Select Page

இதோ நடன கலை சிறப்புகள்

இதோ நடன கலை சிறப்புகள் (நடனம் மற்றும் நாட்டிய நாடகங்கள்)

நடனம் நல்ல செய்திகளை, எல்லோருடைய கவனத்தையும் கவரும் விதமாகவும், எளிதில் தெரிவிக்க ஒரு மார்க்கம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. இரண்டு பக்க ஒரு நல்ல செய்தியை படிக்க பலர் ஆர்வம் காட்டமாட்டார்கள். அதையே ஒரு நடனம் மூலம் வெளிப்படுத்தினால் அதைப் பார்க்க கேட்க புரிந்துக் கொள்ள ஒரு பெரிய கூட்டமே கூடிவிடும். நடனத்திற்கு அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்த சக்தி உள்ளது.

  • மது அடிமைகளை மாற்றும் நுணுக்கங்களை நடனங்கள் மூலம் வெளிப்படுத்துவது அவசியம்.
  • மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நாட்டியமாக நடத்தலாம்.
  • நாட்டிய நாடகமாகவும் நடத்தலாம். நாட்டியம் + நாடகம் = நாட்டிய நாடகம். உண்மை சம்பவங்களை தத்ரூபமாக நாட்டியம் மூலம் வெளிப்படுத்தும் போது அது நூற்றுக்கு நூறு மக்களைச் சென்று அடைந்துவிடும்.
  • நடிப்புத் திறமை வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி நடனம் ஆட கற்றுக் கொள்வதே. நடனதிற்கு முகபாவம் மற்றும் பாவனைகள் அவசியம். நடனம் ஆடும் பெண்கள் திரையுலகில் நுழைந்து சிறந்த நடிகைகளாக ஜொலித்ததை நாம் அறிவோம். (பத்மினி, வைஜெயந்தி காலத்தில் இருந்து இதை நாம் பார்த்து வருகின்றோம். நடன கலையில் தேர்ச்சி பெற்று பிறகு நடிப்பில் கலக்கியவர்கள் அவர்கள்.
  • நடனம் ஆடுபவர்களுக்கு மன இறுக்கம் (Stress) அறவே இருக்காது.
  • நடனம் ஒரு நல்ல மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி.
  • உடலில் எடைக்கூடாது.
  • நடனம் ஒரு நல்ல மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி. அதனால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • குழு நடனம் (Group Dance) குழு உணர்வை (Team Spirit) வளர்க்கும்.

இப்படி நடனம் கற்றுக் கொள்வதால் அற்புத அனுகூலங்கள் பல கிடைக்கின்றன.

நடனங்களில் பலவகைகள் உள்ளன.

  • பரதநாட்டியம்
  • குச்சிப்புடி
  • கதகளி
  • மோகினி ஆட்டம்
  • ஒடிசி
  • மணிபுரி

தென்னிந்திய கிராமிய நடனங்கள்

  • தேவராட்டம்
  • தொல்லு குனிதா
  • தண்டரியா
  • கரகம்
  • கும்மி
  • கூட்டியாட்டம்
  • படையணி
  • கோலம் (நடனம்)
  • லவா
  • நிக்கோபார

தமிழக கிராமிய நடனங்கள்

  • மானாட்டம்
  • மயிலாட்டம்
  • ஒயிலாட்டம்
  • கோலாட்டம்
  • கரகாட்டம்
  • கும்மியாட்டம்
  • தெருக்கூத்து
  • பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)
  • பொய்க்கால் குதிரை
  • உடுக்கடிப்பாட்டு
  • புலியாட்டம்

இன்னும் பல

அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே நடன கலைஞர்கள் நிச்சயம் இருப்பார்கள். முதலில் அவர்களின் இந்த திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ ஒரு பெண்ணின் திறமை (Talent Bank)  வங்கியாக திகழும்.