Select Page

ஆடு நடனம் ஆடு

பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்

இதோ நடன கலை சிறப்புகள் (நடனம் மற்றும் நாட்டிய நாடகங்கள்)

நடனம் நல்ல செய்திகளை, எல்லோருடைய கவனத்தையும் கவரும் விதமாகவும், எளிதில் தெரிவிக்க ஒரு மார்க்கம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. இரண்டு பக்க ஒரு நல்ல செய்தியை படிக்க பலர் ஆர்வம் காட்டமாட்டார்கள். அதையே ஒரு நடனம் மூலம் வெளிப்படுத்தினால் அதைப் பார்க்க கேட்க புரிந்துக் கொள்ள ஒரு பெரிய கூட்டமே கூடிவிடும். நடனத்திற்கு அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்த சக்தி உள்ளது.

 1. நடனம் நல்ல செய்திகளை, , எல்லோரோருடைய கவனத்தையும் கவரும் விதம் எளிதில் தெரிவிக்க ஒரு மார்கம் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது  , இரண்டு பக்க ஒரு நல்ல செய்தியை படிக்க பலர் ஆர்வம் கட்ட மாட்டார்கள் . . அதேயே ஒரு நடனம் மூலம் வெளிப்படுத்தினால் அதை பார்க்க கேட்க புரிந்து கொள்ள ஒரு பெரிய கூட்டமே கூடிவிடும் . நடனத்திற்கு அத்தகைய அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்த சக்தி உள்ளது. 
 2. மது அடிமைகளை மாற்றும் நுணுக்கங்களை நடனங்கள் மூலம் வெளிப்படுத்துவது அவசியம்.
 3. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நாட்டியமாக நடத்தலாம்.
 4. நாட்டிய நாடகமாகவும் நடத்தலாம். நாட்டியம் + நாடகம் = நாட்டிய நாடகம். உண்மை சம்பவங்களை தத்ரூபமாக நாட்டியம் மூலம் வெளிப்படுத்தும் போது அது நூற்றுக்கு நூறு மக்களைச் சென்று அடைந்துவிடும்.
 5. நடிப்புத் திறமை வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி நடனம் ஆட கற்றுக் கொள்வதே. நடனதிற்கு முகபாவம் மற்றும் பாவனைகள் அவசியம். நடனம் ஆடும் பெண்கள் திரையுலகில் நுழைந்து சிறந்த நடிகைகளாக ஜொலித்ததை நாம் அறிவோம். (பத்மினி, வைஜெயந்தி காலத்தில் இருந்து இதை நாம் பார்த்து வருகின்றோம். நடன கலையில் தேர்ச்சி பெற்று பிறகு நடிப்பில் கலக்கியவர்கள் அவர்கள்.
 6. நடனம் ஆடுபவர்களுக்கு மன இறுக்கம் (Stress) அறவே இருக்காது.
 7. நடனம் ஒரு நல்ல மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி.
 8. உடலில் எடைக்கூடாது.
 9. நடனம் ஒரு நல்ல மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி. அதனால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 10. குழு நடனம் (Group Dance) குழு உணர்வை (Team Spirit) வளர்க்கும்.

இப்படி நடனம் கற்றுக் கொள்வதால் அற்புத அனுகூலங்கள் பல கிடைக்கின்றன.

நடனங்களில் பலவகைகள் உள்ளன.

 • பரதநாட்டியம்
 • குச்சிப்புடி
 • கதகளி
 • மோகினி ஆட்டம்
 • ஒடிசி
 • மணிபுரி

தென்னிந்திய கிராமிய நடனங்கள்

 • தேவராட்டம்
 • தொல்லு குனிதா
 • தண்டரியா
 • கரகம்
 • கும்மி
 • கூட்டியாட்டம்
 • படையணி
 • கோலம் (நடனம்)
 • லவா
 • நிக்கோபார

தமிழக கிராமிய நடனங்கள்

 • மானாட்டம்
 • மயிலாட்டம்
 • ஒயிலாட்டம்
 • கோலாட்டம்
 • கரகாட்டம்
 • கும்மியாட்டம்
 • தெருக்கூத்து
 • பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)
 • பொய்க்கால் குதிரை
 • உடுக்கடிப்பாட்டு
 • புலியாட்டம்

இன்னும் பல

நடனம் நளினம் :

நடனம் என்பது பொதுவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர் பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்வு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும், நடனங்களைக் கருதுவது உண்டு. தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனம் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சீருடற்பயிற்சி (Gymnastics), ஒத்திசை நீச்சல் (synchronized swimming), நடனப் பனிச்சறுக்கு (figure skating) போன்ற விளையாட்டுக்கள் நடனத்தையும் தம்முள் அடக்கியவையாக உள்ளன. கட்டா எனப்படும் தற்காப்புக் கலையும் நடனங்களுடன ஒப்பிடப்படுவது உண்டு. உயிரற்ற பொருட்களின் அசைவுகள் நடனம் என குறிப்பிடப்படுவது இல்லை.

