Select Page

அக்னி ஸ்திரீ இலட்சியங்கள்

இலட்சியங்கள்

  • இந்தியா சுதந்திர நாடு என்ற கருத்துக்கு எந்த மாற்று கருத்தும்  இருக்க முடியாது.
  • ஆனால்.. ஆனால்.. கீழ் கண்ட பிரிவினர்களைச் சுதந்திரம் இன்னும் சென்று அடையவில்லை என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது   
  • உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று கூறும் நாம் இந்த உலகிலேயே பெரிய ஜனநாயக நாட்டில் வாழும் கீழ்கண்ட பிரிவினரின் நிலை என்ன என்று பார்க்க வேண்டும் .                        
  • மன சாட்சியைத்  தொட்டு பார்க்க வேண்டும் .

பொது இலக்கு 

  1. பெண்கள் விடுதலை 
  2. குழந்தை தொழிலாளர் விடுதலை 
  3. உணவு தரும் விவசாயிகள் விடுதலை 
  4. உணவு தரும் மீனவர்கள் விடுதலை 
  5. உழைக்கும் தொழிலாளர் விடுதலை 
  6. இந்த நாட்டின் முன் தோன்றிய குடிமக்களாக இருந்தும் ஜாதி கொடுமைக்குள்ளாக்கப் படும் தலித் விடுதலை 
  7. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதலை 

பெண்கள் சுதந்திரத்திலேயே மற்ற பிரிவினரின் சுதந்திரமும் உள்ளடங்கியுள்ளது . 

அதை முதலில் பெற்றுவிட்டால் அவர்களின் சரி பாதியான மற்ற ஆறு  பிரிவினர்களும்  தானாக  சுதந்திரம் பெறுவார்கள்.

இலட்சியங்கள்

  1. பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்பு 
  2. பெண்கள் வளர்ச்சி 
  3. குடும்ப முன்னேற்றம் 

உடனடி செயல் திட்டங்கள் 

  1. மூன்று இலட்சியங்களையும் நிறைவேற்றுவது
  2. மது இல்லாத வீடு 
  3. தீயப்  பழக்கங்கள்  இல்லாத குடும்ப உறுப்பினர்கள்  ஆகிய உன்னத இளர்ச்சியங்களை அடைய பாடுபடுவது 

நான்கு கெட்டப் பழக்கங்கள்

இன்று ஏராளமான ஆண்களை மது மட்டும் சீரழிக்கவில்லை. மேலும் நான்கு கெட்டப்பழக்கங்கள் எண்ணற்ற  ஆண்களைப் பிடித்த பேய்களாகத் திகழ்கின்றன. அவைகள் முறையே,

  • புகைப்பழக்கம்
  • புகையிலை மெல்லும் பழக்கம்
  • போதை மருந்து பழக்கம்
  • சூதாட்டப் பழக்கம்

இவை நான்கிலிலிருந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டியது  அக்னி ஸ்திரீ அமைப்பின் முக்கிய கடமையாகும்.

ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல்,

  1. நேர்மையற்ற பெண்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்,
  2. நெறியற்ற பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கும் தீர்வு காண்பார்கள்.

முக்கியமாக மது அருந்தும் பழக்கம், புகையிலை மெல்லும் பழக்கம். போதை மருந்து பழக்கம் மற்றும் சூதாட்டப் பழக்கம் ஆகியவை பெண்களிடம் குறிப்பாக படித்த நவநாகரிக பெண்களிடம் வேகமாக பரவி வருகின்றது. இவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தும் பணி அக்னி ஸ்திரீ அமைப்பு பெண்களுக்கு உண்டு. மிகவும் அவசியமும் கூட.

“மது இல்லாத வீடு” என்ற புனித வேள்வியை முன்நின்று நடத்திக் காட்டி வெற்றி கனிகளைப் பறிப்பவர்கள். “தீ” என்று சுருக்கமாக அழைக்கப்படும் “அக்னி ஸ்திரீ” இயக்கம். அக்னி ஸ்திரீ பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பெண்களே நடத்தும் இயக்கம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் ஆகியவையே அக்னி ஸ்திரீ அமைப்பின் இலக்கு மற்றும் இலட்சியம்.

காண்க இணையதளம் www.agnistree.org