Select Page

நிபுணர்கள் சங்கமம் EXPERTS CONFLUENCE

  1. “அக்னி ஸ்திரீ” நிபுணர்கள் சங்கமம்

“Agni Stree Experts Communion”

Research GOOGLE

மனோதத்துவ வல்லுனர்கள், மன நோய்க்கான சிகிச்சை நிபுணர்கள், மது அடிமைகளை மருத்துவம் மூலம் குணப்படுத்தும் மருத்துவர்கள், மது போதை மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் ஆகியவர்கள் அடங்கிய அக்னீ ஸ்தீரி நிபுணர்கள் குழு. (ஆண் மற்றும் பெண் இருபாலரும்)

மனநோய் மருத்துவம் மற்றும் மனோதத்துவம்

(Psychiatry & Psychology)

“பொறுத்தது போதும் பொங்கியெழு”

(5 முறை சொல்ல வேண்டும்)

  • 7ஆம் அறிவு மனப்  ப்ரோக்ராம்மர்கள் (7th Sense Mind Programmers) 
  • மனநோய் மருத்துவம் (Psychiatry & Psychology)
  • எக்ஸ்னோரா, வனிதையர்கள் எக்ஸ்னோரா, அரிமா, ரோட்டரி, ரவுண்ட் டேபிள், ஜேஸீஸ், இன்னர் வீல், அரிமா நங்கையர் மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியோரின் ஆதரவுடன் மனநோய் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மூலமாக மதுவால் மன நோய்க்குள்ளானவர்கள் மருத்துவ ரீதியாக மதுவிலிருந்து மீட்கப்படுவார்கள். அவர்களுக்கு மனநோய் கவுன்சிலிங் தரப்படும்.
  • மருத்துவம் மூலம் மாற்றம் (Change through Medical Treatment)

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம், அலோபதி, ஹோமியோபதி, அக்குபஞ்சர், காந்த மருத்துவம் போன்ற எண்ணற்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி மது அடிமைகள் குணப்படுத்தப்படுவார்கள். இரத்தத்தில் நச்சுத்தன்மை அகற்றும் மருத்துவம் (De-toxication) தர ஏற்பாடு செய்யப்படும்.

  • மனோதத்துவம் (Psychology):

மனோதத்துவ நிபுணர்கள் மூலம் மது அடிமைகளுக்கு மறுவாழ்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சமூக ஆலோசனை வழங்குபவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படும். நடத்தை மற்றும் சிகிச்சை (Behaviour Modification Therapy) இவர்களுக்கு அளிக்கப்படும். இவர்கள் மது அடிமை கவுன்சிலிங், மது அடிமையின் குடும்ப உறுப்பினர்கள் கவுன்சிலிங் (Family Counselling) அதாவது குடும்ப உறுப்பினர்கள் மது அடிமையிடம் எப்படி நடந்து கொள்வது? எப்படி மது அடிமைகளை இவர்கள் மாற்றுவது? என்று குடும்ப உறுப்பினர்களுக்குக் கவுன்சிலிங் செய்யப்படும்.

  • ரெய்க்கி (Reiki), பிரானிக் சிக்சிச்சை (Pranic healing):

ரெய்க்கி மற்றும் பிரானிக் முறைகள் மூலம் மது அடிமைகளுக்கு மதுவால் ஏற்பட்ட நோய்களுக்கு வித்தியாசமான சிகிச்சை முறையில் பரிகாரம் காணலாம்.