நடனம் என்பது எவற்றை உள்ளடக்கியது என்பது குறித்துச் சமூக, பண்பாட்டு, அழகியல், கலை, நெறிமுறைகள் போன்றவற்றின் எல்லைகளுக்குள்ளேயே விளக்க முடியும். சில நாட்டுப்புற நடனங்கள் பயன்பாட்டுத்தன்மை கொண்ட அசைவுகளை உள்ளடக்கியிருக்க, பாலே, பரத நாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை உட்படுத்தியவையாக உள்ளன. நடனங்கள் எல்லோரும் பங்குக் கொண்டு ஆடுபவையாக, சமூக நடனங்களாக அல்லது பார்வையாளருக்கு நிகழ்த்திக் காட்டுபவையாக இருக்கலாம். சில வேளைகளில் சடங்குகள் தொடர்பிலும், போட்டியாகவும், பாலுணர்வுத் தூண்டலுக்காகவும் கூட நடனங்கள் ஆடப்படுவது உண்டு. நடன அசைவுகளில் எவ்வித பொருட்பதிவும் இல்லாமல் இருக்கக்கூடும். சில மேற்கத்திய நாட்டார் நடன அசைவுகளும், பாலே போன்ற நடனங்களில் உள்ள அசைவுகளும் இத்தகையே. ஆனால், பல்வேறு இந்திய நடனங்களிலும், வேறு பல கீழக்கு தேச நடனங்களிலும், வேறு பல கீழக்கு தேச நடனங்களிலும் அசைவுகள் பொருள் பொதிந்தவையாகவும், குறியீட்டுத் தன்மைகளுடன் கூடியவையாகவும் காணப்படுகின்றன. நடனங்களில் எண்ணங்களும், உணர்வுகளும் பொதிந்திருக்கலாம். அல்லது நடனங்களில் அவை வெளிப்படலாம். அத்துடன், பலவகை நடனங்கள் கதை கூறும் பாங்கிலும் அமைவது உண்டு.

நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து, நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். நடனங்களை உருவாக்கும் கலை நடன அமைப்பு எனப்படுகிறது.

அக்னி ஸ்திரீ உறுப்பினர்களிடையே நடன கலைஞர்கள் நிச்சயம் இருப்பார்கள். முதலில் அவர்களின் இந்த திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி திறமையுள்ளவர்கள் இருந்தால் நல்லது. அதுவே, தங்கள் திறமையை முடக்கி வைத்துள்ள பல பெண்களுக்கு வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அக்னி ஸ்திரீ ஒரு பெண்ணின் திறமை (Talent Bank)  வங்கியாக திகழும்.

தமிழ் திரைப்பட பாடல்களுக்கு உலகமெங்கும் வரவேற்பு

அணைத்து நாட்டினரையும் நடனம் ஆட வைத்த பாடல்கள்

நாக்க ,மூக்க நாக்க ,மூக்க  நடனம் பின்லாந்து நாட்டில் வியக்கும் பின்லாந்து நாட்டு மக்கள்

லுங்கி டான்ஸ் ஆடும் பின்லாந்து நாட்டினர் 

https://www.youtube.com/watch?v=qJYGsLgh9fg Note: Video not available

ballelika பாட்டிற்கு நடனம் ஆடும் ஜப்பானியர்கள் 

தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடும் ஸ்வீடன் நாட்டு பெண்கள் 

தமிழ் பாட்டுக்குக்  காரிலே நடன ஆடும் வெள்ளைக்கார  பெண் நிற பேதமில்லாமல் நடனம் ஆடும் அழகு 

டன்கமாரி பாட்டுக்கு அமெரிக்காவில் சாலையிலேயே நடனம் ஆடும் அமெரிக்கா நாடு பெண்கள் 

டன்கமாரி பாட்டுக்கு நடனம் துபாய் நாட்டில் 

Kalasala kalasala and chikini Chameli Dance

https://www.youtube.com/watch?v=SOK_i_TcIKc&index=50&list=PLpdwKtmIKigZoVGYfZtvekI4Edkdyuj9T Note: Video not available