பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்
3. உரை “உணர்ச்சியோடு உரை”
விழிப்பூட்டல் விழிப்புணர்வு
பெண்கள் பாதுகாப்பு முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை
உரை “உணர்ச்சியோடு உரை”
உரைநிகழ்த்துங்கள்
- கூட்டாக உணர்ச்சி உரைநிகழ்த்துங்கள் (சேர்ந்து பாடுவது போல்)
- கூட்டமாக உணர்ச்சி உரை உரைநிகழ்த்துங்கள்
- ஒவ்வொரு வரியாக முன்னணி வகிக்கும் பெண் உரைப்பார் . மற்ற பெண்கள் எதிரொலியாக உரைக்க வேண்டும் .
- இந்தத் திறமை உங்களுக்குள் இருக்கிறது .
- பயன் படுத்தி கொள்ளுங்கள் .
- வளர்த்து கொள்ளுங்கள்.
- அக்னி ஸ்திரீ பெண்கள் நன்கு உணர்ச்சி உரைகளை உரைக்கும் போது, அது சமுதாய நன்மைகளைப் பயக்கும்
- தமிழை நன்கு உச்சரிப்பவர்களுக்கு அதற்காகவே வேலைகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. வானொலி , தொலைக்காட்சி , தொலைக்காட்சி வானொலி விளம்பரங்கள் என்று பல,
உரை (Prose)என்பது சிறந்த சிந்தனையாளர்களால், அற்புத எழுத்தாளர்களால் எழுதப்பட்ட காவியங்களாகும். இதை மனப்பாடம் செய்துவிட்டு ஒப்பிக்கக் கூடாது. மனதில் ஏற்று உணர்வுப்பூர்வமாக உரைக்க வேண்டும். அக்னி ஸ்திரீ உணர்ச்சி உரைகள் எவரையும் மாற்ற வல்லது.
உரை….”உரை” (உணர்ச்சி உரை) உணர்வுகளைத் தட்டி எழுப்பும் உரை
கூட்டாக கோஷம் எழுப்புங்கள்
(Joint & collective uniform Sloganeering)
முதல் உரை இங்கே இணைப்பில் நீங்கள் காணும் உணர்ச்சி உரைகளை குறிப்பிடுகின்றது.
- இரண்டாவது உரை அதை உணர்வுப்பூர்வமாக தனியாகவோ அல்லது அனைவரும் சேர்ந்தோ உரைப்பதைக் குறிக்கின்றது. காண்க “உரை…..உரை”. இது ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உண்டாக்கும்.
மேலும் செயல் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றலாம்.
உணர்வுமிகு உரை வாசகங்களை பயன்படுத்தி
கூட்டாக கோஷம் எழுப்புங்கள் வானளவு முழங்குங்கள் (Cell Rejuvenation)
உணர்ச்சி உரை எழுப்புவதால் பல பயன்கள்.
- உங்கள் மனதில் அது விதை போன்று விழுந்து எண்ணங்களாக மாறி பசுமரத்தில் அடித்த ஆணி போன்று பதிவாகிறது.
- உங்கள் ஆழ்மனதில் அடித்தளத்தில் சென்று அமர்ந்து அதிசயங்களை உருவாக்குகிறது.
- உங்கள் உடலிலுள்ள பல்லாயிரக்கோடி உயிரணுக்களிலும் உட்கார்ந்து எண்ணற்ற அற்புதங்களை நிகழ்விக்கின்றது.
- உங்கள் நடை, உடை, பாவனையில் நம்ப முடியாத மாற்றங்களை உணர்ச்சி உரை உறுதியாக உருவாக்கும்.
- இது ஏதோ பள்ளி பாடம் படித்து ஒப்பிப்பது போல் அல்ல. மனதில் உள்வாங்கி அனுபவித்து முழங்க வேண்டிய ஒன்று.
- இதை வாரம் ஒருமுறை அல்லது கூட்டம் தொடங்கியவுடன் ஒரு பயிற்சிக்காக செய்ய வேண்டும்.
- இதைப் பார்த்தும் படிக்கலாம். ஆனால் மனதில் நிறுத்தி பார்க்காமலேயே அடைமழை போன்ற பொழி வேண்டும். அப்போதுதான் அதிக பயன்கிட்டும்.
இந்த பயிற்சியை அக்னி ஸ்திரீ பெண்கள் செய்யும் பொழுது இதைத் தங்கள் கண்ணால் காணும் கொடியவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் திகழும்.
உணர்ச்சி உரைக்கு நல்ல முன் மாதிரிகள் இருக்கிறார்களா?
நடிகர் திலகம் சிவாஜி பேசி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள பராசக்தி, கட்டபொம்மன், மனோகரா பட வசனங்களைப் பாருங்கள், கேளுங்கள். மனோகரா படத்தில் சிவாஜி அவர்களின் அன்னையாக வரும் கண்ணம்பா வசனங்களை உணர்வுப்பூர்வமாக கேளுங்கள்.
உணர்ச்சி வசனங்கள். களிமண்ணும் உயிர் பெறும் வசனங்கள்.
=================================================
நடிகர் திலகம் சிவாஜி பேசி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள கட்டபொம்மன், பட வசனம்
நடிகர் திலகம் சிவாஜி பேசி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள மனோகரா வசனம்
சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள பூம்புகார் விஜயகுமாரி வசனம்
நடிகர் திலகம் சிவாஜி பேசி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள பராசக்தி பட வசனம்
வசனங்கள்
களிமண்ணும் உயிர் பெறும் மனோகரா படத்தில் ராஜதர்பாரில் நடிகை கண்ணாம்பா வசனம். ஆந்திர மாநிலம் தமிழ் நாட்டுக்கு கொடுத்த பரிசு நடிகை கண்ணாம்பா. தமிழ் அன்னையின் மறு அவதாரமே நடிகை கண்ணாம்பா.
