Select Page

சமூக வலைத்தள பத்திரிகையாளர்

சமூக வலைத்தள பத்திரிகையாளர்

எடு போட்டோ எடு (Mobile camera),

பிடி வீடியோ பிடி (Mobile camera).

வெளியிடு இணையத்தளத்தில் வெளியிடு (Publish in On-line Social Media & Mobile WhatsApp)

போட்டோகிராபர் வீடியோகிராப்பர்

அநீதிகளைப் மொபைல் கேமரா மூலம் படம் எடு, வீடியோ எடு.

பெண்கள் மொபைல் மட்டுமின்றி, ஒரு குட்டி டைரி பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றைத் தங்கள் தோள்பையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். தாங்கள் காண்பது மற்றும் தங்களுக்கு வரும் யோசனைகளை உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ளத்தான்.

அக்னி ஸ்திரீ தலைமை அமைப்பு பல முக்கிய 7-ஆம் அறிவு பயிற்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவைகளைப் பற்றிய தகவல்களை அனுப்பிய வண்ணம் இருக்கும்.

உதாரணமாக காணாமல் போன பெண் மற்றும் குழந்தை பற்றித் தகவல்கள் அனுப்பும். இவற்றை ஒவ்வொரு பெண்ணும் தங்கள் அக்னி ஸ்திரீ உறுப்பினர்கள் மற்றும் தங்கள் முகநூல் Face-book / மொபைல் வாட்ஸ்அப் (Mobile WhatsApp) தொடர்பில் காணாமல் போனவர்களை உடனடியாக கண்டுப்பிடித்து விட முடியும். இந்த மூன்றும் (மொபைல், குட்டி டைரி மற்றும் பால்பாயிண்ட் பேனா ஆகியவை) பெண்களின் சிறந்த பாதுகாப்பு கருவிகளாகும். இவற்றை வைத்திருக்கும் (அக்னி ஸ்திரீ பாட்ஜ் (Badge) அணிந்த) பெண்ணைப் பார்க்கும் போதே அயோக்கியர்கள் புரிந்துக் கொள்வார்கள், “இந்தப் பெண் விவரம் தெரிந்தவள். இவளிடம் எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று.

சுருக்கமாக சொல்வதென்றால் நீங்கள் ஒரு மக்கள் பத்திரிக்கையாளர். சமூக வலைத்தள பத்திரிகையாளர். அந்த படத்தை உங்கள் கருத்துக்களோடு, உங்கள் முக நூலிலும் வாட்ஸ்அப் மூலமாகவும், அனைவருக்கும் அனுப்பி விழிப்புணர்வு கொண்டு வாருங்கள்.

நீங்கள் ஒரு புகைப்பட நிபுணர், ஒரு வீடியோகிராப்பர்  ஒரு எழுத்தாளர், ஒரு ஆசிரியர், ஒரு வெளியீட்டாளர் ஒரு பத்திரிகையாளர். எப்படி?

அக்னி ஸ்திரீ முக நூல் பத்திரிகை

ஒரு பத்திரிகை நடத்துவது என்பது எளிதல்ல . நஷ்டமின்றி நடத்துவது கடினம் . அப்படியே தயாரித்து  வெளியிட்டாலும் 1000 அல்லது 5000 பிரதிகள் மட்டுமே அச்சிட முடியும் . 

ஆனால் சமூக வலை தளங்கள் மூலம் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கானோர்களுக்கு எளிதாக செய்திகளை அனுப்பலாம் . 

எப்படி சமூக வலை தளங்கள் மூலம் லட்ச கணக்கானோருக்கு உங்கள் செய்தியை உடனுக்குடன் அனுப்புவது என்பதை  ”வளையுங்கள் சமூக  வலை தளங்களை” என்ற அக்னி ஸ்திரீ வெளியீட்டில் காணலாம். அதைப் புரிந்து செயல் படலாம் .

பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டால் அதை உள்ளூரிலிருந்து உலகமே அறிய செய்யலாம் . 

அநீதி நடந்தால் அதை உங்கள் அக்னி ஸ்திரீ கிளை மூலம் சமூக வலை தளத்தில் சம்பவ செய்தி , படம் , வீடியோ படங்களை வெளியிடுவது சால பொருந்தும் உதாரணம் : அக்னி ஸ்திரீ  தாம்பரம் கிளை  முக நூல் குழு (Agni Stree Tambaram Facebook Group  & Agni Stree Tambaram Face Book Page Account ) கணக்கிலிருந்து வெளியிடலாம் 

உங்கள் முக நூல் குழு கணக்கில் உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை உறுப்பினர்களாக சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த முக நூல் குழுவில் அக்னி ஸ்திரீ , சான்றோர் சபை , வாலிபன் , கண் இமை , அக்னி ஸ்திரீ நண்பர்கள் ஆகியோரையும் உறுப்பினர்களாக சேர்த்துகொள்வது அவசியம் .

அப்போதுதான் நீங்கள் எடுத்து கொண்ட இலட்சியம் உள்ளூரில் வெற்றி  பெரும்

அவர்கள் ஆதரவும் கிடைக்கும் . அவர்கள் மூலம் அவர்கள் பிரபல ஊடகங்களில் உங்கள் செய்தி வெளியாகும் வாய்ப்பு உள்ளது .

ஒரு குக்கிராமத்தில் ஒரு அனாதைப் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை ஒரு பத்திரிகையில் வெளியானவுடன் அது அனைத்து தரப்பட்ட மக்களின் கவனத்தைக் கவர்ந்து , அதன் மூலம் அந்த அபலைக்கு ஆதரவு   பெருகுவதையும் நீதி கிடைப்பதையும்  நாள்தோறும் பார்த்து வருவீர்கள் .

இனி எந்த ஒரு பெண்ணும் அனாதை அல்ல அபலை பெண் அல்ல . அவள் ஒரு தனி மரம் அல்ல .

எச்சரிக்கை :

இந்த அற்புத வசதியைத் தவறாக பயன்படுத்தக்கூடாது .

அப்பாவிகள் மீது தவறாக குற்றம் சாட்ட கூடாது .

அதற்குப் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்களைப் பயன் படுத்தக்கூடாது .

சமூக வலைத்தளங்களையும் தவறாக பயன் படுத்தக்கூடாது

மேலும் தவறாக வெளிடுபவர்கள் மீது இந்திய கிரிமினல் மற்றும் சிவில் சட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது