Select Page

ஒற்றுமையின் அவசியம் மற்றும் நாங்கள் ஒன்று -Collectivism

ஒற்றுமையே உங்கள் பலம்.
பிளவே உங்கள் பலவீனம் 

  • ஒன்று சேர்ந்த  சிறுபான்மையினர் ஒன்று சேராத பெரும்பான்மையினரை விட சக்தி வாய்ந்தவர்கள்.
  • ஒன்று சேர்ந்த பெரும்பான்மையினர்     சிறந்த சக்தி வாய்ந்தவர்கள்.
  • நல்ல இலட்சியத்திற்காக   ஒன்று சேர்ந்த  பெரும்பான்மையினர் மிக அற்புத  சக்தி வாய்ந்தவர்கள். 
  • இவர்கள் அகராதியில்  “முடியாது” என்று ஒன்று கிடையாது. 

 

காந்தி சொல்லி கொடுத்த பாடம் 

வெள்ளைக்காரனிடம் பணம் இருந்தது, ராணுவம் இருந்தது.  அதனால் பலம் இருந்தது  ஆனால் காந்தியிடம் மக்கள் சக்தி இருந்தது. யார் வென்றார்கள் என்பது இப்போது சரித்திரம்.

ஒற்றுமையின் அவசியம் மற்றும் நாங்கள் ஒன்று - Collectivism

 

நம்ம ஊர் தேர் பிரமாண்டம் .

ஒரு அடுக்கு மாடி கட்டிடம் போல் உள்ளது ஆனால் ஊர் கூடி மக்கள் இழுக்கும் போது அந்த மரக் கட்டிடம் நகருகிறது, ஓடுகிறது

ஒற்றுமையின் அவசியம் மற்றும் நாங்கள் ஒன்று -Collectivism

 

சற்று மாற்றி யோசியுங்கள்.

ஊர் மக்கள் சரி பாதியாக பிரிந்து எதிர் எதிர் திசையில் தேரை  இழுத்தால் என்னவாகும் , தேர் நகராது.
இன்று ஏன் பிரச்சனைகள். மக்கள் ஜாதி , மத , மொழி மற்றும் அரசியல் கட்சி பேதங்களால் பிளவுப்பட்டு பிரிக்கப்பட்டு உள்ளார்கள். அதனால்தான் அவர்களை வெற்றி ஒதுக்கி வைத்துவிட்டது. தேரை ஒரே பக்கம் இழுப்பது போன்று அனைத்து பிரச்சனைகளையும் அனுகுங்கள்.

நாட்டு அளவில் மக்கள் ஒன்று சேர்த்ததால், இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. ஊர் மக்கள் ஒன்று சேர்ந்ததால் பிரமாண்டமான தேர், கார் போல் வேகமாக ஓடுகிறது. ஒரு தெரு வாழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும். அற்புதங்கள் நிகழும். நரகம் போய் சொர்கம் இங்கு வரும். நீங்களே பாருங்கள் அந்த அற்புதத்தை. கிளிக் லிங்க் …………………..

பெண்களே ஒன்று சேருங்கள் . நீங்களும் இத்தகையை அற்புதத்தை நிகழ்த்தலாம்.  சொல்லுங்கள் “நாங்கள் அனைவரும் ஒன்று” என்று (We are ONE).

உலகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் பெண்கள் ஒன்றாக சேர வேண்டும். பெண்களைச் சார்ந்தே இந்த உலகம் இருக்கிறது . பெண் குழந்தையைத் தன் வயிற்றில் சுமக்கிறாள் . அன்னை பூமி நம் அனைவரையும் சுமக்கிறாள் . பெண்கள் எதையும் இழக்கலாம், ஆனால் அன்பை இழக்க கூடாது .

அதைப் புரிந்து ExNoRa இயக்கம் “மா” என்ற ஒரு எழுத்து ஆனால் மகத்தான இயக்கத்தை நடத்தி வருகிறது. தாயை உதாரணமாக கட்டி உலகத்தை ஒன்றுப்படுத்தும் இயக்கமே “மா”.  