- அக்னி ஸ்திரீ இணையத்தளத்தில் இப்பட வசனங்களின் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. பார்க்கவும். இந்த வசனங்களை பேசி பழகிக் கொள்ளுங்கள். அது போன்று உங்கள் உணர்ச்சி உரை அமைய வேண்டும்.
- நீங்களே இணையதளம், YouTube சென்று மூலமாக இப்பட வசனங்களைப் பார்க்கலாம்.
- தொழிற் சங்கங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வங்கித் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தின் பொழுது ஸ்லோகன் எழுப்புகிறார்கள். அவர்கள் வெற்றிக்கு இது ஒரு முக்கியக் காரணம். கோஷம் எழுப்பி உத்வேகம் பெறுகிறார்கள். அவர்கள் என்றுமே ஜாதி, மதம், மொழி, இன-பேதக்ளைப் பாராட்டுவதில்லை. பெண்களும் பேதங்கள் அறவே பார்க்கக் கூடாது. அக்னீ ஸ்தீரீ பெண்கள் கோஷம் எழுப்புவதில் போட்டி நடத்தலாம். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கலாம்.
அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே உரைநடை எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள். முதலில் அவர்களின் இந்த திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. இந்த திறமை உள்ளவர்கள் இல்லையென்றால் மிக மிக நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு இத்திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ ஒரு பெண்களின் திறமைகளின் வங்கியாக (Talent Bank) திகழும். மேலும் அவர்கள் உரைநடை எழுத்தாளர்களாக மற்றும் வசனகர்த்தகளாக பிரகாசிக்கலாம்.
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த நட்சத்திரங்கள் தமிழ்மொழியில் எப்படி வசனத்தைப் பேசுகிறார்கள் என்று கேளுங்கள். அவை உணர்வுமிக்க உரை மட்டும் அல்ல. உணர்ச்சிமிகு கர்ஜனைக்கூட. உங்களுக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள். அவர்களை வசன மழையில் நனையுங்கள்.
அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக உணர்ச்சி உரை நிகழ்த்த வேண்டும்.
- பெண் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் பற்றி உணர்ச்சி உரை நிகழ்த்த வேண்டும்.
- மது அடிமைகளை மாற்ற அக்னி ஸ்திரீ நூலில் வெளியிடப்பட்டுள்ள உணர்ச்சி உரைகளை உணர்வுப்பூர்வமாக உரைக்க வேண்டும். இவை நற்பயன்களைக் கொண்டு வந்து சேர்க்கும் மதுப்பழக்கத்தைத் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் விட்டு விடவும் உரைத்தல் அவசியம்.
- கள்ளுண்ணாமைத் தலைப்பில் வான்புகழ் வள்ளுவன் கூறிய 93 அதிகாரத்தில் உள்ள 10 குறள்களையும் உரைக்க வேண்டும்.
கள்ளுண்ணாமை
ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு கள்ளுண்ணாமை அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் படித்து விளக்க வேண்டும்.
நடித்து காட்டலாம். ஒரு சிறு நாடகமாக நடித்துக் காட்டலாம். நாட்டிய நாடகமாக நடத்து மெருகேற்றலாம். படித்து விளக்குவது, நாடகமாக நடிப்பது, நாட்டிய நாடகமாக நிகழ்த்துவது. இந்த மூன்றையும் வீடியோ படமாக எடுத்து அக்னி ஸ்திரீ என்ற தலைப்பில் YOUTUBE -ல் வெளியிடலாம்.
இதோ சிறந்த உதாரண உரை……..உரை
YOUTUBE படங்கள்
https://www.youtube.com/watch?v=RJ9XNqeYm_QNote: Video not available
திருக்குறள் நாடகம்
அமெரிக்கா, நியூஜெர்ஸி தமிழ் சிறுமிகள் நடத்திக் காட்டுகின்றனர். காண்க லிங்க்
தங்கள் வார்த்தைகள் உச்சரிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள உணர்ச்சி உரை நிகழ்த்தலாம். அதனால் அவர்களிடையே தன்னம்பிக்கை தலைத்தூக்கும். தலைமை குணாதிசயங்கள் வளரும். மேலும் அவர்கள் உரைநடை எழுத்தாளர்கள் மற்றும் வசனகர்த்தாக்களாக பிரகாசிக்கலாம்.
இதோ உணர்வில் நனைத்து எழுதப்பட்ட உத்வேக ஊக்க உற்சாக உரைகள் :
கூட்டங்களில் உரையுங்கள் . எதிரொலியாக மற்ற பெண்கள் மீண்டும் ஒலிப்பது அவசியம் .
ஒவ்வொரு வரியாக முன்னணி வகிக்கும் பெண் உரைப்பார் . மற்ற பெண்கள் எதிரொலியாக உரைக்க வேண்டும் . . குறைந்தது 10 நிமிடமாவது உரை நிகழ்ச்சியை நடத்த வேண்டும்
இதோ நீங்கள் உரைக்க வேண்டிய உணர்ச்சி உரை வரிகள் . உணர்வோடு உரையுங்கள். ஊரை மாற்றுங்கள் , உலகத்தை மாற்றுங்கள்