பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்
பாடு உத்வேக பாடல்களைப் பாடு
சேர்ந்து பாடு
பாடு, உத்வேக பாடல்களைப் பாடு
- “பாடு உத்வேக பாடல்களைப் பாடு” மற்றும் “இசை இசை” இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்
- “இசை இசை” என்பது “இசை உலகம் முழுவதும்” என்று பொருள் படும் . பெண்களே பாடல்கள் இயற்றுவது , இசை அமைப்பது ,இசை கருவிகளை வாசிப்பது ,பாடுவது என்று அனைத்தும் உள்ளடக்கியது .
- “பாடு உத்வேக பாடல்களைப் பாடு” என்பது சிறந்த பாடல் ஆசிரியர்கள் கருத்து செறிந்த பாடல்களை இயற்றி, சிறந்த இசை அமைப்பாளர்கள் , இசை அமைத்து சிறந்த பாடகர்கள் பாடிய காலத்தை வென்ற , நெஞ்சில் நீங்க இடம் பெற்ற உத்வேகம் , உற்சாகம் ஊக்கம் தரும் பாடல்களைத் தனித்தோ சேர்ந்தோ பாடுவதாகும் . அதனால் சோகம் அகலும், மகிழ்ச்சி உண்டாகும் நம்பிக்கை பிறக்கும் .
அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே பாடகர்கள் நிச்சயம் இருப்பார், முதலில் அவர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. இந்த திறமை உள்ளவர்கள் இல்லையென்றால் மிக மிக நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு இத்திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ பெண்களின் திறமை வங்கியாக (Talent Bank) திகழும். (முக்கியம் தெரு நாடகம்) நாடகம் செய்திகளைச் சொல்ல ஒரு நல்ல ஊடகம்.
அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக பாட்டு பாடலாம், பாட்டு எழுதலாம்.
- பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்.
- மது அடிமைகள் மனம் மாற்றம் பெற
- பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடல்களைக் கூட்டத்திற்கு ஒன்று என்று அவசியம் பாட வேண்டும். சேர்ந்து கோரஸாக (Chorus) பாட வேண்டும். கிறிஸ்துவர்கள் சர்ச்சில் சேர்ந்து பாடுவார்கள். அதற்கு பெயர் காயர் (choir). 100 பேர் சேர்ந்து பாடினாலும் கேட்பது ஒரு குரலாகத்தான் இருக்கும். அது போன்று பாட வேண்டும். குழு உணர்வை அது வளர்க்கும் (Team Spirit ) .
கும்கி பட பாடலைப் பாடும் பின்லாந்து நாட்டு மாணவிகள்
இங்கு பகிர்ந்துக் கொள்ளப்பட்ட பாடல்கள் அனைத்தும் காலத்தை வென்று வருபவை. சாகா வரம் பெற்றவை. நமக்குத் தேவையான பண்பாடுகளை மிகச்சிறப்பாக கூறுகின்றன. வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தினந்தோறும் ஒரு பாடலையாவது பாடுவது உகந்தது. இது நன்மைகள் பல பயக்கும். மேலும் அவர்கள் பாட்டு உலகில் பாடகர்களாக பிரகாசிக்கலாம்.