காண்க www.maa4harmony.org

 

பெண்கள்

பெண்களுக்கான இயக்கமானதால் இந்தியாவில் அனைத்து மொழியிலும் பயன்படுத்தப்படும் அக்னி ஸ்திரீ என்ற பெயரே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயன்படுத்தப்படும். மொழிப் பெயர்ப்பாக அக்னி ஸ்திரீ என்பதன் பொருள் புரியாதவர்களுக்கு விளக்க “நெருப்புப் பெண்” என்று விளக்குவது அவசியம்.

  • ஜாதி, மத, மொழி, பொருளாதார பேதங்களைக் கடந்து பெண்கள் ஒன்று சேர வேண்டும்.
  • ஒரு ஜாதி பெண் இன்னொரு ஜாதி பெண்ணுக்கு விரோதியல்ல.
  • ஒரு மொழி பேசும் பெண் வேறொரு மொழி பேசும் பெண்ணுக்கு சத்ரு அல்ல.
  • ஒரு மதத்தைப் பின்பற்றும் பெண் மற்றொரு மதத்தைப் பின்பற்றும் பெண்ணுக்கு எதிரியல்ல.
  • ஒற்றுமையைவிட அவர்களுக்குச் சிறந்த பாதுகாப்போ அல்லது ஆயுதமோ கிடையாது.
  • ஒன்றுசேர்ந்த காட்டெருமைகள் தங்கள் கன்றைக் கொன்று தின்ன வரும் சிங்கத்தை விரட்டி அடிக்கின்றன. சிங்கத்தை தூக்கி போட்டு முடமாக்குகின்றன. காண்க வீடியோக்கள்.
  • காட்டில் இராப்பகலாக கண்விழித்து தங்கள் இனத்தைச் சிங்கத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும் எருமைகள். தோல்வி சிங்கத்திற்கே https://www.youtube.com/watch?v=jrsx-iysFkMNote: Video not available
  • எருமையை உண்ண சிங்கம் அதைக் கவ்விப் பிடித்துக் கொள்கிறது. நீண்ட போராட்டம். வெற்றி யாருக்கு?
    https://www.youtube.com/watch?v=o0xHeBI5MxwNote: Video not available
  • சிங்கம் காட்டுக்கு ராஜாதான். ஆனால் எருமைகள் ஒன்று சேர்ந்தால்? சிங்கங்கள் கூட்டம் – எருமைக் கூட்டம். வெற்றி யாருக்கு https://www.youtube.com/watch?v=W9w0OadktGNote: Video not available

  • எருமைகள் சிங்கம் சண்டை. முடிவு என்ன?

பொழுது விடிந்து பொழுது போனால் நாம் ஜாதி மத மொழி என்று பிளவு பட்டு சண்டை போட்டு ஒருவர்  மண்டையை ஒருவர் உடைத்து கொள்கிறோம். ஒற்றுமையை மிருகங்களிடமிருந்து கற்றுக்  கொள்வோம்.

நீரில் மூழ்கி உயிருக்கப் போராடும் காக்கையைக் காப்பாற்றும் கரடி.
நீரில் மூழ்கும் ஆட்டைக் காப்பாற்றும்  பன்றி.
நீரில் மூழ்கும் கோழி குஞ்சைக் காப்பாற்றும்  ஓராங்குட்டான் குரங்கு .
காட்டில்  முதலையின் கோரப் பிடியில் மாட்டிக் கொள்ளும்  மானைக்   காப்பாற்றும்  அற்புத  நீர் யானைகள். 
காட்டில்   இம்ப்பாலா மானைச்    சிறுத்தையிடமிருந்து காப்பாற்றும் பபூன் குரங்குகள். 
காட்டில் முதலையின் கோரப் பிடியிலிருந்து வரி-குதிரையக்  காப்பாற்றும்  நீர் யானைகள்.  
தாய் தாய்தான். தன் சிங்க குட்டியை ஒரு ஆண் சிங்கத்திடமிருந்து காப்பாற்றும் தாய் சிங்கம்.

