பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்
11. உயிருள்ள நூலகம்
உயிருள்ள புத்தகம்
உயிருள்ள நூலகம், உயிருள்ள புத்தகம்
உயிருள்ள நூலகம் மற்றும் உயிருள்ள புத்தகம் (பெண்களே தங்களைப் புத்தகங்களாக கருதி தங்களுக்குள்ள அறிவை மற்றவர்களுக்கு வழங்குவது )
- உனக்குத் தெரிந்தது எனக்குத் தெரியாது
- எனக்குத் தெரிந்தது, உனக்குத் தெரியாமல் இருக்கலாம்
- இருவரும் ஒன்று சேர்ந்தால் நமக்கு எல்லாம் தெரியும்
=======
- உன்னால் செய்ய முடியக் கூடியவைகள், என்னால் செய்ய முடியாது
- என்னால் செய்ய முடிந்தது , உன்னால் செய்ய முடியாமல் போகலாம்
- இருவரும் ஒன்று சேர்ந்தால் நம்மால் எல்லாம் முடியும்
- நம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் ஊருக்கே வழிகாட்டலாம்
=======
“ உயிருள்ள நூலகம் “
என்பது பல
“ உயிருள்ள புத்தகம் “ என்ற ஒரு குறிப்பிட்ட அல்லது பல்வேறு அறிவுகளைக் பெற்றுள்ள
பெண்ணின –உயிருள்ள புத்தகங்களைக் கொண்டது
இன்று சமுதாயத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று எவரும் இல்லை .
ஒவ்வை பிராட்டி சொன்னார்
“கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு” என்று .
எல்லாம் தெரிந்த ஒவ்வை பிராட்டியே கற்றது அனைத்தும் கையுக்குள் அடங்கி விடும் என்று கூறிவிட்ட பிறகு, ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்ள வேண்டியது, தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளம் , அது அளவிட முடியாதது என்று .
ஆனால் கற்று கொள்வது என்பது தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று
ஒவ்வொரு நிமிடமும் சென்ற நிமிடத்தை விட அறிவு பெறலாம் . கூடுதல் ஞானம் பெறலாம் .
கல்லுங்கள் , கல்லுங்கள் கற்று கொண்டே இருங்கள்
கல்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்,
கல்லுங்கள் கனவு காணுங்கள்.
கடைசி மூச்சு விடும் வரை கற்பதை நிறுத்தாதீர்கள்
இதற்குச் சிறந்த வழி ஒருவருடன் ஒருவர் அறிவைப் பகிர்ந்துக்கொள்வதே .(Knowledge Sharing)
எல்லோருக்கும் அறிவு உள்ளது என்று கூறி விட முடியாது .
கீழ் கண்டவர்களைப் பற்றி சற்றே சிந்தியுங்கள்
- எழுத்தறிவே இல்லாதவர்கள்
- பள்ளி படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள்
- பார்வை இல்லாதவர்கள்
- காது கேளாதோர்
- மனநிலை குன்றியவர்கள்
- கற்றல் குறைபாடு உள்ளவர்கள்
- எளிதில் ஏமாற கூடியவர்கள்
- தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்
- படித்தவர்கள் ஆனால் பொது அறிவே இல்லாதவர்கள்
இது போன்ற
“அறிவு இடைவெளி” ,கடைசியில்
“சமூக இடைவெளி”யாக மாறிவிட்டது
இந்த குறையைப் உயிருள்ள புத்தகம் பல அடங்கிய உயிருள்ள நூலகம் நிச்சயம் தீர்க்கும்
பெண்கள் தங்கள் உள்ள கல்வி / அறிவு / ஞானம் இதை அக்னி ஸ்திரீ உயிருள்ள நூலகம் மூலம் அதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள படிவங்களில் தங்கள் பெற்ற அறிவை , கல்வியை, திறமையை ஒவ்வொருவரும் தெரியப்படுத்துவர்கள்.
தங்களை ஒரு உயிருள்ள புத்தகமாக பதிவு செய்து கொள்ளவர்கள் .
ஒரு உயிருள்ள புத்தகம் பல புத்தகங்களை உள்ளடிக்கியதாக இருக்கலாம். .அதாவது ஒவ்வொருவரு பெண்ணும் பல அறிவுகளைக் கொண்டவராக இருப்பார்.
