Select Page

எங்களுக்கு நாங்களே & பல்கலை குடும்பம்

எங்களுக்கு நாங்களே

மதுவைவிட ஆசை இருக்கும். ஆனால் விட முடியாது. விட முடியாததற்குக் ஒரு காரணம் நண்பர்கள். விட முடிவு செய்தவரையும் அதை விட அனுமதிக்கமாட்டார்கள். சகவாச தோஷமே காரணம். அதே நேரத்தில் விட வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் நண்பர்கள் அவர்களைவிட அனுமதிக்கமாட்டார்கள்.

இப்படி சிதறி கிடக்கும் ஒருமித்த ஆர்வம் உடையவர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்காக எங்களுக்கு நாங்களே என்ற ஒரு குழுவினை உருவாக்கி அவர்கள் மதுவைவிட அக்னீ ஸ்தீரீ அமைப்பும் மற்ற ஒன்பது சகோதர அமைப்புகளும் வழிகாட்டும். இங்கு பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ள ஏழாம் அறிவு டெக்னிக்குகளை குழுவாக பயன்படுத்தினால் மதுவிலிருந்து உறுதியாக வெளியே வருவார்கள்.

பல்கலைக்குடும்பம்

ஒரு மது அடிமையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் பலர் பல்வேறு திறமைகள் மற்றும் பண்பாடு உடையவர்களாக இருப்பார்கள்.

மது அடிமையின் மீது உள்ள அக்கறை காரணமாக அவரை மீட்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தயாராக இருப்பார்கள். அவர்களை ஒன்றுசேர்த்து இப்பணியில் ஈடுபடுத்தும் ஒரு ஏற்பாடே பல்கலைக்குடும்பம்.

பல்கலைக்குடும்பத்தில் கீழ்க்கண்டவர்களை அன்போடு அழைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • குடும்ப உறுப்பினர்கள்
  • குடும்ப உறுப்பினர்களுடைய உடன் பிறந்தவர்கள்
  • வீட்டு மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரின் குடும்பத்தினர் (extended family)
  • நெருங்கிய உறவினர்கள் &
  • குடும்ப உறவினர்கள்

இவர்களில் பலர் பல திறமைகளை உடையவர்களாக இருப்பார்கள். பலர் பல திறமைகளை உடையவர்களாக இருப்பார்கள். பல அறிவைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தாலே போதும். பிறகு நடப்பது அனைத்துமே அதிசயப்பட வைக்கும்.