தவறாமல் தகவல் பகிர்ந்து கொள்ளுதல் (Information Updating )
இன்று நடக்கும் பல பெண்களுக்கு எதிரான தாக்குதல், கற்பழிப்பு மற்றும் கொலை ஆகியவைகள் திடீரென்று ஒரு நாள் நடக்கும் ஒன்று அல்ல.
பல நாட்கள் நடக்கும் பாலியல் இம்சைகளின் கிளைமாக்ஸ்ஸே இவை.
உண்மையான பிரச்சனை வேறு.
இப்படி நாள்தோறும் நடக்கும் தொல்லைகள் மற்றும் அநீதிகளைப் பாதிக்கப்படும் பெண்கள்
- தங்கள் குடும்பத்திற்கும் ,
- நெருங்கிய உறவினர்கள் மற்றும்
- தோழியர்களுக்குத்
தெரிவிப்பதில்லை. தங்களுக்குள்ளேயே புதைத்து வைக்கிறார்கள். இப்படி நடப்பவை அனைத்தையும் அவ்வப்போதே பகிர்ந்து கொண்டிருந்தால் பிரச்சனை முளையிலே கிள்ளப்பட்டிருக்கும்.
இதைக் கேள்விப்பட்டவுடன் அவர்கள்
- தகுந்த ஆலோசனை வழங்கியிருப்பார்கள் ,
- பாதுகாப்பு ஏற்பாடு செய்திருப்பார்கள்
- நிழலாக இருந்து கண்காணித்திருப்பார்கள்
- தொலை கொடுப்பவரின் குடுபத்தினரிடம் தொடர்பு கொண்டு அதற்கு ஒரு முற்று பள்ளி வைத்திருப்பார்கள் .
- எதுவுமே முடியவில்லை என்றால் காவல்துறைக்கு புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருப்பார்கள்.
ஆகவே தங்கு தடையின்றி தகவல் தருதல் (Everyday Information Updating) என்பதை ஒரு வாடிக்கையாக ஆக்கி கொள்ள வேண்டும் .
- தகவல் அகவல் (அகவல் என்றால் கேட்பது / கூறுவது / அழைப்பது என்று பொருள் படும் )
- நாள்தோறும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் தகவல்களைப் பெறவேண்டும்.
- ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் இரவு உணவு சாப்பிடும் போதும் அன்று நடந்தவைகளை மற்றவர்களுக்குக் கூறுவதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும் .
- இதை மட்டும் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் செய்தால் அது பெரும் அளவில் பாதுகாப்பைப் பெற்று தரும் .
- எதாவது சரியாக படவில்லை என்றால் குடும்ப உறுப்பினர்கள் பேசி விவாதித்து என்ன நடவடிக்கைகள் எடுப்பது , யார் யார் உதவியை நாடுவது என்று முடிவு செய்யலாம்.
- நாள் தோறும் கற்பழிப்பு / கொலைகள் நடந்து வருகின்றன .
- இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்குக் கொடுமை இழைப்பவன் , பல நாட்கள் தொல்லைகள் / இம்சைகள் (torture / pinpricks) செய்த பிறகுதான் கொடூர செயல்களில் ஈடுபடுகிறான்
மேலும் அக்னி ஸ்திரீ மற்றும் தோழமை அமைப்புகள் இதற்காகவே தொடங்கப்பட்டு சேவை ஆற்றி வருகின்றன
இதோ அந்த அமைப்புகளின் பட்டியல்
அவர்கள் தங்கள் ஸ்தாபன அனுபவம் காரணமாக , எளிதில் விடை காண்பார்கள் . முழு பாதுகாப்பு பெற்று தருவார்கள் . ஸ்தாபன ரீதியாக பிரச்னைக்கு நிரந்தர விடை காண்பார்கள்
இதோ அந்த அமைப்புகளின் பட்டியல்