Select Page

அக்னி ஸ்திரீ பிரதான அமைப்பு

அக்னி ஸ்திரீ பிரதான அமைப்பு

அக்னி ஸ்திரீ © பொருள்: நெருப்புப் பெண்

ஒரு நிமிட அறிமுகம்

பெண்களுக்கான இயக்கமானதால் இந்தியாவில் அனைத்து மொழியிலும் பயன்படுத்தப்படும் அக்னி ஸ்திரீ என்ற பெயரே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயன்படுத்தப்படும். மொழிப் பெயர்ப்பாக அக்னி ஸ்திரீ என்பதன் பொருள் புரியாதவர்களுக்கு விளக்க “நெருப்புப் பெண்” என்று விளக்குவது அவசியம்.

  • ஜாதி, மத, மொழி, பொருளாதார பேதங்களைக் கடந்து பெண்கள் ஒன்று சேர வேண்டும்.
  • ஒரு ஜாதி பெண் இன்னொரு ஜாதி பெண்ணுக்கு விரோதியல்ல.
  • ஒரு மொழி பேசும் பெண் வேறொரு மொழி பேசும் பெண்ணுக்கு சத்ரு அல்ல.
  • ஒரு மதத்தைப் பின்பற்றும் பெண் மற்றொரு மதத்தைப் பின்பற்றும் பெண்ணுக்கு எதிரியல்ல.
  • ஒற்றுமையைவிட அவர்களுக்குச் சிறந்த பாதுகாப்போ அல்லது ஆயுதமோ கிடையாது.
  • ஒன்றுசேர்ந்த காட்டெருமைகள் தங்கள் கன்றைக் கொன்று தின்ன வரும் சிங்கத்தை விரட்டி அடிக்கின்றன. சிங்கத்தை தூக்கி போட்டு முடமாக்குகின்றன. காண்க வீடியோக்கள்.
  • காட்டில் இராப்பகலாக கண்விழித்து தங்கள் இனத்தைச் சிங்கத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும் எருமைகள். தோல்வி சிங்கத்திற்கே

https://www.youtube.com/watch?v=jrsx-iysFkM Note: Video not available

  • எருமையை உண்ண சிங்கம் அதைக் கவ்விப் பிடித்துக் கொள்கிறது. நீண்ட போராட்டம். வெற்றி யாருக்கு?

https://www.youtube.com/watch?v=o0xHeBI5Mxw Note: Video not available

  • சிங்கம் காட்டுக்கு ராஜாதான். ஆனால் எருமைகள் ஒன்று சேர்ந்தால்? சிங்கங்கள் கூட்டம் – எருமைக் கூட்டம். வெற்றி யாருக்கு

https://www.youtube.com/watch?v=W9w0OadktG Note: Video not available

  • எருமைகள் சிங்கம் சண்டை. முடிவு என்ன?

பொழுது விடிந்து பொழுது போனால் நாம் ஜாதி மத மொழி என்று பிளவு பட்டு சண்டை போட்டு ஒருவர்  மண்டையை ஒருவர் உடைத்து கொள்கிறோம் ,

ஒற்றுமையை மிருகங்களிடமிருந்து கற்றுக்  கொள்வோம்.

நீரில் மூழ்கி உயிருக்கப் போராடும் காக்கையைக் காப்பாற்றும் கரடி 

நீரில் மூழ்கும் ஆட்டைக் காப்பாற்றும்  பன்றி

நீரில் மூழ்கும் கோழி குஞ்சைக் காப்பாற்றும்  ஓராங்குட்டான் குரங்கு 

 காட்டில்  முதலையின் கோரப் பிடியில் மாட்டிக்கொள்ளும்  மானைக்  காப்பாற்றும்  அற்புத நீர்யானைகள் 

 காட்டில்   இம்ப்பாலா மானைச்    சிறுத்தையிடமிருந்து காப்பாற்றும் பபூன் குரங்குகள் 

காட்டில் முதலையின் கோரப் பிடியிலிருந்து வரி-குதிரையக்  காப்பாற்றும்  நீர் யானைகள்  

தாய் தாய்தான் . தன் சிங்க குட்டியை ஒரு ஆண் சிங்கத்திடமிருந்து காப்பாற்றும் தாய் சிங்கம் 

 

  • ஆறறிவு இல்லாத படிக்கத் தெரியாத எருமைகளுக்கு ஒற்றுமை தெரிந்துள்ளது.
  • பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எறும்புகள் தங்கள் கால்களைப் பின்னிக்கொண்டு காட்டாற்றைக் கடக்கின்றன. காண்க வீடியோ.
  • ஒரு மானுடைய தாய் உள்ளத்தைப் பாருங்கள் . தன் குட்டியை எப்படி ஒரு நாயிடம் இருந்து காப்பாறுகிறது என்று ?

