3. எங்களுக்கு நாங்களே We Ourselves
எங்களுக்கு நாங்களே “ – மது அடிமைகள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள உதவுதல் (Help them to help themselves):
எங்களுக்கு நாங்களே “(We ourselves) என்ற சுய உதவி அமைப்பை மது அடிமைகள் உருவாக்க “தீ” அமைப்பு அனைத்து உதவிகளையும் செய்யும். உறுப்பினர்கள் சேர்த்தல், கூட்டத்திற்கு இடம் பெறுதல் போன்ற உதவிகளைப் பின்னாலிருந்து “தீ” அமைப்பு செய்யலாம். “ எங்களுக்கு நாங்களே “ அமைப்பு மது அடிமைகள் ஒன்றாக, குழுவாக இயங்கித் தங்களுக்குத் தாங்களே திருத்திக் கொள்ள, உறுதியுடன் மதுவை ஒதுக்க உதவி புரியும். அதேபோன்று மற்ற பிரச்சனைகளால் (சூதாட்டம், போதை மருந்து) பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனித்தனியே பிரச்சினைக்கு ஒன்று என்று “நமக்கு நாமே” அமைப்பை உருவாக்கலாம். உதவி செய்வதைவிட உதவிக்குதவி செய்யலாம் (Help them to help themselves). அதாவது அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள “தீ” அமைப்பு உதவி செய்திடலாம்.
மதுவைவிட ஆசை இருக்கும். ஆனால் விட முடியாது. விட முடியாததற்குக் ஒரு காரணம் நண்பர்கள். விட முடிவு செய்தவரையும் அதை விட அனுமதிக்கமாட்டார்கள். சகவாச தோஷமே காரணம். அதே நேரத்தில் விட வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் நண்பர்கள் அவர்களைவிட அனுமதிக்கமாட்டார்கள்.
இப்படி சிதறி கிடக்கும் ஒருமித்த ஆர்வம் உடையவர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்காக எங்களுக்கு நாங்களே என்ற ஒரு குழுவினை உருவாக்கி அவர்கள் மதுவைவிட அக்னி ஸ்திரீ அமைப்பும் மற்ற ஒன்பது சகோதர அமைப்புகளும் வழிகாட்டும். இங்கு பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ள ஏழாம் அறிவு டெக்னிக்குகளை குழுவாக பயன்படுத்தினால் மதுவிலிருந்து உறுதியாக வெளியே வருவார்கள்.
இன்று ஆண்களை மது மட்டும் பிடித்துக்கொண்டு அவர்களைச் சீரழிக்கவில்லை
மேலும் நான்கு கெட்டப் பழக்கங்கள் அவர்களைப் பிடித்த பேய்களாக திகழ்கின்றன. அவை முறையே
புகை பழக்கம்
புகையிலை மெல்லும் புழக்கம்
போதை மருந்து பழக்கம்
சூதாட்ட பழக்கம்
இவை நான்கிலிருந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்
“எங்களுக்கு நாங்களே” (போதை மருந்திலிருந்து மீள)
“எங்களுக்கு நாங்களே” (சூதாட்டத்திலிருந்து மீள)
“எங்களுக்கு நாங்களே” (புகைப்பிடிப்பதிலிருந்து மீள)
“எங்களுக்கு நாங்களே” (புகையிலை, பான்மசாலாவிலிருந்து மீள)