பாட்டு.. பாடு அக்னீ ஸ்தீரி பரிந்துரைத்துள்ள 15 பாடல்கள் நாட்டுப்பண் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து ஆகிய பாடல்கள் போன்று பாடப்பட வேண்டிய பாடல்கள். பரிந்துரைத்துள்ள பாடல்களையும் அடிக்கடி சேர்ந்து பாடுவது ஊக்கத்தையும், ஆக்கத்தையும், உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தரும். பெண்கள் கூடும் போதெல்லாம் பரிந்துரைத்துள்ள பட்டியலில் தரப்பட்ட பாடல்களைப் பாடுங்கள். ஒரு பாடலையாவது அவசியம் பாடுங்கள். சேர்ந்து பாடலாம். சேர்ந்து பாடுவது அவசியம். அவசியம் அடிக்கடி சேர்ந்து பாடவும். இப்பாடல்கள் ஆழ்மனதில் பதிந்து நல்மாற்றத்தை விளைவிக்கும்.பாடினால் பாடும் திறமை கூடும். சேர்ந்து இசைக்கும் போது அது அவர்களின் நற்பண்புகளை வளர்க்கும். குழுவாக செயல்படும் போது அது அவர்கள் ஆற்றலை அதிகரிக்கும், பன்மடங்காக்கும் (TEAM SPIRIT). வார்த்தை வளம் வளரும். தன்னம்பிக்கைத் தலைத்தூக்கும். ஒற்றுமை ஓங்கும். மகிழ்ச்சி மலரும். மனோதத்துவ ரீதியாக இது மிக அவசியம். அந்த பாடல்கள் அற்புத பாடல்கள்.
இந்த பட்டியலில் தரப்பட்ட பாடல்கள் மட்டுமின்றி பெண்களே பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பாடலாம். நீங்கள் விரும்பிய நல்ல கருத்து ஆழமுள்ள பாடல்களையும் இந்த பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். உற்சாகம் தரும் எந்த பாடலையும் பாடலாம். நடனமும் ஆடலாம். இன்னலுக்குள்ளாகும் பெண்களுக்கு தேவை மகிழ்ச்சி. ஆகவே அனைவரும் பாடி மகிழ்ச்சியுடன் நடனம் ஆடலாம். எப்படியாவது அனைத்து பெண்களையும் பாட வைக்க வேண்டும். நடனம் ஆட வைக்க வேண்டும், பாட்டியும் சேர்த்து. அவள் பொக்கை வாய் சிரிப்பு அனைவருக்கும் சிரிப்பை உண்டாக்கும். அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும்.
நிபந்தனைகள்
ஆனால் இந்த பாடல்கள் பாடுவதற்கு முன்னால் அங்கு அக்னீ ஸ்தீரி இயக்கம் பரிந்துரைத்துள்ள பாடல்களில் ஒரு சிலவற்றையாவது அவசியம் பாட வேண்டும்.
- பெண்களே தேர்ந்தெடுத்து பாடும் பாடல்களில் பெண்களை இழிவுப்படுத்தும் சொற்கள் அறவே இருக்கக்கூடாது.
- ஜாதி, மத, மொழி ஆகியற்றை இழிவுப்படுத்தும் சொற்கள் அறவே கூடாது.
- தாய்நாட்டை இழிவுப்படுத்தும் பாடல்கள் அறவே கூடாது.
- ஒரு சில நாட்களில் பெண்கள் அக்னீ ஸ்தீரி குழு ஒன்றை உருவாக்கி ஊரையே கலக்குவார்கள்.
- அவர்கள் வீட்டை விட்டு மது புறமுதுகிட்டு ஓடிவிடும்.
- இந்த மேடை மெல்லிசை குழுவில் நூற்றுக்கு நூறு பெண்களே இடம் பெறுவார்கள். அவர்களே பாடுவார்கள். கீ போர்டு (Key Board) கூட அவர்களே வாசிப்பார்கள். (ஆண் குரலுக்கு ஆண்களை சேர்த்துக் கொள்வது)
சேர்ந்திசைத்தல்
மிகச்சிறந்த பாடலாசிரியர்கள், நம் தமிழ்மொழியை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் எழுதிய அற்புத பாடல்கள் இவை. இது பாறைப் போன்ற மனதையும் உடைத்து நொறுக்கும். கல் நெஞ்சையும் நெகிழ வைக்கும். தீயவர்கள் மனதிலும் நெருடலை உண்டாக்கும். ஆகவே இந்தப் பாடல்களை சேர்ந்து இசைக்கவும். காயர் (Choir) போன்று இந்தப் பாடல்களை பாட வேண்டும். நின்றுப் பாடும் போது இரண்டு, மூன்று வரிசையாக நின்றுப் பாட வேண்டும். உயரம் குறைவானவர்கள் முன் வரிசையிலும், உயரமானவர்கள் பின் வரிசையிலும் இருந்து பாட வேண்டும். உங்கள் ஊரில் ஏதாவது படிக்கட்டுகள் இருந்தால் (உதாரணமாக பள்ளிக்கூடம்) அதில் வரிசையாக நின்று பாட வேண்டும். அனைவரும் ஒரே சீராக, ஒரே குரலில் பாட வேண்டும். இதற்கு பயிற்சிகள் அவசியம்.
