Select Page

பேசு, மேடையேறி பேசு

பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்

பேசு, மேடையேறி பேசு (Speak & Peak)

  1. மேடை ஏறி பேசும் திறமை மற்றும் ஆற்றல் உடைய பெண்கள், ஆண்கள்  மற்றும் இளைஞர்கள் உங்களிடையே பலர் இருக்கிறார்கள். இத்திறமையைப் “பெண்கள். மற்றும் குழந்தைகள்     பாதுகாப்பு , முன்னேற்றம், விழிப்புணர்வு” ஆகியவற்றிர்காக, முதலில் பயன்படுத்துங்கள். இது அவசியம், அவசரமும் கூட.
  2. அடுத்ததாக இத்திறமை உடைய பெண்கள் தங்களின் இத்திறமையை இது போன்ற மிக உயரிய இலட்சியங்களுக்காக   வளர்த்துக் கொள்வது நல்லது. அது அவர்களுக்கு நன்மை பயக்கும், சமுதாயத்திற்குப் பெரும் நன்மை பயக்கும். 
  3. மூன்றாவதாக இத்திறமை அறவே இல்லாத பெண்கள்,  இந்த புனித வேள்விக்காக அவசியம் இத்திறமையை எளிதாக பெறலாம். பெறுவதற்கு வழி காட்டப்படுவார்கள்.
  4. அவர்கள் இந்த திறமையை பெறும்போது நிஜ வாழ்க்கை கதாநாயகிகளாக ஜொலிப்பார்கள்.
  5. அக்னி ஸ்திரீ பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு திறமை வங்கியாக (Talent Bank) திகழ்வார்கள்.

அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக பேச அதுவும் மேடைப் பேச்சைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  1. பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் பற்றி பேச.
  2. மதுப்பழக்கத்தைத் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் விட்டுவிட கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் மனோதத்துவங்கள் பற்றி பேச வேண்டும். மது அடிமையை மாற்றுவதில் தாங்கள் அடைந்த வெற்றியையும், அதற்குக் காரணமாக இருந்த அணுகுமுறை பற்றியும் அவசியம் பேச வேண்டும். அதனால் மற்ற பெண்கள் பலன் அடைவார்கள்.
  3. தங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்ள பேசலாம். அதனால் அவர்களிடையே தன்னம்பிக்கைத் தலைத்தூக்கும். தலைமை குணாதிசயங்கள் வளரும். மேலும் அவர்கள் பேச்சாளர்களாக பிரகாசிக்கலாம்.
  • பேச்சு……பேசு (Speak & Peak) மூன்றே மாதங்களில் ஒரு சிறந்த பேச்சாளராக மாறலாம். உங்கள் பேச்சால் உங்கள் ஊரையே மாற்றலாம்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றிப் பெற (Speak & Speak) பல திறமைகள் தேவை. மிக முக்கியத் திறமை பேச்சாற்றல். ஒரு சாதாரண கட்சித் தொண்டன் கூட பேச்சாற்றலால் ஒரு தலைவனாகிவிடுகிறான். சம்பாஷனை என்பது ஒருவர் தனிப்பட்ட முறையிலோ அல்லது ஒரு சிறிய குழுவிடம் மட்டுமே செய்ய முடியும். பேச கற்றுக் கொண்டால் பல நூற்றுக்கணக்கான மக்களிடம் நம் கருத்துக்களை தெரிவிக்கலாம். பெண்கள் அக்னீ ஸ்திரீ பேச்சாளர் குழு அமைத்துக் கொள்வார்கள். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 பேர் மட்டுமே இருக்கலாம். வாரம் ஒருமுறை இவர்கள் கூடுவார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தலைப்பில் ஐந்து நிமிடத்திற்கு மேற்படாமல் உரையாற்றுவார்கள். மூன்று மாதங்கள் அப்படி உரையாற்றினால் போதும். இதில் பங்கேற்பவர்கள் பேச்சாளர்களாக மாறிவிடுவார்கள். அவர்களுடைய வார்த்தைகள் வளம் கூடும். தன்னம்பிக்கை தலைத்தூக்கும். இது மொத்தம் ஒருமணி நேரம் நடக்கும். ஒரு பெண் தான் பேசுவதோடு மட்டும் அல்லாமல் மற்ற குழு உறுப்பினர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேட்பார். ஒவ்வொரு பெண்ணின் அறிவும் கூடும். ஒரு வருடத்தில் ஒவ்வொரு பெண்ணும் நடமாடும் பல்கலைக்கழகமாக மாறிவிடுவார்கள்.

கவனம் தேவை: தலைப்பு எது வேண்டுமானாலும் இருக்கலாம். தன் வீட்டில் இருக்கும் மது அடிமைகளை மாற்றிய அனுபவமாககூட இருக்கலாம். அல்லது எப்படி மது அடிமைகளை மாற்றிலாம் என்ற ஆலோசனையாக கூட இருக்கலாம். பொது அறிவு இருக்கலாம். மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளலாம். ஜாதி, மத, மொழிகளை தூண்டுவதாக இருக்கக்கூடாது. எவர் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம். இந்தக் குழுவில் பெண்கள் பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். காண்க

சிறந்த உரைகள் 

குழந்தைகளின் அற்புத மேடை உரை 

அழகு பற்றி பாரதி பாஸ்கர் 

சிறப்பு பட்டிமன்றம் – அதிரவைத்த பேச்சு

https://www.youtube.com/watch?v=tClqebrAhyQ Note: Video not available

பாரதி பாஸ்கர் “நீ நதி போல் ஓடிக்கொண்டிரு” 

Pattimandram Raja & Mrs. Bharathi Baskar in Jaffna

பரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள் சமாளிப்பது எப்படி ?

சிறந்த முறையில் குழந்தை வளர்வதில் அல்லது பராமரிப்பதில் பெற்றோர் பங்கு .

Speak & Speak. See link English