Select Page

டயரொட்டிகள் அறிவிப்புகள்

டயரொட்டிகள் (Tyre posters Signs Science – சாலை அறிவிப்புகள்)

சுவரொட்டிகள் என்ற வார்த்தையை அக்னி ஸ்திரீ அமைப்பின் தாய் அமைப்பான எக்ஸ்னோரா (ExNoRa) பயன்படுத்துவதில்லை. சுவரொட்டி ஒட்டுவதில்லை. காரணம் மக்களுக்குச் செய்திகள் எப்படி தெரிவிப்பது?

இதோ வழி

முதலாவதாக போஸ்டர்” ஒட்டுவதற்கு தேவை பழைய சைக்கிள் டயர் அல்லது மூங்கில் ஓலை தட்டி.

அட்டைகள் டயரொட்டிகள்  (Tyre posters ) . அந்த தட்டி / டயர் போஸ்டர்களை வைக்க அல்லது பொருத்த கீழ்க்கண்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம்.

  • வாகனங்களில் / பேருந்து பின்னால்
  • தெரு விளக்குப் போஸ்டர்ஸ்
  • அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போஸ்டர்ஸ்
  • மனித போஸ்டர்ஸ்  (Human Posters )
  • திரை அரங்குகளில்
  • கல்லூரி சுரொட்டிகளுக்கான இடத்தில்
  • அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில்

ஏன் டயரொட்டிகள்?

பாமர மக்கள் விவரம் தெரியாமல் பழைய டயர்களை எரிக்கின்றார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அந்த நச்சுப்புகையைச் சுவாசித்தால் புற்றுநோய் வரும். ஆகவேதான் டயரொட்டிகள். பழைய டயர்களை எரிக்காமல் பயன்படுத்த இது ஒரு சிறந்த வழி.

  • புதுமை பதுமை (Invent Event)

ஒட்டு, விளம்பரப்படுத்து 

(பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் விழிப்பூட்டல்)