாறைப் போன்ற மனதையும் உடைத்து நொறுக்கும். கல் நெஞ்சையும் நெகிழ வைக்கும். தீயவர்கள் மனதிலும் நெருடலை உண்டாக்கும். ஆகவே இந்தப் பாடல்களை சேர்ந்து இசைக்கவும். காயர் (Choir) போன்று இந்தப் பாடல்களை பாட வேண்டும். நின்றுப் பாடும் போது இரண்டு, மூன்று வரிசையாக நின்றுப் பாட வேண்டும். உயரம் குறைவானவர்கள் முன் வரிசையிலும், உயரமானவர்கள் பின் வரிசையிலும் இருந்து பாட வேண்டும். உங்கள் ஊரில் ஏதாவது படிக்கட்டுகள் இருந்தால் (உதாரணமாக பள்ளிக்கூடம்) அதில் வரிசையாக நின்று பாட வேண்டும். அனைவரும் ஒரே சீராக, ஒரே குரலில் பாட வேண்டும். இதற்கு பயிற்சிகள் அவசியம்.

ஒருவருடைய குரல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவர்கள் சேர்ந்து பாடும் பொழுது காதில் விழும் பாடல் சிறந்த ஒன்றாக இருக்கும். இதுதான் ஒற்றுமையின் சிறப்பு. தேசிய கீதம் அனைவரும் பாடுவார்கள். ஆனால் நம் காதுகளில் விழும் பாடல் சிறப்பாக இருக்கும். ஆகவே சேர்ந்தே இசைக்க வேண்டும்.

இதோ சேர்ந்து இசைக்க வேண்டிய பாடல்களின் பட்டியல்.

இந்த பாடல்கள் காலத்தை வென்ற பாடல்கள். மனதை செதுக்கும் பாடல்கள். மனதை செப்பனிடும் பாடல்கள். நாங்கள் கொடுத்துள்ள பாடல்கள்,

  • குழந்தைகள் மீது பாசம்
  • குழந்தைகள் தாய் மீது வைக்க வேண்டிய பாசம்
  • தமிழ் மொழி மீது காதல் உண்டாக்கும்
  • பெண்கள் மனதில் அச்சத்தை அறவே நீக்கும்.
  • தமிழர்களின் பெருமையை உணர்த்தும் பாடல்
  • தாய்நாட்டு பற்றை மேம்படுத்தும் பாடல்.
  • பெண்கள் தங்கள் இனத்தின் மீது பெருமை கொள்ள வைக்கும் பாடல்.
  • வாய்விட்டு சிரித்து மகிழ்விக்கும் பாடல்.
  • மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பாடல்.
  • பெண்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் பாடல்.
  • பெண்களிடையே ஒற்றுமையை உண்டாக்கும் பாடல்.
  • இது இயற்கையை ரசித்து மகிழும் பாடல் 

பாடல் 1. குழந்தைகள் மீது பாசம்

“சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” – இயற்றியவர் பாரதியார்

இதை அனைவரும் சேர்ந்து இசைக்க வேண்டும், முழுப்பயனையும் பெற வேண்டும் என்றால் குழந்தைகளை எதிரே உட்கார வைத்து, அவர்களைப் பார்த்து முகபாவனைகளோடு உணர்ச்சியோடு சேர்ந்து அனைவரும் பாட வேண்டும்.

2. குழந்தைகள் தாய் மீது வைக்க வேண்டிய பாசம்

“அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” – இயற்றியவர் திரு.வாலி

இந்தப் பாடலை பெண்கள், குழந்தைகள் அனைவரையுமே தங்கள் அன்னையர்களை அமர வைத்து அவர்களைப் பார்த்து முகபாவனைகளோடு, உணர்ச்சியோடு சேர்ந்து அனைவரும் பாட வேண்டும்.

3. தமிழ் மொழி மீது காதல் உண்டாக்கும்

“தமிழுக்கும் அமுதென்று பேர்” (படம் பஞ்சவர்ணகிளி)

இயற்றியவர் பாரதிதாசன்

இதை சேர்ந்து பாடும் போது பெண்கள் தமிழ் மொழியின் பெருமையை உணர்வார்கள். தமிழ் பெண்களுக்குரிய குணாதிசயங்களை பெறுவார்கள்.

4. பெண்கள் மனதில் அச்சத்தை அறவே நீக்கும்.

அச்சம்….அச்சம்…. இல்லை…. இனி அடிமைத்தனம் இல்லை….. (படம் இந்திரா) – எழுதியவர் திரு.வைரமுத்து

மாணவிகள் சேர்ந்து பாட வேண்டிய பாடல்

5. தமிழர்களின் பெருமையை உணர்த்தும் பாடல்

தமிழன் என்றொரு இனம் உண்டு தமிழன் என்றொரு இனம் உண்டு (படம் ரோஜா)

படம்: மலைக்கள்ளன் 

பாடியவர் : TMS 

பாடலாசிரியர் : நாமக்கல் கவிஞர் 

இசை : SM Subbiah Naidu  

6. தமிழர்களின் பெருமையை உணர்த்தும் பாடல்

தமிழா…..தமிழா…… (படம் ரோஜா) –எழுதியவர் திரு.வைரமுத்து

இப்பாடல் தமிழர்கள் பெருமையை உணர வைக்கும்.

7. கொடுத்ததெல்லாம் கொடுத்தான்……. (படம் படகோட்டி)

  • எழுதியவர் திரு.வாலி

இது சமதர்ம சமுதாயத்தை ஊக்குவிக்கும். ஒரு சமதர்ம சமுதாயத்தை அடைய இந்தப் பாடல் உதவி புரியும்.

8. காலங்களில் அவள் வசந்தம்……… (படம் பாவமன்னிப்பு)

  • எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்

பெண்களின் பெருமையை பறை சாற்றும் பாடல். பெண்களின் சிறப்புகளை படம் பிடித்துக் காட்டும் பாடல்

9. நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு…… (படம் என் அண்ணன்)

  • இயற்றியவர் திரு.வாலி அவர்கள்.

உத்வேகம் தரும் பாடல். உற்சாகம், ஊக்கம், உத்வேகம் அனைத்தையும் உடனடியாக தரும் வலிமையுள்ள பாடல் இது.

10. சிரிப்பு…. சிரிப்பு…..(படம் ,,,,,,,,,)

இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொறுப்பு………

11. Udumalai Narayana Kavi

“கா….கா…..கா” படம் பராசக்தி. எழுதியவர் உடுமலை நாராயணன் கவி

ஆறடி நிலத்தில் அடங்க போகும் மனிதன் தன் குறுகிய வாழ்வில் ஜாதி, மத, மொழி பேதங்களைப் பார்க்கிறான். மனிதர்களால் வெறுக்கப்படும் காக்கா மனிதனுக்கு “வேற்றுமை பாராட்டாதே, ஒற்றுமையைக் கடைப்பிடி” என்ற அற்புத அறிவுரைகளைத் தன் செயல்கள் மூலம் காட்டுகிறது. கற்றுக் கொடுக்கிறது.

இப்பாடலை ஆண், பெண், முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாட வேண்டும். அவசியம் பாட வேண்டும். காக்காவிற்கு உணவிட்டு பாடினால் அது உவகையையும் தரும். நல்ல பாடம் ஒன்றையும் கற்றுத்தரும்.

12. “ஒவ்வொரு பூக்களுமே” (படம் ஆட்டோகிராப்)

பாடல் பா.விஜய். – ஆண்கள்-பெண்கள் சேர்ந்து பாட வேண்டிய பாடல்

13. “ஆனந்த யாழை”

படம். தங்க மீன்கள்) பாடல் நா.முத்துக்குமார் – தந்தைகள் தன் மகள்களை பார்த்து பாட வேண்டிய பாடல்

14. சின்ன சின்ன இசை 

இது இயற்கையை ரசித்து மகிழும் பாடல் 

படம் ரோஜா

சின்ன சின்ன ஆசை

இது இயற்கையை ரசித்து மகிழும் பாடல்

பாடலாசிரியர் வைரமுத்து

இசை AR RAHMAN

இது இயற்கையை ரசித்து மகிழும் பாடல்