இதோ ஒரு உத்வேக உரை. படிக்கவும். கூட்டங்களில் கோஷமாக முழங்குக.

ஓ பெண்ணே! ஓ பெண்களே !!

ஓ பெண்ணே!

ஒரு கல் தடுக்கி நீ விழுந்துவிடலாம்.

ஓ பெண்களே !!

உங்களால் ஒரு மலையையே தகர்க்க முடியும்.

ஓ பெண்ணே!

ஆற்று வெள்ளம் உன்னை அடித்துச் செல்லலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் ஒரு ஆற்றின் திசையையே திருப்ப முடியும்.

ஓ பெண்ணே!

ஒரு காமூகனால் உனக்கு இன்னல் வரலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் காமூகனக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தர முடியும்.

ஓ பெண்ணே!

ஒரு கொடியவனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் அனைத்து கொடியவர்களிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

ஓ பெண்ணே!

நீ தனியாக பாடினால் மற்றவர்கள் அதை ரசிக்காமல் போலாம்.

ஓ பெண்களே!!

நீங்கள் சேர்ந்து இசைத்தால் அனைவரும் கரவொலி எழுப்புவார்கள்.

உதாரணம் தேசிய கீதம்.

விழிப்பூட்டல்

இன்று மக்களிடையே பல முக்கிய விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு சுத்தமாக கிடையாது. விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டாலே போதும். பல பிரச்சனைகள் உருவாகாது. இதன் பின்னணியில் முக்கியத் தகவல்கள் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளப்படுகின்றன. நிஜ சம்பவங்களும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை நான்கு வகையாக பிரிக்கலாம்.

பெண்களுக்கு கொடுமை இழைக்கும் ஆண்கள்: மிக அதிகமாக நடைப் பெறுவது பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் கொடுமைகளே.

பெண்களுக்கு கொடுமை இழைக்கும் பெண்கள்: வீட்டிலேயே சுமூக உறவு இல்லாமல் கொடுமை செய்யும் பெண்கள் கணக்கிலடங்கா (உதாரணம் மாமியார் மருமகள் சண்டைகள்)

ஆண்களுக்கு கொடுமை இழைக்கும் பெண்கள்: (இது குறைவு. ஆனால் நாளுக்கு நாள் இந்த வகை அநீதிகள் அதிகரித்து வருவது கவலையைத் தருகிறது)

குற்றங்கள் புரியும் பெண்கள்:  குற்றங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். சிறிய குற்றங்களிலிருந்து மிக பெரிய குற்றம் புரியும் பெண்கள் வரை ஏராளனமானோர் இருக்கின்றார்கள். பெண்களையே ஏமாற்றும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். அக்னி ஸ்திரீ இயக்கத்தின் இலட்சியம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே. “கொற்றவன் செய்தாலும் குற்றம் குற்றமே” என்று கூறிய நக்கீரன் பிறந்த நாடு இது. பெண்கள் இயக்கம் என்பதால் பெண்கள் குற்றம் புரியலாம் என்று பொருள் அல்ல. இந்த நான்கு வகை அநீதிகள் பற்றி பெண்களிடையே விழிப்புணர்வு உண்டாக்குவது எப்படி?

நான்கு கெட்டப் பழக்கங்கள்

இன்று ஆண்களை மது மட்டும் பிடித்துக் கொண்டு அவர்களைச் சீரழிக்கவில்லை. மேலும் நான்கு கெட்டப்பழக்கங்கள் அவர்களைப் பிடித்த பேய்களாகத் திகழ்கின்றன. அவைகள் முறையே,

  • புகைப்பழக்கம்
  • புகையிலை மெல்லும் பழக்கம்
  • போதை மருந்து பழக்கம்
  • சூதாட்டப் பழக்கம்

இவை நான்கிலிலிருந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.

விடை : அக்னி ஸ்திரீ

அக்னி ஸ்திரீ

  • ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல்,
  • நேர்மையற்ற பெண்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்,
  • நெறியற்ற பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கும் தீர்வு காண்பார்கள்.

போதுமா பெண்களின் ஒற்றுமையின் அவசியம்

தனிமரம் தோப்பாகாது. “அக்னி ஸ்திரீ” தன் சமூதாய சீர்திருத்தம் இந்த பணியில் தனக்கு தோள் கொடுக்க ஒன்பது இணை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும். இந்த ஒன்பது அமைப்புகளுமே போட்டி போட்டு சேவை செய்யும். அந்த ஒன்பது இணை அமைப்புகளின் பெயர்கள் மற்றும் பணிகள் முறையே