பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்
இசை…..”இசை”
அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே இசை ஞானம் உடையவர்கள் நிச்சயம் இருப்பார்கள். முதலில் அவர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. இந்த திறமை உள்ளவர்கள் இல்லையென்றால் மிக மிக நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு இத்திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ பெண்களின் திறமை வங்கியாக (Talent Bank) திகழும். (முக்கியம் தெரு நாடகம்) நாடகம் செய்திகளைச் சொல்ல ஒரு நல்ல ஊடகம்.
அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக இசை அமைக்கலாம்.
- இசை மனக்காயங்களைக் குணப்படுத்தும் அற்புத மருந்து.
- பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்.
- தங்கள் இசை திறமையை வளர்த்துக் கொள்ள இசை அமைக்கலாம். இசை இசைக்கலாம். மேலும் அவர்கள் இசை உலகில் பிரகாசிக்கலாம்.
இசை…..”இசை” “இதையத்தைத் தொடு” (+பாடல்கள்)
இசை இரும்பு கோட்டைகளையும் துளைத்து செல்லும். உலோகங்களையும் உருக்கும். இசைக்கு எல்லை இல்லை. ஜாதி, மத, மொழி, நிற, இன பேதங்கள் கிடையாது. உலகின் தலைச்சிறந்த பாடகர் என்று அனைவராலும் ரசிக்கப்பட்டவர் ஒரு கருப்பர். அவர் பெயர் மைக்கேல் ஜாக்சன்.
இசை என்றால் அதனுள் பல இடம் பெறும்.
- இசை கருவிகளை இசைப்பது (தமிழ் நாட்டு, இந்திய, மேற்கத்திய இசை கருவிகள்) குறிப்பாக தமிழ் நாட்டிற்கே உரிய பறை, நாதஸ்வரம், மேளம், தாரை தப்பட்டை ஆகிய கருவிகளைப் பயன்படுத்தலாம்.
- பாடுவது (தமிழ் நாட்டு, இந்திய, மேற்கத்திய பாடல்கள்)
- பாடல்கள் இயற்றி பாடுவது.
- திரைப்படப் பாடல்களைப் பாடுவது
- பாடல் இயற்றி மெட்டு போட்டு பாடுவது
- அக்னீ ஸ்தீரி அமைப்பு இசைக்குழு ஒன்றினை உருவாக்கி அக்னீ ஸ்தீரி பெயரிலேயே இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
- இசை நிகழ்ச்சிகளை மண்டபங்களில், திருமணங்களில், பொது நிகழ்ச்சிகளில், சாலை ஓரங்களில் நிகழ்த்தலாம்.
பெண்கள் பறை இசை
பெண்கள் நாதஸ்வரம்
வீணை இசை:
செல்விகள் பிருந்தா நடராசா, மானுஷா நடராசா
யாழ்ப்பாண தமிழ் பெண்ணின் புல்லாங்குழல் இசை:
வயலின் வாசிக்கும் பெண்கள்
கித்தார் வாசிக்கும் பெண்கள்
https://www.youtube.com/watch?v=I5F59PkcDWM Note: Video not available
தவில் வாசிக்கும் பெண்
தொடர்ந்து 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சாதனை
நம் இசை கருவியை வாசிக்கும் மேற்கத்தியர்
இதனால் பயன்கள் பல
- பெண்கள் திறமைகள் கூடும்
- தன்னம்பிக்கை தலைத்தூக்கும்
- சபை அச்சம் நீங்கும்
- நல்ல பயனுள்ள பொழுது போக்காக அமையும்.
- வருமானமும் வரும்
- மக்களுக்கு மகிழ்ச்சி சேர்க்கும்
- நல்ல செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்க உதவும்.
- பாடல்களிலேயே செய்திகளைச் சொல்லலாம்.
- பாடல்களுக்கு இடையே பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் கருத்துக்களை செய்முறைகளை சுருக்கமாக கூறலாம்.