4. பல்கலை குடும்பம் Family Faculty
ஒரு மது அடிமையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் பலர் பல்வேறு திறமைகள் மற்றும் பண்பாடு உடையவர்களாக இருப்பார்கள்.
மது அடிமையின் மீது உள்ள அக்கறை காரணமாக அவரை மீட்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தயாராக இருப்பார்கள். அவர்களை ஒன்றுசேர்த்து இப்பணியில் ஈடுபடுத்தும் ஒரு ஏற்பாடே பல்கலைக்குடும்பம்.
பல்கலைக்குடும்பத்தில் கீழ்க்கண்டவர்களை அன்போடு அழைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- குடும்ப உறுப்பினர்கள்
- குடும்ப உறுப்பினர்களுடைய உடன் பிறந்தவர்கள்
- வீட்டு மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரின் குடும்பத்தினர் (extended family)
- நெருங்கிய உறவினர்கள் &
- குடும்ப உறவினர்கள்
இவர்களில் பலர் பல திறமைகளை உடையவர்களாக இருப்பார்கள். பலர் பல திறமைகளை உடையவர்களாக இருப்பார்கள். பல அறிவைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தாலே போதும். பிறகு நடப்பது அனைத்துமே அதிசயப்பட வைக்கும்.