Select Page

“சொல் வெல்” சொல்லாளராக மாற வழி

பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்

  1. “சொல் வெல்” சொல்லுங்கள் வெல்லுங்கள் சொல்லாளராக மாற வழி

காண்க இணையத்தளம்  மின்னணு நூல்

www.agnistree.org /சொல்லுங்கள் வெல்லுங்கள்

  • இந்தத் திறமை உங்களுக்குள் இருக்கிறது .
  • பயன்படுத்தி கொள்ளுங்கள் .
  • வளர்த்து கொள்ளுங்கள்.
  • இத்திறமை அனைவருக்கும் அடிப்படையான ஒரு தேவை
  • இந்தத் திறமை உங்களை வளர்க்கும் .
  • உயர கொண்டு செல்லும்

“சொல்லுங்கள் வெல்லுங்கள்”

நீங்கள் உதிர்க்கும் சொல் உங்களை வானளவு உயர்த்தலாம். நீங்கள் உதிர்க்கும் ஒரு தவறான சொல் உங்களைப் படுகுழியில் தள்ளலாம். வேண்டும் “சொல்லுங்கள் வெல்லுங்கள்”

வேண்டாம் “சொல்லுங்கள் கொல்லுங்கள்”

வேண்டும் “சொல்லுங்கள் வெல்லுங்கள்”

  • கேட்பவரிடம் மற்றவர்கள் பற்றிச் சொல்வது “வம்பளப்பு”. உங்களைப் பற்றியே சொல்வது “நாராசம்”. கேட்பவரைப் பற்றியே பாராட்டி மகிழ்ந்து சொல்வது என்பது “திறமை”. “வம்பளப்பு” மற்றும் “நாராசம்” வேண்டாம். தேவை “திறமை”யே. திறமையைப் பயன்படுத்திக் கேட்பவரை அளவோடு, மகிழ்வோடு பாராட்டிச் சொல்லுங்கள்.
  • “சிறப்பாகச் சொல்கிறார்” என்று பெயர் வாங்குவதைவிட இவர் சொல்வதைக் கேட்டால் “சிறப்பாகச் செயல்பட முடியும்” என்று, கேட்பவர் நினைக்கும் வகையில் சொல்லுங்கள்.
  • கம்ப்யூட்டருக்குப் “பாஸ்வேர்டு” உண்டு. அதை உபயோகித்தால்தான் கணினி யை பயன்படுத்த முடியும். அதே போன்று ஒவ்வொரு மனிதரின் மனதைத் திறக்கவும் ஒரு “பாஸ்வேர்டு” உண்டு. அது என்னவென்று கண்டுபிடித்து, அந்த வார்த்தைகளை முதலில் பயன்படுத்தினால் அவருடைய மனக் கணினி உடனே திறக்கும். இதைப் புரிந்து சொல்லுங்கள்.
  • உங்களிடம் உள்ள குறையைச் சொல்லி, பிறகு கேட்பவரிடம் உள்ள குறையைச் சொல்லுங்கள். பிறகு நீங்கள் அவரைப் பற்றி சொல்வது அவருக்கு வலியை உண்டாக்காது.

இவை போன்று நானூறு “சொல்லுங்கள்”, “சொல்லுங்கள் வெல்லுங்கள்” மின்னணு நூலில் காண்க மின்னணு புத்தகம் “சொல்லுங்கள்-வெல்லுங்கள்”.