ஒருவருடைய குரல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவர்கள் சேர்ந்து பாடும் பொழுது காதில் விழும் பாடல் சிறந்த ஒன்றாக இருக்கும். இதுதான் ஒற்றுமையின் சிறப்பு. தேசிய கீதம் அனைவரும் பாடுவார்கள். ஆனால் நம் காதுகளில் விழும் பாடல் சிறப்பாக இருக்கும். ஆகவே சேர்ந்தே இசைக்க வேண்டும்.
இதோ சேர்ந்து இசைக்க வேண்டிய பாடல்களின் பட்டியல்.
இந்த பாடல்கள் காலத்தை வென்ற பாடல்கள். மனதை செதுக்கும் பாடல்கள். மனதை செப்பனிடும் பாடல்கள். நாங்கள் கொடுத்துள்ள பாடல்கள்,
தாய் நாட்டு பற்றை ஊக்குவிக்கும் பாடல் கள்
- தாயின் மணிக்கொடி பாரீர்
- வந்தேமாதரம்
- தமிழா…..தமிழா……
- வாழிய செந்தமிழ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் மொழி மீது தீராக் காதலை உண்டாக்கும் பாடல்கள்
- “தமிழுக்கும் அமுதென்று பேர்”
இதை சேர்ந்து பாடும் போது பெண்கள் தமிழ் மொழியின் பெருமையை உணர்வார்கள். தமிழ் பெண்களுக்குரிய குணாதிசயங்களை பெறுவார்கள்.
- தமிழன் என்றொரு இனம் உண்டு
- சங்கே முழங்கு சங்கே முழங்கு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இயற்கையை ரசித்து மகிழும் பாடல்கள்
- சின்ன சின்ன ஆசை
- நிலா காய்கிறதே
- நிற்பதுவே நடப்பதுவே
https://www.youtube.com/watch?v=nx91opkZ09I&list=RDbjsM64B6wAU&index=6 Note: Video not available
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பாசத்தைப் போற்றும் அற்புத பாடல்கள்
- மகன் தாய் மீது பொழியும் அன்பு
இந்தப் பாடலை பெண்கள், குழந்தைகள் அனைவரையுமே தங்கள் அன்னையர்களை அமர வைத்து அவர்களைப் பார்த்து முகபாவனைகளோடு, உணர்ச்சியோடு சேர்ந்து அனைவரும் பாட வேண்டும்.
அம்மா என்று அழைக்காத உயிரில்லை
- குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் பாட வேண்டிய பாடல்
ஓடி விளையாடு பாப்பா
- “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா”
இதை அனைவரும் சேர்ந்து இசைக்க வேண்டும், முழுப்பயனையும் பெற வேண்டும் என்றால் குழந்தைகளை எதிரே உட்கார வைத்து, அவர்களைப் பார்த்து முகபாவனைகளோடு உணர்ச்சியோடு சேர்ந்து அனைவரும் பாட வேண்டும்.
இன்னொரு ஒரு அற்புத பாடல்
“சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா”
- தந்தை மகள் மீது பெய்யும் பாச மழை
https://www.youtube.com/watch?v=n7vn8osqD7c Note: Video not available
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமுதாய சீர்திருத்த மற்றும் உத்வேகப் பாடல்கள்
- சமநீதி சமுதாயத்தைப் போதிக்கும் பாட்டு
இது சமதர்ம சமுதாயத்தை ஊக்குவிக்கும். ஒரு சமதர்ம சமுதாயத்தை அடைய இந்தப் பாடல் உதவி புரியும்.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்…….
- மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் பாடல் : சின்னப் பயலே சின்னப் பயலே செய்தி கேளடா
- மானுட ஒற்றுமையை மனிதன் கற்று கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்து காட்டும் பாடல் : “கா….கா…..கா”
- இளைஞர்களை உத்வேக படுத்தும் பாடல்கள்
அனைவரும் இளைஞர்களைப் பார்த்து பாட வேண்டிய பாடல்
ஒளி படைத்த கண்ணினாய் வா வா
http://tidido.com/a35184373501611/al560162d9e7c622686aa61b1b/t560162dae7c622686aa61c4b Note: Dead link
- அனைவர்க்கும் உத்வேகம் தரும் பாடல்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு……
உற்சாகம், ஊக்கம், உத்வேகம் அனைத்தையும் உடனடியாக தரும் வலிமையுள்ள பாடல் இது.
- தன்னம்பிக்கையை உயர்த்தி தலை நிமிர வைக்கும் பாடல்
அச்சம் என்பது மடமையிடா
https://www.youtube.com/watch?v=Yx6lROSCnTQ&feature=youtu.be
- அனைத்திலும் நம்பிக்கை இழந்தவரையும் நம்பிக்கை பெற ஊக்குவிக்கும் பாடல்
“ஒவ்வொரு பூக்களுமே”
https://youtu.be/7Z8bBLu1hPk Note: Video not available
- பெண்கள் உத்வேகத்திற்காக
அச்சம்….அச்சம்…. இல்லை…. இனி அடிமைத்தனம் இல்லை…..
- பெண்களுக்கு உத்வேகம் தரும் பாடல் . பெண் இலக்கணத்தைத் தெரிவிக்கும் பாட்டு
காலங்களில் அவள் வசந்தம்
- வாய் வீட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” . சோகங்களை அதிகமாக சந்திக்கும் பெண்களுக்குத் தேவை சிரிப்பு . இந்த பாடலை என் எஸ் கே , டி எ மதுரத்துடன் பெண்கள் சேர்ந்து பாடவேண்டும் . அந்த மகிழிச்சியை எந்த ஒரு கருவியாலும் அளவிட முடியாது
சிரிப்பு…. சிரிப்பு…..(படம் ,,,,,,,,,)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உற்சாகம் பொங்க அனைவரும் சேர்ந்து பாடி ஆட வேண்டிய பாடல்கள்
- பல்லேலக்கா
இந்த பாடலைத் தமிழ் நாட்டின்வர் மற்றும் இல்லாமல் அணைத்து நாட்டினரும் உத்வேகம் பெற உர்ச்சகத்துடன் பாடுகிறர்கள்
வெள்ளைக்காரர்கள் , கருப்பு நிறத்தினவர், சீனர்கள் அனைவரும் பாடுகிறார்கள் . நீங்களும் சேர்ந்து பாடி ஆடுங்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
- நீங்களும் சேர்ந்து பாடி ஆடுங்கள்
அன்ன நடை பாட்டு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
- நீங்களும் சேர்ந்து பாடி ஆடுங்கள்
தேவுடா தேவுடா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
- என்ன சத்தம் இந்த இரவில்
1. கூட்டத்தில் முதலில் இப்பாட்டைப் பாட வேண்டும் வாழிய செந்தமிழ்
- கூட்டம் முடியும் முன் இப்பாடலைப் பாட வேண்டும்
http://play.raaga.com/carnatic/song/album/Bharathiyar-Songs-CL00261/Vazhiya-Senthamizh-47555
http://tidido.com/a35184373742645/al55d7158d13b521ef228e4863/t55d7158e13b521ef228e4884 Note: Dead link