Select Page

எடு படம் எடு

எடு போட்டோ எடு (Mobile camera)

பிடி வீடியோ பிடி (Mobile camera)

வெளியிடு இணையத்தளத்தில் வெளியிடு

(On-line Social Media & Mobile WhatsApp)

போட்டோகிராபர் வீடியோகிராப்பர் 

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கேமரா தேவை. பிலிம் தேவை. போட்டோ எடுத்து, அதைப் போட்டோ ஸ்டுடியோவில் கொடுத்து அவர்கள் அதைக் கழுவி பிரிண்ட் போட்டு, அது நம் கையில் கவந்து சேர ஒருவாரமாவது பிடிக்கும். அது கையில் கிடைத்தப் பிறகுதான் போட்டோ நல்ல வந்திருக்கிறதா  என்பது தெரியும். ஆனால் இன்று நிலைமை தலைக்கீழாக மாறிவிட்டது. படம் எடுக்கலாம் – உடனே பார்க்கலாம் – அடுக்க கனமே படங்களை நூறு பேருக்கு அனுப்பலாம். இது மொபைல் யுகம். அக்னி ஸ்திரீ பெண்கள் கையில் ஒரு போட்டோ எடுக்கும் மொபைல் போனை வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பல பயன்கள் உள்ளன.

  • உள்ளத்தைத் தொடும் காட்சிகள் தென்பட்டால் உடனே படம் எடுக்கலாம் வீடியோ  எடுக்கலாம் (படமே பேசும்).
  • எவரது நடவடிக்கை சந்தேகம்படும்படி இருந்தால், சாமார்த்தியமாக படம் எடுங்கள் வீடியோ எடுங்கள்
  • மக்கள் பிரச்சனைகள் எது தென்பட்டாலும் உடனே படம் எடுங்கள் வீடியோ எடுங்கள்.
  • சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் படம் எடுங்கள் வீடியோ எடுங்கள்.

சுருக்கமாக சொல்வதென்றால் நீங்கள் ஒரு மக்கள் பத்திரிக்கையாளர். அந்த படத்தை உங்கள் கருத்துக்களோடு, உங்கள் முக நூலிலும் வாட்ஸ்அப் மூலமாகவும், அனைவருக்கும் அனுப்பி விழிப்புணர்வு கொண்டு வாருங்கள். எடு போட்டோ எடு (Mobile camera), பிடி வீடியோ பிடி (Mobile camera).வெளியிடு இணையத்தளத்தில் வெளியிடு (On-line Social Media & Mobile WhatsApp)

காண்க சமூக வலைத்தள பத்திரிகையாளர்