  • ஆறறிவு இல்லாத படிக்கத் தெரியாத எருமைகளுக்கு ஒற்றுமை தெரிந்துள்ளது.
  • பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எறும்புகள் தங்கள் கால்களைப் பின்னிக்கொண்டு காட்டாற்றைக் கடக்கின்றன. காண்க வீடியோ.
  • ஒரு மானுடைய தாய் உள்ளத்தைப் பாருங்கள். தன் குட்டியை எப்படி ஒரு நாயிடம் இருந்து காப்பாற்றுகிறது என்று.

இதோ ஒரு உத்வேக உரை. படிக்கவும். கூட்டங்களில் கோஷமாக முழங்குக.

ஓ பெண்ணே! ஓ பெண்களே !!
ஓ பெண்ணே!
ஒரு கல் தடுக்கி நீ விழுந்துவிடலாம்.
ஓ பெண்களே !!
உங்களால் ஒரு மலையையே தகர்க்க முடியும்.


ஓ பெண்ணே!
ஆற்று வெள்ளம் உன்னை அடித்துச் செல்லலாம்.
ஓ பெண்களே!!
உங்களால் ஒரு ஆற்றின் திசையையே திருப்ப முடியும்.


ஓ பெண்ணே!
ஒரு காமூகனால் உனக்கு இன்னல் வரலாம்.
ஓ பெண்களே!!
உங்களால் காமூகனக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தர முடியும்.


ஓ பெண்ணே!
ஒரு கொடியவனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
ஓ பெண்களே!!
உங்களால் அனைத்து கொடியவர்களிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.


ஓ பெண்ணே!
நீ தனியாக பாடினால் மற்றவர்கள் அதை ரசிக்காமல் போலாம்.
ஓ பெண்களே!!
நீங்கள் சேர்ந்து இசைத்தால் அனைவரும் கரவொலி எழுப்புவார்கள்.
உதாரணம் தேசிய கீதம்.

இவையே மனப்புரோகிராமிங்

பெண்கள் ஒற்றுமை அவசியம் என்பதற்கு ஒரு சின்ன பரிசோதனை.

ஒரு தர்பூசணி பழம் (water melon fruit) ஒரு மேஜையின் மேல் வையுங்கள். நாம் அன்றாடம் பயன் படுத்தும் ரப்பர் பேண்ட்  சற்று பெரிய அளவு  (little bigger Rubber Band) எண்ணிக்கை  300 தயாராக வைத்து கொள்ளுங்கள். ஒன்றன் பின் ஒன்றாக அதைத்    தர்பூசணி  மைய பகுதியில் மாட்டி கொண்டே வாருங்கள். 250லிருந்து 300-வது ரப்பர் பேண்ட் மாட்டுவதுற்குள் அந்த  தர்பூசணி வெடிக்கும். வெடிக்கும் போது சற்று தள்ளி நிற்க வேண்டும். 

நீங்களே இப்போது கீழ் கண்ட 4 விடீயோக்களில் பாருங்கள்.



பார்த்து விட்டீர்களா ?

 

நீதி என்ன ? இதன் நீதி

  1. அனைவரும் ஒன்று சேர்ந்தால்   முடியாது என்று ஒன்று கிடையாது. ஒரு கடினமான தர்பூசணியைக் கூட மெலிய ரப்பர் உடைத்து விடும்
  2. கடைசி ரப்பர் பேண்ட் மட்டும் போதுதான் தர்பூசணி வெடிக்கிறது. நூறு பேர் இருந்து ஒரு பெண் சேரவில்லை என்றால் என்ன என்று விட்டு விடாதீர்கள் .     

அதே போன்று ஒரு பெண் கேலி (Eve teasing) செய்யப்படும் போது மற்ற பெண்கள் உடன் சென்று நிற்க வேண்டும் . பாருங்கள் இந்த வீடீயோவை 

 

Eve teasing

http://tamil-seenr.blogspot.com/2016/08/blog-post_40.html

ஒற்றுமையின் அவசியம் மற்றும் நாங்கள் ஒன்று –
THE GREAT COLLECTIVISM