5.குடும்பங்களின் குடும்பம் Family of Families
மது அரக்கனை விரட்ட காட்டாறு போன்ற சக்தி தேவை. அந்த சக்திதான் “குடும்பங்களின் குடும்பம்”. ஒரு கிராமத்தில் 300 குடும்பம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் 200 குடும்பங்களில் 200 மது அடிமைகள் இருந்தால், அந்த 200 குடும்பங்களும் ஒன்று சேர வேண்டும். ஒன்றாக அணி திரள வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வோர் மது அடிமையாக தேர்ந்தெடுத்து, அவரை சாத்வீக முறையில் மதுவைவிட வைக்க இந்த 200 குடும்பங்கள் முயற்சி செய்ய வேண்டும். 200 குடும்பங்கள் இருந்தால் குறைந்தது ஆயிரம் பேர் இருப்பார்கள். இவர்கள் கூறுவதை மது அடிமை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களை எதிர்க்கும் தைரியம் மது அடிமைக்கு இருக்காது. “குடும்பங்களின் குடும்பம்” அமைப்பில் ஆண்கள், பெண்கள் அனைவரும் இருப்பார்கள்.
இந்நூலில் கூறப்பட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி மது அடிமைகளை திருத்துவார்கள். இந்நூலில் பல நூற்றுக்கணக்கான யோசனைகளும், வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு யோசனையை கடைபிடித்தால் போதும் ஒரு மது அடிமையை சுலபமாக மாற்றிவிடலாம்.
Talent Bank Latent Patent
“குடும்பங்களின் குடும்பம்” அமைப்பு இன்றும் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் இவ்வமைப்பில் மது அடிமைகள் இல்லாத மற்ற குடும்பங்களும் சேர்ந்துக் கொள்ளலாம். அப்பொழுது, இக்குடும்பங்களின் குடும்பம் அமைப்பு மிகவும் வலிமையான ஒன்றாக இருக்கும். “குடும்பங்களின் குடும்பம்” அமைப்பு மது அடிமைகளை திருத்துவது மட்டுமின்றி, ஊர் மக்களின் ஒற்றுமைக்கும் (மா), பாதுகாப்பிற்கும் பணியாற்றும்.