போட்டோ பத்திரிகையாளர்
முப்பது ஆண்டுகள் முன்னாள் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கேமரா தேவை. பிலிம் தேவை. போட்டோ எடுத்து அதைப் போட்டோ ஸ்டுடியோவில் கொடுத்து அவர்கள் அதைக் கழுவி பிரிண்ட் போட்டு அது நம் கையில் வந்து சேர ஒரு வரமாகவது பிடிக்கும். அது கையில் கிடைத்த பிறகுத்தான் போட்டோ நல்லா வந்திருக்கா என்பது தெரியும். ஆனால் இன்று நிலைமை தலைகீழா மாறி விட்டது. படம் எடுக்கலாம். உடனே பார்க்கலாம். அடுத்த கனமே படங்களை நூறு பேருக்கு அனுப்பலாம் . இது மொபைல் யுகம் . அக்னி ஸ்திரீ பெண்கள் கையில் ஒரு போட்டோ எடுக்கும் மொபைல் வைத்துக் கொள்ள வேண்டும் . இதற்கு பல பயன்கள் உள்ளன.
- உள்ளத்தைத் தொடும் காட்சிகள் தென்பட்டால் உடனே படம் எடுக்கலாம் (படமே பேசும்)
- யாராவது நடவடிக்கை சந்தேகம்படும்படி இருந்தால் , சாமார்த்தியமாக படம் எடுங்கள்.
- மக்கள் பிரச்சனைகள் எது தென்பட்டாலும் உடனே படம் எடுங்கள்
- சுற்றுசூழல் சீர்கேடுகளைப் படம் எடுங்கள்
சுருக்கமாக சொல்வதென்றால் நீங்கள் ஒரு மக்கள் பத்திரிகையாளர். அந்த படத்தை உங்கள் கருத்துகளோடு உங்கள் முக நூலிலும் வாட்ஸ்அப் மூலமாகவும் அனைவர்க்கும் அனுப்பி விழிப்புணர்வு கொண்டு வாருங்கள் .
நீங்கள் ஒரு பெண், ஒரு பெண் புகைப்பட நிபுணர், ஒரு பெண் எழுத்தாளர், ஒரு பெண் ஆசிரியர். ஒரு பெண் வெளியீட்டாளர் ஒரு பெண் பத்திரிகையாளர்