மூன்று பாடல்களின் சாறு போன்ற அற்புத கருத்துக்களைச் சொல்லும் வரிகளை மட்டும் பகிர்ந்துக் கொண்டுள்ளோம். இப்பாடல்களையும் நீங்கள் கேட்கலாம்.
எல்லா கூட்டங்களிலும் இந்த குறும்பாடல்களை அவசியம் அனைவரும் சேர்ந்து பாட வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு அற்புத வாழ்க்கை தத்துவத்தைச் சொல்லிக் கொடுக்கிறது.
இந்த மூன்று பாடல்களின் சில வரிகளைப் பாட 10 நிமிடங்கள் போதும்.
குறுகிய காலத்தில் இப்பாடல்களில் கூறப்பட்டுள்ள உயரிய கருத்துக்கள் உங்கள் வாழ்க்கையின் வழி முறையாகி விடும். பிறகு என்ன . பொழுதெல்லாம் மகிழ்ச்சிதான்
படகோட்டி
குரல் : T M சௌந்தரராஜன் வரிகள்
வாலி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
Music : Viswanathan & Ramamoorthy,
சமத்துவம் என்ற உயர்ந்த வாழ்க்கை பண்பாட்டினைக் கற்றுத் தருகிறது இந்த வரிகள்.
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
பராசக்தி
கா…. கா….கா….கா….கா….
உடுமலை நாராயண கவி
பாடியவர் C S ஜெயராமன்
இசை ஆர் சுதர்சனம்
ஒற்றுமையாக வாழ வேண்டும், பகிர்நது உண்ண வேண்டும் என்ற சிறந்த நெறி முறையைச் சொல்லித் தருகிறது இந்த வரிகள்.
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே……ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாதத்தாதீங்க – எங்க பாடுங்க
திரைப்படம் : அரசிளங்குமாரி
இசை : T.ராமநாதன்
பாடகர் : T.M. சௌந்தரராஜன்
எழுத்தாளர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
போலி மூட நம்பிக்கைகளுக்கு சாவு மணி அடிக்கிறது இந்த வரிகள்
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே – நீ வெம்பிவிடாதே
சின்னப் பயலே…… சின்னப் பயலே சேதி கேளடா