Select Page

சொல்லு கதை சொல்லு

பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்

6 கதை சொல்லு

  1. கதை சொல்லும் திறமை மற்றும் ஆற்றல் உடைய பெண்கள், ஆண்கள்  மற்றும் இளைஞர்கள் உங்களிடையே பலர் இருக்கிறார்கள். இத்திறமையைப்   “பெண்கள் . மற்றும் குழந்தைகள்     பாதுகாப்பு , முன்னேற்றம் , விழிப்புணர்வு” ஆகியவற்றிர்காக , முதலில் பயன் படுத்துங்கள் . இது அவசியம் , அவசரமும் கூட  .
  2. அடுத்ததாக இத்திறமை உடைய பெண்கள் தங்களின் இத்திறமையை இது போன்ற மிக உயரிய இலட்ச்சியங்களுக்காக   வளர்த்துக் கொள்வது நல்லது .அது அவர்களுக்கு நன்மை பயக்கும் , சமுதாயத்திற்குப் பெரும் நன்மை பயக்கும் 
  3. மூன்றாவதாக இத்திறமை அறவே இல்லாத பெண்கள்,  இந்த புனித வேள்விக்காக அவசியம் இத்திறமையை எளிதாக பெறலாம் . பெறுவதற்கு வழி காட்டப்படுவார்கள் .
  4. அவர்கள் இந்த திறமையை பெறும்போது நிஜ வாழ்க்கை கதாநாயகிகளாக ஜொலிப்பார்கள் 
  5. அக்னி ஸ்திரீ பெண்கள்  ஒவ்வொருவரும் ஒரு திறமை வங்கியாக (Talent Bank) திகழ்வார்கள்

கதை சொல்லு (Tell story i. e . story telling): இப்போது வெகு வேகமாக வளர்ந்து வரும் ஒரு கலை / திறமை. சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி கதையாக கூறுவது. அதாவது சொல்லுதல் (Story Telling). ஒருவரே ஒரு கதையை முழுமையாக கூறுவார். அதில் வரும் கதாபாத்திரங்களாக மாறி கதை சொல்பவரே சொல்வார். அதற்குரிய வசனங்கள் வெவ்வேறு முகபாவங்கள் ஆகியவற்றை ஒருவரே அற்புதமாக செய்வார். இதோ உதாரணங்கள்.

  • இரண்டு ஆடு கதை
  • பார்வையற்றவரின் விளக்கு
  • குரங்கு கொடுத்த தண்டனை
  • ஐந்தில் வளையாதது……

இதோ அற்புத கதை சொல்லும் சிறுமி

இதோ கதை சொல்வதைப் பற்றியே ஒரு உண்மைக் கதை

https://www.ted.com/talks/joe_sabia_the_technology_of_storytelling?language=en

https://www.ted.com/talks/andrew_stanton_the_clues_to_a_great_story?language=en

கதை சொல்வது 6000 ஆண்களாக நடைபெற்று வரும் ஒன்று.

அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே கதை சொல்லும் திறமை உள்ளவர்கள் நிச்சயம் இருப்பார்கள். முதலில் அவர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. இந்த திறமை உள்ளவர்கள் இல்லையென்றால் மிக மிக நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு இத்திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ பெண்களின் திறமை வங்கியாக (Talent Bank) திகழும்.

அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக கதை சொல்லலாம்.

  • பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்.
  • முக்கியமாக இங்கு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், பெண்களே இழைத்த அநீதிகள், பத்திரிக்கைகளில் வெளியான உண்மை சம்பவங்கள், கதைகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. (நிஜபாத்திரங்களின் பெயர்களை இங்கு பயன்படுத்துவது அறவே கூடாது).
  • இந்த சம்பவங்களை உணர்வுடன் கதையாக சொல்ல வேண்டும். எப்படி சொல்வது? நீங்களே சொல்ல சொல்ல அந்த திறன் உங்களுக்கு முழுமையாக வந்துவிடும்.
  • மறந்துவிடாதீர்கள், சம்பவத்தில் வரும் பாத்திரங்களாக நீங்கள் ஒருவரே மாறி உணர்ந்து நடித்து கதை சொல்ல வேண்டும். பாட்டி கதை ஞாபகம் வருகின்றதா? ஏன் நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது அவர்களைச் சாப்பிட வைக்க எத்தனை கதைகள் சொல்கிறீர்கள்.
  • தங்கள் கதை சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள எதைப்பற்றியும் கதைகள் சொல்லலாம். மேலும் அவர்கள் கதை சொல்பவர்களாக பிரகாசிக்கலாம்.