பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்
9. எழுது, “எழுச்சி உண்டாக்கு”
(WRITE RIGHT)
- உரை
- வசனம்
- கதை
- நாடகம்
- பாடல்
- முழக்கம்
- கவிதை
- ஹைக்கூ
- கட்டுரை
எழுது, “எழுச்சி உண்டாக்கு” (WRITE RIGHT)
கத்தி முனையைவிட பேனா முனை சக்தி வாய்ந்தது.
- “எழுதுதல் என்பது நம் குரலின் ஓவியம்”
- “நீங்கள் எழுத்தாளர் ஆக வேண்டுமா? எழுங்கள்”
- “நூலகம் மனதுடைய மருத்துவமனை”
- “எழுதுவதற்கான விதிமுறைகளை மறந்துவிடுங்கள். நான் எழுதினால் யார் வெளியிடுவார்கள் என்ற கவலையைத் தூக்கி எறியுங்கள். நான் எழுதியதைப் படித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சந்தேகத்தை விட்டொழியுங்கள். உங்களுக்காகவே நீங்கள் எழுதுங்கள். அதைப் படித்து மகிழுங்கள்.
- “உங்கள் இதயத்தின் சுவாங்களை ஒரு வெள்ளை காகிதத்தில் நிரப்புங்கள்”
- “உங்கள் கற்பனைகளை முதலில் உங்கள் மனதில் எழுதுங்கள்”
அக்னி ஸ்திரீ பெண் ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளராக வேண்டும். “மனிதர்கள் வரலாம், போகலாம். அவர்கள் எழுத்துக்கள் மறைவதில்லை”.
“எழுதுங்கள்”
ஒரு ஊருக்குச் சிறந்த எழுத்தாளர் ஒருவர் வருகிறார். அவர் வருகையைப் பயன்படுத்திக் கொள்ள அவ்வூர் மக்கள் விரும்புகின்றார்கள். கூட்டம் கூட்டப்படுகிறது. எழுத்தாளர் பேச அழைக்கப்படுகிறார். தலைப்பு “எழுத்தாளராவது எப்படி?” என்று பேச வருகிறார். அவர் ஐந்து நிமிடம் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். எல்லோரும் நோட்டுப் புத்தகத்தை விரித்துக் கொள்கிறார்கள். அவர் சொற்பொழிவை எழுதத் தயாராகப் பேனாவைத் திறந்து வைத்துக் கொள்கிறார்கள். அவர் பேசுகிறார்.
“சகோதர, சகோதரிகளே…! நீங்கள் எழுத்தாளர் ஆக வேண்டுமா?” என்று கேட்கிறார்.
அனைவரும் “ஆம்” என்று ஒன்றாகக் குரல் எழுப்புகிறார்கள். தலை அசைக்கிறார்கள். “எழுதுங்கள்” என்று கூறிவிட்டு அவர் மேடையை விட்டு இறங்கிச் சென்றுவிடுகிறார். ஆம், எழுத்தாளராக வேண்டுமென்றால் எழுத வேண்டும்.
மது அடிமைத் திருந்த வேண்டுமென்றால் திருத்த வேண்டும். அவர் தன்னைத்தானே திருத்திக் கொள்ள உதவ வேண்டும். இப்போது, இந்த நிமிடமே, இந்த வினாடியே, செயலைத் தொடங்குங்கள். எப்போதும் நினைவில் வையுங்கள். மூத்தோர் வாக்கு: “முயற்சியுடையோர், இகழ்ச்சியடையார்”.
என்னவெல்லாம் எழுதலாம்
- சிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிதை, பாடல்கள், நாடகங்கள், கட்டுரைகள். முக்கியமாக தான் சார்ந்துள்ள அக்னி ஸ்திரீ இயக்கத்திற்காக உணர்ச்சி உரை எழுதலாம்.
- பெண்கள் பாதிப்புக்கு உள்ளான உண்மை சம்பவங்களை நாடகமாக உருவாக்கலாம்.
- விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிக் கொண்டே இருக்கலாம்.
- பத்திரிக்கைகளுக்கு எழுதலாம். கணிணியில் blog மூலம் தன் கருத்துக்களை பரிமாறலாம்.
- எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் அக்னி ஸ்திரீ பிரிவுக்காக ஓர் சிறிய வார அல்லது மாத பிரசுரத்தை வெளியிடலாம்.
மறந்துவிடாதீர்கள். “ஒரு பேனா முனை கத்தி முனையைவிட வலிமையானது”. எழுதுங்கள்…… எழுதுங்கள்…….. எழுதிக்கொண்டே இருங்கள்.
அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள். முதலில் அவர்களின் இந்த திறமையை பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. இந்த திறமை உள்ளவர்கள் இல்லையென்றால் மிக மிக நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு இத்திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ பெண்களின் திறமை வங்கியாக (Talent Bank) திகழும்.
அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக எழுத வேண்டியது அவசியம்.
- பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்.
- மதுப்பழக்கத்தைத் மது அடிமைகள் விட்டுவிட கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் மனோதத்துவங்கள் பற்றி எழுத வேண்டும்.
- தங்கள் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள எழுதலாம். மேலும் அவர்கள் எழுத்தாளர்களாக பிரகாசிக்கலாம்.