உயிருள்ள நூலகம் தன்னுள் எண்ணற்ற உயிருள்ள புத்தகங்களை உள்ளடிக்கிய ஒன்றாக இருக்கும் . உயிருள்ள புத்தங்கங்களே பல விதமான புத்தகங்களை உள்ளடக்கியதாக இருக்கும் , முறையே
1, பெண்ணே புத்தகம்
2. ஆண்ணே புத்தகம்
3. பெரியவரே புத்தகம்
4. யுவனே புத்தகம்
5. யுவதியே புத்தகம்
6. குழந்தையே புத்தகம்
உயிருள்ள புத்தகம் தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் முன்னணி வகிக்கும்
ஆம் உயிருள்ள புத்தகம்
- பேசும், .
- கதை சொல்லும் ,
- உரை நிகழ்த்தும் ,
- வசனம் பேசும் ,
- முழங்கும் ,
- குழையும்,
- கர்ஜிக்கும்.
- பாடும்,
- சிரிக்கும் ,
- அழும் ,
- நவரசங்களையும் வெளிப்படுத்தும்
எதையும் பதுக்குவது என்பது தவறு . பலர் உதவியால், ஆசிரியர்கள் உழைப்பால் பெற்ற அறிவைப் பதுக்குவது பெரிய தவறு
அதாவது ஒரு பெண் தன்னுள் பல அறிவாற்றலை, திறமைகளை, கல்வியை உள்ளடிக்கியவராக இருப்பார் .
பெண்களுக்குக் கீழ் கண்டவற்றில் பல விஷயங்களில் அறிவு , கல்வி மற்றும் ஆற்றல் இருக்கும்
- கல்வியறிவு
- சத்துணவு
- ஒழுக்கம்
- நேர்மை
- மனித நேயம்
- தொண்டு
- சமூக பொறுப்புகள்
- தீயபழக்கங்கள் இல்லாமல் வாழ்வது
- எளிமை
- தன்னடக்கம்
- தியாகம்
- சுயநலமின்மை
- சகிப்புத்தன்மை
- ஜாதி மத மொழி நல்லிணக்கம்
- கணினி அறிவு
- பாதுகாப்பு
- தற்காப்பு
- உணவு பாதுகாப்பு
- பொது அறிவு
- ஆரோக்கியம்
- சுத்தம்
- சுகாதாரம்
- மனித உரிமைகள் மற்றும் கடமைகள்
- சுய வளர்ச்சி
- குழந்தை வளர்ப்பு
- மனோதத்துவம்
- தொழில் அறிவு
- உடற்பயிற்சி
- விளையாட்டு
- தூங்கும் கலை
- ஓய்வு
- மன அழுத்தமின்மை
- தியானம்
- பிராணாயாமம்
- யோகா
- தமிழ் மொழி
- தாய் மொழி
- ஆங்கிலம்
- பிற மொழிகள்
- சுற்று சூழல்
- சுற்று சூழல் பாதுகாப்பு
- கலைகள்
- நுண்கலைகள்
- பொருளாதாரம்
- சமூகவியல்
- வணிகம்
- கணிதம்
- விஞ்ஞானம்
- சரித்திரம்
- பூகோளம்
- கணக்குப்பதிவியல்
- சமையற்கலை
- பொது உறவு
- உறவு பேணிக்காத்தல்
- அக்னீ ஸ்திரீ பற்றி முழுமையாக அறிந்து அமைப்பைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கலாம்
- கடைசியாக ஆனால் மிக முக்கியமாக
எவெரெஸ்ட்-உயரம் ஏற்றம் தரும் ஏழாம் அறிவு
பாடத்தை முழுமையாக கற்று மற்றவர்களுக்குச் சொல்லி கொடுக்கலாம் .
