நாடகம் நடி, நடத்து
பாதகம் போக்க நாடகம் நடத்து
அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே நாடக உலகினர் நிச்சம் இருப்பார்கள். முதலில் அவர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. இந்த திறமை உள்ளவர்கள் இல்லையென்றால் மிக மிக நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு இத்திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ பெண்களின் திறமை வங்கியாக (Talent Bank) திகழும். (முக்கியம் தெரு நாடகம்) நாடகம் செய்திகளைச் சொல்ல ஒரு நல்ல ஊடகம்.
அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக நாடகம் நடத்த வேண்டும். அதில் கதாபாத்திரங்களாக மாறி நடிக்க வேண்டும்.
- பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்.
- முக்கியமாக இங்கு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், பெண்களே இழைத்த அநீதிகள், பத்திரிக்கைகளில் வெளியான உண்மை சம்பவங்கள், கதைகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. (நிஜபாத்திரங்களின் பெயர்களை இங்கு பயன்படுத்துவது அறவே கூடாது).
- மதுப்பழக்கத்தை மது அடிமைகள் விட்டு விட கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் நுணுக்கங்கள் அல்லது பெண்கள் திருந்திய கதைகளை நாடகமாக நடிப்பது அவசியம். தாங்கள் நடிக்கும், நாடக, கதை வசனம் எழுதும், இயக்கும் ஆகிய திறமையை வளர்த்துக் கொள்ள நாடகங்கள் நடத்தலாம். மேலும் அவர்கள் நாடக உலகில் பிரகாசிக்கலாம்.