அக்னி ஸ்திரீ பெண்கள்
“தன்னம்பிக்கை உறுதி மொழி”
உறுதி மொழி ஏற்று
“தன்னம்பிக்கை தளபதி”
என்று பாராட்டு பெறுங்கள்
- நாள்தோறும், நிமிடந்தோறும், நொடிதோறும்,
- கயவர்களின் கபடச் செயல்களால்,
- கொடுமைக்குள்ளாகி ,
- தாங்க முடியாத வேதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு,
- பிரச்சினைகள் என்ற படுகுழியில் தள்ளப்பட்டு,
- சுனாமியை ஒத்த நிஜ வாழ்க்கை சோதனைகளால் உருக்குலைக்கப்பட்டு,
- அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு,
- வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையிலும்,
- தொய்வடையாத தன்னம்பிக்கையோடும்,
- தளராத மனதோடும்,
- இடைவிடாது முயற்சிகளை மேற்கொண்டு,
- பிரளயமே வந்தாலும் பின் வாங்கமாட்டேன்,
- தடைக்கற்களைப் படிக்கற்களாக்குவேன்,
- பிரச்சினைகளைப் பரிசுகளாக்குவேன்,
- எனக்கு வரும் சோதனைகளை வாழ்க்கையின் சாதனைகளாக மாற்றுவேன்,
- தோல்விகளை வெற்றிகளாக்குவேன்,
- சோகத்தை மகிழ்ச்சியாக்குவேன்,
- என்று நான் மற்ற அக்னி ஸ்திரீ சகோதரிகளோடு சேர்ந்து சூளுரைக்கிறேன்.