அறிவு சமத்துவத்தைக் கற்று கொடுக்கலாம்
உயிருள்ள புத்தகங்கள் ( லைவ் புக்ஸ் – Live Books )
தாங்கள் பெற்ற அறிவைத் தங்களைத் தாங்களாகவே புத்தகங்களாக கருதி தாங்கள் பெற்ற அறிவை உயிருள்ள புத்தகங்கள் பகிர்ந்து கொள்ளும் . அதாவது
உயிருள்ள புத்தகங்கள் வெறும் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அல்ல. ரத்தமும் சதையும் சேர்ந்த உணர்வுடன் பேசும் உயிருள்ள புத்தகங்கள் இவர்கள். இந்த உயிருள்ள புத்தகங்களின் சிறப்புகள்
1. இந்த புத்தகம் பேசும், உணர்வுடன் பேசும்
2. கேட்பவர்கள் மன நிலை அறிந்து பேசும்
3. பாடம் கற்று கொள்பவர்கள் ஆர்வம் குறையாதவாறு சுவையுடன் உயிருள்ள புத்தகம் பேசும்
4. உயிருள்ள புத்தகம் தன் வாசகர்களுக்கு ஏற்பாடும் சந்தேகங்களை உடனடியாக அவ்வப்போது தீர்த்து வைக்கும்
5. உயிருள்ள புத்தகத்தை வாசகர்கள் புரிந்து கொள்கிறார்களா என்று கேட்டு தெரிந்து கொள்ளும்
6. அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கும்
7. தான் படித்தது மற்றும் அறிந்தது அனுபவத்தில் தெரிந்து கொண்டது ஆகியவற்றை உள்ளடக்கியதாக உயிருள்ள புத்தகம் இருக்கும்
8. புத்தகத்தில் உள்ள பாத்திரங்கங்களாக மாறி நடத்தி காட்டும்
புத்தக- பாடங்கள் சொல்லிக் கொடுப்பவர்கள் மட்டுமின்றி சமுதாயத்தில்
- சாதித்தவர்கள்
- பாதிக்கப்பட்டவர்கள்
- பாதிக்கப்பட்டு மீண்டவர்கள்
- திறமைகளுக்குச் சொந்தக்காரர்கள்
- அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவர்கள்
- ஊனத்தை வென்றவர்கள்
- குறைந்த வருமானத்தில் நிறைந்த வாழ்க்கை வாழ்பவர்கள்
- மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்பவர்கள்
ஆகியோரும் உயிருள்ள புத்தகங்களாகத் திகழலாம்
ஒரு மெழுகுவர்த்தியைக் கொண்டு நூறு . மெழுகுவர்த்திகளை ஏற்றலாம் . அதனால் ஒளி வழங்கிய மெழுகு வர்த்தியின் ஒளி குறையாது , கூடும்’.
வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் சொல்வார்கள் “நாங்கள் வகுப்பு எடுத்து மாணவர்கள் கற்றுக்கொள்ள உதவுவதற்கு முன் நாங்கள் கற்று கொள்ள எங்களுக்கு நாங்களே உதவி கொள்கிறோம். நாங்கள் ஒவ்வொரு முறையும் கற்றுக்கொண்டுதான், கற்றுக்கொண்டதை மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறோம்” என்று .
இது நூறுக்கு நூறு உண்மை . இறைக்கிற கிணறே சுரக்கும்
ஒருவர் நூறு மாந்தர்களுக்கு வாழ கற்று கொடுக்கலாம்.
மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கலாம்.
முக்கியமான கடமை ஒன்று : பெண் நூலகத்தில் பெண்ணே புத்தகங்கள் மூலம் அறிவு / கல்வி பெற்ற பெண்கள் , நன்றி கடன் செலுத்துவது அவசியம் . எப்படி என்றால் , அவர்கள் ஒவ்வொருவரும் பெண்ணே புத்தகமாக மாறி , தங்கள் ஊர் உயிருள்ள நூலகம் கிளையில் தங்கள் பெயரை உயிருள்ள புத்தகம் ( லைவ் புக்ஸ் – Live Books ) சேவைக்குப் பதிவு செய்து கொண்டு இந்த உன்னத சேவையை ஆற்றுவது அவசியம் . இதுதான் நன்றி கடன் செலுத்த சிறந்த வழியாகும் . நல்ல எண்ணற்ற சிற்றலைகளை உண்டாக்கும் (ரிப்பிள் Ripple effect ). இப்படி செய்தால் உயிருள்ள புத்தகம் ஒரு மாபெரும் இயக்கமாகி எழுத்தறிவற்ற பெண்களே இல்லாத நிலை உண்டாகும் . பெண்அறிஞர் சமுதாயம் உருவாகும்